எது பெருமை... ? எது சிறுமை... ?
இதற்கான விளக்கத்தை... ஒரு சிறு அனுபவக் கதை மூலம், விளக்கினார்... எங்கள் குருநாதர்...
'ஒரு பயிலவான்... நிறைந்த சபை நடுவே... தனது எடையின் அளவை விட 6 மடங்கு எடையைத் தலைக்கு மேல் தூக்கி நிறுத்த... சபையே எழுந்து கைத் தட்டி ஆரவாரம் செய்தது.
மாலைகளும்... பரிசுகளும்... பாராட்டுகளும்... பட்டயமும் கிடைத்தன. அந்த மகிழ்ச்சியுடன், வீட்டுக்குத் திரும்பும் போது... வீட்டுக்குத் தேவையான மளிகை மற்றும் காய்கறிகளை இரண்டு கைகளிலும்... இரண்டு பைகள் நிறைய வாங்கிச் சுமந்து கொண்டு... தள்ளாடித் தள்ளாடி நடந்து வந்து கொண்டிருந்தான்.
வாசலில் நின்று பார்த்துக் கொண்டிருந்த மனைவி... ஏதும் பாரதது போல தலையைத் திருப்பிக் கொண்டு வீட்டிற்கு உள்ளே சென்றாள். அவமானத்தால் மனமுடைந்த நிலையில்... உள்ளே சென்று இரண்டு பைகளையும் இறக்கி வைத்தான்.
தன்னை விட 6 மடங்கு எடையுள்ள பாரத்தை... சபைக்கு முன்... தலைக்கு மேலே தூக்க முடிந்தவனுக்கு, தன்னை விட 6 மடங்கு எடை கொண்ட வீட்டுக்கு உண்டான பொருள்கள் அடங்கிய பைகளை... பூமியின் ஈர்ப்பு விசைக்கு ஈடு கொடுத்துத் தூக்க முடியாத நிலை ஏற்பட்டது.
முந்தையது சபை... பிந்தையது குடும்பம்.
முந்தையதில் பாராட்டு... பிந்தையதில்... அவமானம்.
முந்தையது பெருமை... பிந்தையது கடமை.'
குருநாதரின் திருவடிகளுக்குச் சமர்ப்பணம்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment