திருமணத்திற்குச் சென்றிருந்தவன்... திருமணம் முடிந்த பிறகு, முதல் ஆளாக பந்தி பறிமாறும் கூடத்திற்குச் சென்றான். பந்தி பறிமாறுபவரிடம், எங்கிருந்து பந்தி ஆரம்பிக்கிறது என்பதை உறுதி செய்து கொண்டு... உள் வாசலுக்கு அருகிலிருந்து ஆரம்பிக்கும் பந்தியில்... முதலாவதாக அமர்ந்தான்.
அவனைத் தொடர்ந்து, ஒவ்வொருவராக வந்து அமர.. கூடம் நிறைந்து விட்டது. விரித்த இலைகளில் பரிமாறுவதுதான் பாக்கி. பறிமாற ஆரம்பித்தவர்கள்... கூடத்தின் வெளி வாசல் பகுதியிலிருந்து பறிமாற ஆரம்பித்தார்கள். பசியோடு இருந்தவனுக்கு... இது முதல் ஏமாற்றமாக இருந்தது... காரணம் இவன்தான் பந்தியின் கடைசி ஆளாக அமைந்து போனதால்.
எந்த ஒரு பதார்த்தமாக இருந்தாலும்... இவனது இலைக்கு வரும் போது... அது தனக்குக் கிடைக்குமா... கிடைக்காதா... என்ற எதிர்பார்ப்பிலேயே உணவருந்திக் கொண்டிருந்தான். உள் வாசலுக்கு அருகிலேயே இருந்ததால்... அடுத்த பந்திக்குக் காத்திருப்பவர்கள்... இவன் அமர்ந்திருக்கும் பந்திதான் முதல் பந்தி என்று நினைத்துக் கொண்டு... இவனுக்கு அருகிலேயே காத்திருந்தது... இவனுக்கும் பெரும் உறுத்தலாக வேறு இருந்தது.
வேக வேகமாக உணவருந்திவிட்டு... பாயஸத்திற்காகக் காத்திருந்தான். பாயஸம் பறிமாறுபவர், இவனது இலைக்கு வரும்போது... பாயஸம் தீர்ந்து விடவே, 'சற்று பொறுத்துக் கொள்ளுங்கள். பாயஸம் நிறைத்துக் கொண்டு வருகிறேன்.' எனக் கூறி விட்டு... சமையல் கூடம் நோக்கிச் சென்றார். சென்றவர், பாயஸ வாளியை இன்னொருவரிடம் கொடுத்து... இவனிருக்கும் திசையைக் காட்டி... அவரை அனுப்பி வைத்தார்.
வந்தவர்... இவனது இலைக்கு முன்னால் இருப்பவரிடமிருந்து பரிமாற ஆரம்பித்தார். இதுவரை இவன் காத்திருந்த பொறுமை எல்லை மீறி.. கோபமாக எழுந்தது. இவனது கோபத்தை யாரிடம்தான் காட்டுவது... ? திருமணத்திற்கு அழைத்தவர் மீதா... ? பந்தியில் அமர வைத்தவர் மீதா... ? இறுதியிலிருந்து பறிமாறியவர் மீதா... ? எனவே, அமைதியாக, இலையை மூடிவிட்டு... எழுந்து... கைகழுவும் இடத்திற்குச் சென்றான்.
கையை கழுவி விட்டு... வெளியேறும் போது... வாசலுக்கு முன்.. ஒரு பெரியவர், டம்ளர் நிறைய பாயாஸத்தை நீட்டிக் கொண்டு நின்றார். சற்று ஆச்சரியத்துடன், 'நான் பாயாஸம் கிடைக்காத கோபத்தால் வெளியேறுகிறேன்... என்பதை அறிந்து கொண்டுதான்... எனக்கு பாயஸம் தருகிறீர்களா... ?' எனக் கேட்டான். அதற்கு அந்தப் பெரியவர், 'இல்லையப்பா... உனக்குக் கொடுக்க வேண்டும் என்று தோன்றியது. அதனால் கொண்டு வந்தேன் என்றார்... !'.
ஒன்றும் பேசாமல்... பாயஸத்தை வாங்கி குடித்து முடித்ததுத்... திரும்பிய போது... அந்தப் பெரியவரைக் கூட்டத்தில் காணமுடியவில்லை. ஆம், கிடைக்க வேண்டியது, கிடைத்தே தீரும்.
குருநாதரின் திருவடிகளுக்குச் சமர்ப்பணம்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment