நியமம் என்ற ஒழுக்க நியதிகளின் படி.. அரச வம்சங்களை 'சூரிய - சந்திர குலங்களாகவும்'... அவர்களின் குலதெய்வங்களாக 'மஹாவிஷ்ணு - சர்வேஸ்வரனையும்'... குடி மக்களை 'சிவ - விஷ்ணு குலங்களாகவும்'... அந்த குலங்களுக்கு ஏற்ப... 'குலதெய்வங்களையும்' வரையறுத்தனர்.
'சிவ குலத்தைச்' சேர்ந்தவர்களையும், 'விஷ்ணு குலத்தைச்' சேர்ந்தர்களையும், 'ஒரு குலமாகவும்'... அந்த குலத்தில் இருப்பவர்களை, அவர்களின் பழக்க வழங்களுக்கு ஏற்ப 'ஒரு குடியாகவும்'... அந்தக் குடியில் இருப்பவர்கள ஒரு 'குடும்ப அமைவாகவும்' வகைப் படுத்தினர். இந்த வழியாக 'குலம் - குடி - குடும்பம்'... என்ற வகையில் சமுதாயம் வழி நடத்தப்பட்டது.
இவ்வாறாக, 'சிவ குலத்தில்' இருப்பவர்களின் 'குடிப் பிறப்புக் கேற்ப'... சிவனின் அம்சமாக ஒரு குலதெய்வத்தையும்... அந்தக் குடிப் பிறப்பில் இருக்கும் அனைவரையும் ஒரே குடியில் இருக்கும் 'சகோதர உறவுகளாக'... ஒரே குடும்பமாக வாழத் தலைப்பட்டனர்.
அது போல. 'விஷ்ணு குலத்தில்' இருப்பவர்களின் 'குடிப் பிறப்பிற் கேற்ப'... பகவான் விஷ்ணுவின் அம்சமான குலதெய்வத்தை அந்தக் குடிக்கும்... அந்தக் குடியில் இருக்கும் அனைவரையும் ஒரு சகோதர் உறவுகளாக... ஒரே குடும்பமாக வாழத் தலைப் பட்டனர்.
உதாரணமாக, 'சிவ குலத்தில்' இருக்கும், ஒரு குடியினருக்கு, 'சிவபெருமானாரின் அம்சமாக'... 'நல்லாண்டவர் சுவாமி' குலதெய்வமாகிறார். 'தாயார் பராசக்தி'... அந்தக் குலத்தினருக்கான பெண் தெய்வமாக... 'சப்த கன்னிமாராக' உருவமேற்றுக் கொள்கிறார். 'பகவான் விஷு பகவான்' அந்தக் குடிக்கு காவல் தெய்வமாக. சந்நியாசி' என்ற 'கருப்பு சுவாமியாக'... காவல் தெய்வமாகிறார்.
அதே போல, 'விஷ்ணு குலத்தில்' இருக்கும், ஒரு குடியினருக்கு, 'பிரசன்ன வெங்கடாஜலபதி' குலதெய்வமாகவும்... கருப்பண்ணார் சுவாமி, காவல் தெய்வமாகவும் அமைகிறார்.
இவ்வாறு, அமைந்திருக்கும் இரு குலங்களுக்கிடையேதான், 'கொள்வினை, கொடுப்பினை' என்ற உறவுப் பாலங்கள் அமைக்கப்பட்டன. இந்த உறவுகள் அமையும் போது, ஒரெ குலத்தில் அமையாமலும், ஒரே குடியில் அமையாமலும், ஒரே குடும்ப உறவில் அமையாமலும்... இருக்கும் படியாக விதிகள் வகுக்கப்பட்டன.
இந்த விதிகளுக்குட்பட்டு, இந்த சமூக அமைப்பு... ஒரு ஒழுங்கான பாதையில் பயணிக்கும் படியாக அமைக்கப் பட்டு...அதை, இந்த சமூகம் இன்றும் தவாறாமல் கடைபிடித்து வருகிறது.
அந்த விதிகளையும்... அதன் கடைப்பிடித்தல் பற்றியும்... தொடர்ந்து அறிந்து கொள்வோம்... இறவனின் அருளோடு...
ஸாய்ராம்.

No comments:
Post a Comment