அறிவுக்கும்... புத்திக்கும்... ஞானத்திற்கும்... மூலமானவராக, ஜோதிடக் கலையில் 'புத பகவான்' அருள் செய்கிறார்.
எல்லையற்ற... என்றும் மாறாத... ஞானப் பூரணமான 'ஆத்மாவை' தனது மூலமாகக் கொண்ட... ஜீவன், தனது கர்ம வினைக் கட்டுக்களால் கட்டுண்டு... புறத்தே ஞானத்தைத் தேடும் ஜீவனாக வாழ்கிறது. அந்தத் தேடுதலையும்... அது அடையும் ஞானத்தின் அனுபவங்களையும்... அந்த ஜீவனின் ஜாதகத்தில் அமையும் 'புத பகவான்'... தனது நிலைகளின் மூலமாக வெளிப்படுத்துகிறார்.
அறிந்து கொள்ளும் அறிவு என்பது வேறு. அறிந்து கொண்டவற்றைத் தக்க சமயத்தில் பயன்படுத்துவது என்பது வேறு. முந்தையது அறிவாகிறது... பிந்தையது புத்திசாலித்தனமாகிறது.
வடையை எடுத்துக் கொள்வதற்கான அறிவு ஒருபுறம்... அதைக் கால்களுக்கு இடையே காப்பாற்றி வைத்துக் கொள்ளத் தெரியாத புத்திசாலித்தனம் மறுபுறம்.
வடையை எடுத்துக் கொள்ளாத அறிவு ஒரு புறம்... அதை புத்திசாலித்தனமாகக் கவர்வது மறுபுறம். இதைத்தான்... காகம்-நரியின் கதை உணர்த்துகிறது.
'சூரிய பகவானுடன்' இணைந்த 'புத பகவான்' அறிவாளியாக... நிபுணணாக ஒருவரை மாற்றினாலும்... எந்த அறிவையும், நுட்பத்தோடி 'கிரகித்துக் கொள்ளும்'... 'சந்திர பகவானின்' துணை... அந்த 'புத பகவானுக்குத்' தேவைப்படுகிறது.
'சந்திர பகவான்' தான் கிரகித்துக் கொள்ளும் அறிவைத் தக்க சமயத்தில் 'புத பகவானுக்கு' உணர்த்தி... புத்திசாலித்தனமாக செயல்படுவதை உறுதி செய்வதால்... ஒருவரின் ஜாதகத்தில்... புத - சந்திர பகவான்களின் இணைவு' ஜாதகரை புத்திசாலி என்று உணர்த்துகிறது.
தொடர்ந்து, ஞானத்தின் வழியேயான 'புத பகவானின்' பயணத்தில் பங்கு கொள்வோம்... இறையருளோடு...
ஸாய்ராம்.

No comments:
Post a Comment