அறிவு... புத்தி... ஞானம்... என்ற இந்த மூன்று நிலைகளுக்கும்... அடிப்படையாக இருந்து அருளும் கிரகமாக 'புத பகவான்' அமைகிறார்.
ஒவ்வொரு 'ஜீவனுக்கும்', மூலமாக... சாட்சியாக... இருந்து அருள் செய்யும் பரம்பொருளான 'ஆத்மா', 'ஞானத்தின் பூரண வடிவமாக' இருக்கிறது. ஆனால், தற்போதைய பிறவிக்கான, தனது 'கர்ம வினைகளைச்' சுமந்து வந்திருக்கும் ஜீவனோ... தனக்குள் இருந்து அருள் செய்யும் பூரணத்தை அறியாமல்... தனது விதி வசத்தால்... தனக்கான பூரணத்துவத்தை வெளியிலேயே தேடுகிறது.
வெளியில் தேடும் போது... இந்தப் பிறவிக்குண்டான 'ஞானம்' முதலில் 'அறிவின்' ரூபத்தை எடுக்கிறது. அது, 'இந்தப் பிறவிக்கு உண்டான அறிவாக' அமைகிறது.
இந்த அறிவைக் குறிக்கும் கிரகமாக... ஜோதிடக் கலையில், 'புத பகவான்' அமைகிறார். அவரின் அமைவு ஸ்திரமாகவும்... சுப நிலையிலும்... நல்ல ஆதிபத்தியத்தைப் பெற்றும்... அமையும் போது... அவருக்கான இந்தப் பிறவியின் அறிவுக் கருவூலம் திறக்கப்படுகிறது.
அவருடன், பிரபஞ்ச நாயகனான 'சூரிய பகவானின்' இணைவு ஏற்படும் போது... இவ்வுலகில் ஒரு சிறந்த அறிவாளியாக... அங்கீகாரம் பெற்று... அவரால் வலம் வர முடிகிறது.
அதனால்தான், 'சூரிய - புத பகவான்களின் இணைவை'... 'நிபுண யோகம்' என்று குறிப்பிடுகிறோம்.
தொடர்ந்து, புத்திசாலித்தனத்தையும்... ஞானத்தையும் ஆய்வோம்... இறைவனின் அருளோடு...
ஸாய்ராம்.

No comments:
Post a Comment