திருமணப் பொருத்தத்தில்... ஜாதகத்தை முழுமையாக ஆய்வு செய்வதென்பது... இன்றைய காலத்தின் கட்டாயமாகிறது.
ஏனெனில் முந்தைய காலத்தைப் போல, நெருங்கிய உறவிலும்... உறவிலும்... நன்கறிந்த தத்தமது இனத்திலும் நடந்த திருமணங்கள்... காலத்தின் சூழலால்... ஒருவருக்கு ஒருவர் மிகவும் தொலைவில் வாழக்குடிய சூழல் உருவாகியுள்ளதால்... வரன்களின் ஜாதகத்தைத் தனித்தனியாக ஆய்வு செய்வது அவசியமாகிறது.
மேலும், 'நெருங்கிய உறவாக' இருந்தாலும், 'உறவாக' இருந்தாலும், 'இனமாக' இருந்தாலும்... வரன்களுக்கு இடையேயான 'வாழ்க்கைச் சூழல்கள்'... வேறு, வேறாக இருப்பதற்கான வய்ப்புகளும் உள்ளது. உதாரணமாக...
~ தொழில் முறைக் கல்விகளைக் கற்று, அதன் வழியேயான ஜீவனத்தையும், வாழ்க்கையையும் அனுபவிக்கும் மாந்தர்கள் ஒரு புறம்...
~ கணிணி என்ற ஊடகத்துறையில் கல்வியையும், வேலை வாய்ப்பையும் பெற்று வசதியான வாழ்வுக்குப் பழகிப் போன மாந்தர்கள் ஒரு புறம்...
~ அரசு உத்தியோகம் என காலம் காலமாக... பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கும் மாந்தர்கள் ஒரு புறம்...
~ தொழில், வியாபாரம் என... வியாபாரச் சூழலில் வாழும் மாந்தர்கள் ஒரு புறம்...
~ தனியார் துறையில் பணியாற்றும் எண்ணற்ற மாந்தர்களின் சூழல் ஒருபுறம்...
~ சிறு தொழில்களில் ஈட்பட்டு, தமது வாழ்வின் சூழல்களை அமைத்துக் கொண்ட மாந்தர்கள் ஒரு புறம்...
~ கூலித் தொழில்களில் ஈடுபட்டு... தமது வாழ்வை அமைத்துக் கொண்டு வாழும் எண்ணற்ற மாந்தர்கள் ஒருபுறம்...
~ நிரந்தர வாழ்வு அமையாத சூழலில் தத்தளிக்கும் மாந்தர்கள் ஒருபுறம்...
... என எண்ணற்ற சூழல்கள் நிலவுகிறது. இந்த சூழல்களுக்குள் இருப்பவர்கள்... தமது சூழல்களுக்குள் உறவை ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு இல்லாத போது... மாற்றுச் சூழல்களுக்குள் உறவை ஏற்படுத்திக் கொள்ளும் கட்டாயம் ஏற்படுகிறது. இத்தகைய சூழலின் மாற்றங்கள்... வரன்களின் வாழ்வில் இடர்களை ஏற்படுத்தா வண்ணம்... பொருத்தங்கள் பார்க்கப் பட வேண்டும்.
அறிமுகமான உறவுகளுக்கிடையே பொருத்தங்கள் பார்க்கும் போது... 'நட்சத்திர ரீதியான பொருத்த முறையே' போதுமானது. ஏனெனில், வரன்களுக்கு இடையே ஒருவருக்கு ஒருவர் அறிந்திருக்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். ஆனால், ஒருவரை ஒருவர் அறிமுகமில்லாத போது... இந்த 'நட்சத்திரப் பொருத்தம்' ஒரு பொதுவான பொருத்த முறைக்குள் அடங்கிப் போவதை மறுக்க முடியாது.
ஏனெனில், பெரும்பாலும் ஒரே நட்சத்திரத்தில் எண்ணற்ற மாந்தர்கள் இருப்பதும்... ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு பாதங்களாக பிரிந்திருப்பதும்... நட்சத்திரங்கள் பெரும்பாலும், இரண்டு இராசி வீடுகளை பகிர்ந்து கொள்வதும்... ஒரு 'பொதுவான பொருத்த முறைகளுக்குள்' அடங்கிவிட வாய்ப்புகளை உருவாக்கி விடுகிறது.
இந்த நிலையில்தான்... ஜாதகத்தின் துணை மிகவும் அவசியமானதாகிறது. அதைத் தொடர்ந்து ஆய்வோம்... இறைவனின் அருளோடு...
ஸாய்ராம்.

No comments:
Post a Comment