வர்க்கோத்துமம் என்பது ஜோதிடக் கலையில்... பலன்களை அறிந்து கொள்ளும் போது... வெகுவாக பயன்படுத்தும் ஒரு பதமாக அமைகிறது.
இராசியில் ஒரு வீட்டில் அமரும் கிரகம்... நவாம்ஸத்திலும் அதே வீட்டில் அமரும் போது... அந்தக் குறிப்பிட்டக் கிரகம் 'வர்க்கோத்தும நிலையை' அடைந்திருக்கிறது என்று கூறலாம்.
உதாரணமாக... இராசிச் சக்கரத்தில், மேஷ இராசி யில், அசுவினி நட்சத்திரத்தின் 1 ஆம் பாதத்தில், செவ்வாய் பகவான் அமர்கிறார். அந்த 'செவ்வாய் பகவான்' நவாம்ஸச் சக்கரத்திலும், அதே மேஷ இராசியில்தான் அமர்வார். ஆதலால், இந்த ஜாதகருக்கு... 'செவ்வாய் பகவான் வர்க்கோத்துமம் பெற்று அமைந்திருக்கிறார் எனக் கொள்ளலாம். இந்த வர்க்கோத்தும நிலையில் 'செவ்வாய் பகவான்' அதீத பலத்தைப் பெற்றவறாகக் கருதப்படுவார்.
இதற்கான பலனை ஜாதகருக்கு அளிக்கும் போது... வர்க்கோத்துமம் பெற்று வலுத்துள்ள கிரகம்... அது தான் பெற்றுள்ள ஆதிபத்தியத்தின் அடிப்படையிலேயே... ஜாதகரின் 'கர்ம வினைகளின் விளைவுகளுக்கு' ஏற்ப பலன்களை அளிக்கிறது.
'சுக்கிர பகவானின்' காரகத்துவமாக... 'உலக சுகங்களை அள்ளித் தருபவனாக'... அவர் வருணிக்கப்படுகிறார். அவர் வர்க்கோத்துமம் என்ற அதீத பலத்தைப் பெறும் போது, ஆதிபத்திய ரீதியாக எவ்வாறு தனது பலன்களை வெளிப்படுத்துகிறார் என்பதை ஆய்வோம்.
உதாரணம் 1 :
மகர லக்ன ஜாதகருக்கு, 'சுக்கிர பகவான்' பூர்வ புண்ணியாதிபதியாகவும் (5 ஆம் பாவம்)... ஜீவானாதிபதியாகவும் (10 ஆம் பாவம்) ஆதிபத்தியம் பெறுகிறார். ஆகவே, இந்த லக்னத்தில் பிறந்த ஜாதகருக்கு, அவர் 'நிறைந்த புண்ணிய பலன்களை' அளிப்பவராகவும்... மிகவும் ரசனை மிக்க ஆடம்பரமான தொழில் துறைகளில் செல்வம் ஈட்டும் பாக்கிய முடையவராகவும்... அமைகிறார்.
ஆனால், அவர் இந்த ஜாதகத்தில் 'பாக்கிய மற்றும் தர்ம ஸ்தானமான' 9 ஆம் பாவத்தில்... கன்னி இராசியில்...சித்திரை நட்சத்திரத்தின் 2 ஆம் பாதத்தில் அமைகிறார். நவாம்ஸத்திலும் அதே இராசி வீடான கன்னியில் அமர்ந்து வர்க்கோத்துமம் என்ற நிலையைப் பெறுகிறார்.
இந்த அமைவு வெளிப்படுத்தும் பலன்களாக... கன்னி இராசியில் 'சுக்கிர பகவான்' பலமற்று நீச நிலையில் சஞ்சரிப்பதால்... அவரின் பலம் இயல்பாகவே குறைந்து விடுகிறது. ஆதலால்... அவர் தனது பூர்வத்தின் புண்ணிய பலன்களை இந்த 'சுக்கிர பகவானின்' தசா... புத்தி... அந்தரக் காலங்களில் அனுபவிக்க முடியாதவாராகிறார் என்பதே பொது விதி.
ஆனால், சுக்கிர பகவானின் வர்க்கோத்தும நிலையால்... அவர் பலம் பெற்று... பூர்வ புண்ணியத்தால் பெற முடியாத பாக்கியங்கள் அனைத்தையும்... இந்தப் பிறவியில் அவருக்கு அமையும் சூழல்களால் பெற்று... அவரின் தசா... புத்தி... அந்தரக் காலங்களில் அனுபவிப்பார்.
உதாரணம் 2 :
மீன லகன ஜாதகருக்கு... 'சுக்கிர பகவான்' தைர்ய, பூமி, சகோதர பாவங்களுக்கும் (3 ஆம் பாவம்)... ஆயுள் மற்றும் அட்டமம் என்ற (6 ஆம் பாவம்) ஸ்தானங்களுக்கும் ஆதிபத்தியம் பெறுகிறார். ஆகவே, இந்த லக்னத்தில் பிறந்த ஜாதகருக்கு... சுக்கிர பகவான் அவரின் சுக வாழ்வுக்கு மிகவும் பங்கத்தை அளிப்பவராக... தாரித்திரியத்தில் உழல வைப்பவராக அமைகிறார்.
அவர் இந்த ஜாதகத்தில்... களத்திரம் மற்றும் துணைவரின் ஸ்தானமான 7 ஆம் பாவமான... கன்னி இராசியில்... சித்திரை நட்சத்திரத்தின் 2 ஆம் பாதத்தில் அமர்வதால்... நவாம்ஸத்திலும் அதே விட்டில் அமர்ந்து வர்க்கோத்துமம் அடைகிறார்.
இந்த அமைவு உணர்த்தும் பலன்களாக நீசம் பெற்ற 'சுக்கிர பகவான்' 7 அம் பாவத்தில் அமர்ந்ததின் விளைவாக பங்குதாரர்கள்... நட்பு வட்டாரம்... துணைவர்கள்... என, அனைவரிடம் இருந்து எந்த ஒத்துழைப்பையும் பெற முடியாத நிலைக்குத் தள்ளப் படுவார். அதே நேரத்தில் வர்க்கோத்துமம் பெற்று வலுத்ததால்... பங்குதாரர்கள்... நட்பு... துணைவர் என அனைத்து நிலைகளிலும் அவர்களிடமிருந்து இவருக்கு பெரும் எதிர்ப்பும்... பாதகங்களும் வந்து சேரும் என்பதும்... இந்த தொடர்புகளிலெல்லாம்... அவர் மிகவும் எச்சரிக்கையாக இருந்து... சுக்கிர பகவானின் தசா... புத்தி... அந்தரக் காலங்களைக் கடக்க வேண்டியும் இருக்கும்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment