அணுகுமுறை... என்பது, எந்த ஒரு கலையையும் கற்றுக் கொண்ட பின், அந்தக் கலையின் மூலமாக... அந்தக் கலையால் விளையும் பயன்களை... பயனாளர்கள் அனுபவிக்கும்படியாக... எவ்வாறு அந்தக் கலையைக் கையாள்கிறோம் என்பதைப் பொருத்தது.
ஜோதிடக் கலையும் அவ்வாறானதே, காலம் என்ற சக்கரத்தை அளவீடுகளாகப் பகுத்து...அதை வருடங்கள்... மாதங்கள்... திதிகள்... நட்சத்திரங்கள்... கரணங்கள்... யோகங்கள்... நாழிகைகள்... நொடிகள்... விநாடிகள்... எனத் துல்லியமாக 'பஞ்சாங்கம்' என்ற ஒரு அமைப்புக்குள் கொண்டு வருவது 'முதல் படி'. இதற்கு 'கணக்கீடுகள்' என்ற 'கணித அறிவு' முக்கிய பங்கை ஆற்றுகிறது.
பூமியில் இருந்தபடி... பூமியைச் சுற்றிவருகிற உப கோளான சந்திர பகவானை மையப் படுத்தி... அதன் வழியாக... பிரபஞ்சத்தை இயக்கும் 'சூரிய பகவானைச்' சுற்றி வரும்... புத பகவான்... சுக்கிர பகவான்... செவ்வாய் பகவான்... வியாழன் என்ற குரு பகவான்... சனி பகவான் என்ற கிரகங்களையும்... நிழல் கிரகங்கள் என்ற ராகு, கேது பகவான்களையும்... மேற்கூறிய காலக் கூறுகளுக்குள் கொண்டு வருவது 'இரண்டாவது படி'. இதற்கு 'வான சாஸ்த்திரம்' என்ற 'பிரபஞ்ச அறிவு' முக்கிய பங்கை அளிக்கிறது.
இந்த இரண்டையும்... அதாவது கணக்கீடுகளையும், வான சாஸ்த்திரத்தையும் அடிப்படையாகக் கொண்டு பகுக்கப்பட்டுள்ள 'பஞ்சாங்கத்தின்' வழியாக... நாம் கடக்கும் ஒவ்வொரு நாளையும் துல்லியமாகப் பகுத்து அறியலாம்.
உதாரணமாக... இன்றைய நாளான 20.4.2020 ஐ...
~ 20.2.2020 என்ற ஆங்கில மாதமான ஏபரல் மாதமாகவும்...
~ தமிழ் வருடமான சார்வரி வருடத்து சித்திரை மாதமாகவும்...
~ திங்கள் கிழமையாகவும்...
~ சந்திர பகவான் பயணிக்கும் நட்சத்திரமான பூரட்டாதி காலை 7.41 நாழிகை வரையிலும் (காலை 9.08 நிமிடம் வரை)... பின்னர் உத்திரட்டாதி நட்சத்திரமாகவும்...
~ திதி... தேய்பிறை திரயோதசி திதி 56.54 நாழிகை வரையிலும் (21.4.2020 அதிகாலை 4.48 வரை)...
~ கரணம் தியாஜ் 34.10 நாழிகை வரையாகவும்...
~ யோகம்... பூரட்டாதி நட்சத்திர காலம் வரையில் மரன யோகமாகவும்... பின்னர் உத்திரட்டாதி நட்சத்திரம் முழுவது சித்த யோகமாகவும்...
பஞ்சாங்கம் பகுத்து விடுகிறது.
இப்படி பகுக்கப்படும் பஞ்சாங்கத்தை மூலமாகக் கொண்டு... ஒரு ஜீவனது பிறப்புக் காலத்தைக் கணிப்பதும்... அந்தக் காலத்தை 'லக்னமாகக்' கொண்டு... அதைச் சுற்றிலும் பிரபஞ்சத்தில் உலவும் கிரகங்களை... நிழல் கிரகங்களான 'ராகு - கேது பகவான்கள் உட்பட... ஒரு 'ஜோதிடச் சக்கரத்திற்குள்' கொண்டு வருவதுதான் முக்கியமான... 'மூன்றாவது படி'.
மிகுதி இருக்கும் படிநிலைகளையும்... இறைவனின் அருளோடு... ஒவ்வொன்றாகக் கடந்து செல்வோம்... அதன்பின் 'அணுகுமுறை' என்ற 'நுட்பம்' தானாக நமக்குப் புலப்படும்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment