'சுவர்பானு', அசுரர்களில் ஒருவனாக இருந்தாலும், 'மஹாவிஷ்ணு',மோகினி அவதாரம் எடுத்து, தேவர்களுக்கு அமிர்தத்தைப் பரிமாறும் போது, தேவர்களில் ஒருவனாக அமர்ந்து அதைப் பெற்று உண்டான்.
சுவர்பானு, ஒரு அசுரன் என்ற உண்மையை, சூரிய, சந்திர பகவான்கள், மோகினி அவதாரத்திலிருந்க்கும், மஹா விஷ்ணுவிடம் சுட்டிக் காட்ட, மஹாவிஷ்ணு, தனது சக்ராதயத்தால், சுவர்பானுவின் தலையைத் துண்டித்தார்.
துண்டிக்காப்பட்ட தலையுடன் இருந்த சுவர்பானு, அமிர்தத்தை உண்ட காரணத்தால், தலைவேறு உடல் வேறாக துடிக்க, பிரம்ம பகவானின் அருளினால், 'ராகு பகவானாகவும், கேது பகவானாகவும்' உருவம் பெற்றான். அவர்களின் தீவிர தவத்தால், 'சர்வேஸ்வரனின்' கருணையினால், நவக்கிரகங்களில், ஜீவர்களின் 'கர்மவினைகளைக்' குறிப்பிடும் 'ராகு பகவானாகவும், அந்தக் கர்மவினைகளிலிருந்து விடுபடும் 'ஞானத்தை அருளும் கேது பகவானாகவும், தங்களது கடமைகளை, நிழலாக இருந்து அருள்கிறார்கள்.
இந்த ராகு பகவான்,
செண்பக மரங்கள் சூழ்ந்த 'சண்பகராண்ய ஷேத்திரம்' என்றழைக்கப்படும், கும்பகோணத்திற்கு அருகிலிருக்கும் திருநாகேஸ்வரம் வந்து, 'தாயார் பிரையணிந்துதலால் சமேத நாகநாத சுவாமிகளிடம்' சரணடைந்து, தவமியற்றினான்.
ராகு பகவானின் தவத்திற்கு மனமிரங்கிய சர்வேஸ்வரன், தனது கோவிலின் பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில், நாகவல்லி, நாகக்கன்னி சமேதராய் ராகு பகவானுக்குத் தனிச் சன்னதியை அருளியிருக்கிறார்.
இந்தச் சன்னிதானத்தில் எழுந்தருளியிருக்கும் ராகு பகவானுக்கு, தினம் நடக்கும் ராகு கால பூஜையில், அபிஷேகம் நடைபெறும். அபிஷேகத்தின் போது, ராகு பகவானின் மீது ஊற்றும் பால், அவரின் உடல் மீது பட்டு வழியும் போது 'நீல நிறமாக' மாறுவதை, இன்றும் நம்மால் காணமுடியும்.
'கர்ம வினைகளால்' துன்புறும் ஜீவர்கள், இந்த ஆலயத்திற்கு வந்து, தாயார், சுவாமிகளை தரிசனம் செய்து, பிரகாரத்திலிருந்து அருளும் 'நாகவால்லி, நாகக்கன்னிகள் சமேத ராகு பகவானை' வழிபட்டு வர, கர்மவினைகளின் கடுமை குறைவதும், அதன் தாத்பர்யங்களை அறிந்து கொள்ளும் ஜீவன், அதற்கேற்ப தனது வாழ்வை கடந்து போவதும், நிகழும்.
இறைவனின் அருளோடு... தொடர்ந்து பயணிப்போம்.
ஸாயிராம்.






No comments:
Post a Comment