Thursday, February 6, 2020

'பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர்' அருளிய... சிறு கதைகளின் தமிழாக்கம். 'சுவர்களுக்குள் அமைந்த தோட்டம்'





'நடுக்கடலுக்குள் சென்ற கப்பல் திரும்புவதில்ல...' என்பதற்கேற்ப பிரம்மத்துக்குள் பிரவேசித்தவர்களாலும் திரும்ப முடிவதில்லை.

பிரம்ம அனுபவம் ஒரு ஜீவனுக்கு ஏற்படும் போது, அந்த பேரனந்தத்தை ஜீவனால் விவரிக்க முடிவதில்லை. அந்த பரமானந்த சுகத்திலேயே மூழ்கி, அதை விவரிக்க முடியாத சூழலில், ஜீவன் சிக்கித் தவிக்கிறது.

இந்த பிரம்ம ஞானத்தை அனுபவித்து, மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்புவதற்கு, அந்த பிரம்மத்தின் கருணை தேவைப்படுகிறது. அந்தக் கருணையைப் பெறுபவர்களைத்தான், இறை அவதாரமான... ஞானிகள் என்று அழைக்கிறோம்.

இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட, இறை அவதாரங்களுக்குத்தான், சகஜ வாழ்க்கைக்குள் வந்து, தனது 'சகஜ சமாதி நிலைக்குள்' இருந்து, ஏனைய ஜீவர்களுக்கு, இந்த அருள் பாதைக்கான, போதனையை அளிக்கும் வல்லமை அளிக்கப்படுகிறது.

நடந்து கொண்டிருந்த நான்கு நண்பர்கள், உயர்ந்த சுவர்களால் சூழப்பட்ட ஒரு தனிமையான இடத்தைக் கண்டனர். அந்த உயர்ந்த சுவர்களுக்கு அப்பால் என்ன இருக்கும் என்ற ஆவல், அந்த நால்வருக்கும் எழுந்தது. அதில் ஒருவன், அந்த சுவற்றின் உச்சிக்குச் சென்று, அந்த சுவற்றுக்கு அப்பால் இருப்பதைக் கண்டதும், ஆச்சரியத்தில் பேச்சற்று உறைந்துவிட்டான். 'ஆஹா... ஆஹா...!' என்றபடி அதற்குள் குதித்துவிட்டான்.

முதலாமவன், தான் கண்டதை விவரிக்க முடியாத நிலையில், மிகுதி இருந்த மூவரும், அடுத்தடுத்து, அந்த சுவற்றின் உச்சிப்பகுதிக்குச் சென்று, முதலாமவனைப் போலவே, பேச்சற்று, ஆச்சரியத்தில் மூழ்கி, "ஆஹா... ஆஹா...!' என்றவாறே, அந்த சுவற்றுக்குள் குதித்து விட்டனர்.

அதில் ஒருவன் மட்டுமே, மீண்டு வெளியே வந்து, அந்த சுவற்றுக்கு அப்பால் இருப்பதை அனைவருக்கும் தெரிவித்தான். எதைப் போலவென்றால்... 'பிரம்ம ஞானத்தை' உணர்ந்து கொண்ட ஞானியைப் போல...

ஸாய்ராம்.

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...