Tuesday, February 4, 2020

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 82. '12 ஆம் பாவம்', வெளிப்படுத்தும் கர்மவினை சூட்சுமங்கள்'.





12 ஆம் பாவம் :

'லக்னம்' ஜீவனது பிறப்பைக் குறிக்கும் எனில்... '12 ஆம் பாவம்' ஜீவனின், மறைவைக் குறிக்கும். ஜீவனின் முற்பிறப்பையும் குறிக்கும் பாவமாக இது அமையும். மேலும் 'விரயம்' என்ற இழப்புகளையும் ( சுபம்-அசுபம் என்று...), ஜீவனின், 'சுக-சயனம்' என்ற சுகத்தை குறிக்கும் பவமாகவும், இந்த பாவம் அமைகிறது.

நிம்மதி... என்ற சொல்லுக்கு, மனதில் அமைதி, நடுநிலையான மன நிலை, இன்பத்தையும்-துன்பத்தையும் சமமாகப் பார்க்கும் தன்மை, கடமைகளைப் பற்றற்று முடிக்கும் ஆற்றல்... என, எண்ணற்ற காரணிகளைக் கூற முடியும்.

இந்த 'நிம்மதியை' அளிக்கும் இடமாக... இந்த '12 ஆம் பாவம்' அமைகிறது.

இந்த '12 ஆம் பாவம்'...

# '4 ஆம் பாவத்திற்கு' இந்த '12 ஆம் பாவம்' பாக்கிய பாவமாக அமைகிறது.

- '4 ஆம் பாம்' ஜீவனுக்கு 'சுகத்தை' அளிக்கும் பாவமாக அமைகிறது. தாயின் சுகத்தையும்... வீட்டின் சுகத்தையும்... வண்டி மற்றும் வாகன சுகத்தையும்... அளிக்கும் இந்த பாவத்திற்கு, '12 ஆம் பாவம்' பாக்கியமாக அமைகிறது.

- '12 ஆம் பாவத்தின்' அமைவுதான், ஜீவனின் சுகத்தை நிர்ணயம் செய்கிறது என்றால் மிகையில்லை.

- இந்த பாவத்தின் அமைவு, அதாவது ஜீவனின் முற்பிறப்பின் புண்ணியம், இந்தப் பிறவியில் , ஜீவனது சுகங்கள், தனது 'பூர்வ கர்ம வினைகளின் விளைவுகளால்' பாதிக்கப்பட்டிருந்தாலும், ஜீவனின் அமைதியைக் குழைத்துவிடாமல் பாதுகாக்கும்.

# 'பூர்வ புண்ணிய பாவமான', '5 ஆம் பாவத்திற்கு', இந்த, '12 ஆம் பாவம்' அஷ்டபாவமாக... 8 ஆம் பாவமாக' அமைகிறது.

- ஜீவனின் 'பூர்வ கர்ம வினைகளை' சுமந்து கொண்டிருக்கும், '5 ஆம் பாவம்', வெளிப்படுத்தும், இன்ப-துன்ப நிலைகளையும், அதனால் ஜீவன் எதிர்கொள்ளும் சூழல்களையும்... இந்த பாவத்திற்கு, 'அஷ்டம பாவமாக' இருக்கும் '12 ஆம் பாவம்' துல்லியமாக வெளிப்படுத்தும்.

- ஜீவனின், ஆயுளை சூட்சுமமாக வெளிப்படுத்தும் பாவமாக '12 ஆம் பாவம்' அமைகிறது. ஏனெனில், இந்த 'பூர்வ புண்ணிய கர்ம வினைகளை' ஜீவன் முழுமையாக அனுபவித்துக் கடக்குமா...? அல்லது இடையிலேயே விட்டு விட்டு கடந்து விடுமா...? என்பதை, இந்த 'பூர்வ பாவத்திற்கு' அட்டம பாவமாக அமையும், '12 ஆம் பாவம்' வெளிப்படுத்தும்.

# '8 ஆம் பாவமான' ஆயுள் பாவத்திற்கு, இந்த '12 ஆம் பாவம்' பூர்வ புண்ணிய பாவமாக அமைகிறது.

- ஜீவனின் 'ஆயுள் காலத்தை' குறிப்பிட்டுக் காட்டும், '8 ஆம் பாவத்திற்கு'... ஜீவனின் முற்பிறப்பைக் குறிக்கும், இந்த '12 ஆம் பாவம்' பூர்வமாக அமைகிறது.

- இந்த '12 ஆம் பாவ' அமைவு சுபிக்ஷமாக அமையும் பக்ஷத்தில்... ஜீவன் தனது ஆயுள் காலத்தில் கடந்து போகும் துன்பங்கள் அனைத்தும்... 'தலைக்கு வந்தது, தலைப்பாகையோடு போனது போல...' ஆகிவிடும்.

இன்னும், எத்தனையோ, ஜீவ ரகசியங்களை, புதைத்து வைத்திருக்கும் பாவமாக... இந்த '12 ஆம் பாவம்' அமைகிறது.

ஸாய்ராம்.

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...