Saturday, February 1, 2020

'பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர்' அருளிய... சிறு கதைகளின் தமிழாக்கம். 'விருந்து'





ஒரு விருந்து உண்ணும் கூடம்... விருந்து ஆரம்பிக்கும் முன்...  பேச்சும்... சப்தமுமாகத்தான் இருக்கும். விருந்தினர்கள் வரிசையாக அமர்ந்து, அவர்களுக்கு முன் இலைகள் போடப்படும் போது பேச்சும்... சப்தமும் கொஞ்சம் குறையும்.

இலையில், உணவு வகைகள் வரிசையாகப் பரிமாறப்படும் போது... மேலும் சப்தங்கள் குறைந்து, 'சாதம் போடுங்கள்...!', 'சாம்பார் கொண்டு வாருங்கள்...!', 'ரசம் கொஞ்சம் கொடுங்கள்...!' என்ற சப்தத்தைத் தவிர வேறு சப்தங்கள் எழுவது இல்லை.

இறுதியாக, மோர் பரிமாறும் போது... சப்தங்கள் முற்றிலுமாகக் குறைந்து, மோரை உறிஞ்சிக் குடிக்கும் சப்தத்தைத் தவிர வேறு எந்த சப்தமும் கேட்பதில்லை.

பசியோடு விருந்திற்கு வந்தவர்களின் வயறு நிறைந்து, அவர்கள் சற்று ஓய்வாகவும்... உறக்கத்திற்கும் செல்லும் போது... உணவுக் கூடம் முழு அமைதி நிலழும் இடமாக இருக்கும்.

அது போலத்தான், ஒரு மனிதனின் ஆன்மீகத் தேடலும். ஆரம்பத்தில் மிகவும் கடினமாகக் காணப்படும் இந்தத் தேடுதல்... உடலைச் சார்ந்து... உளைப்புடனும், அலைச்சல்களுடன் இருக்கும். மனம் இறைவனை நெருங்கும் போது, உடல் உளைப்பு குறைந்து, மனம் இறைவனின் ஆளுமைச் சக்திக்குள் பிரவேசிக்கும் போது... உடலின் உளைப்பு குறைந்தும், மனதின் எழுச்சி மட்டுப்படவும் செய்யும்.

இறுதியில்... உடலும், மனமும் அமைதியாகி... பற்றுதல்கள் அனைத்தும் நீங்கி... இறைவனோடு , மனம் இணங்கி... மனமும், உடலும்... இறைவனுடன் பூரண அமைதியில் நிலை பெற்று இருக்கும்.

ஸாய்ராம்.

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...