8 ஆம் பாவம் :
'ஆயுள் ஸ்தானம்' என்று அழைக்கப்படும் '8 ஆம் பாவம்', ஒரு ஜீவனுக்கான வாழ்வு நாட்களை வெளிப்படுத்தும் பாவமாக அமைகிறது.
'இராசிச் சக்கரத்தில்'... லக்னம், குடும்பம், சகோதரம், தாய், குழந்தைகள், சத்ருக்கள், களத்திரம் என்ற முதல் பாதி வாழ்வு, '7 பாவங்களளைக்' கடக்கிறது.
இந்த '8 ஆவது பாவம்', குடும்ப வாழ்வில் ஈடுபட்டு உலகவாழ்வை கடந்து போகும் ஜீவனை... அதன் வாழ்வின் நோக்கமான 'பிறவியில்லாத' நிலையை நோக்கி நகர்த்தும் பாவமாக அமைகிறது.
அதனால்தான், ஜீவன் தொடர்ந்து தர்மம், கர்மம், இவற்றை லாபமாக்கி, இறுதியில் மோக்ஷத்தை நோக்கி, இறுதி '4 பாவங்களை' நகர்த்துகிறது.
'கர்ம வினைகளை'... கடமைகளாகக் கடந்து போவதன் தன்மையைக் கருதிதான், இந்தப் பாவம் பெரும் துன்பத்தை அளிக்கும் 'அட்டம பாவம்' என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த 8 ஆம் பாவம்...
# 'பூர்வ புண்ணிய பாவமான'... 5 ஆம் பாவத்திற்கு, 'சுகபாவமாக அமைகிறது.
- ஜீவன் அடையும் சுகத்திற்கும், துக்கத்தும், அதன் 'கர்ம வினைகள்' காரணமாவதால்... இந்த '8 ஆம் பாவம்' அந்த கர்ம வினைகளைக் கடக்கும் பாவமாகிறது.
- தனது 'ஆயுள் காலம்' முழுவதும் இந்த 'கர்ம வினைகளை', முற்றிலும் களைந்து, இறுதியில் 'பிறவியில்லா வாழ்வை' ஜீவனுக்கு அளிக்கும் வாய்ப்பைக் கொடுப்பதால்... இந்த பாவம் 'பூர்வத்திற்கு' சுகபாவமாகிறது.
# 'ருண-ரோக-சத்ரு பாவமான'... 6 ஆம் பாவத்திற்கு, இந்த 8 ஆம் பாவம் 'தைர்ய பாவமாகிறது.
- தனது 'கர்ம வினைகளின்' பாப வினைகளின் விளைவுகளைத் துன்பங்களாக அனுபவிக்க, ஜீவனுக்குத் தனி தைர்யம் தேவைப்படுகிறது. அந்த தைர்யத்தை அளிப்பதால், இது '6 ஆம் பாவத்திற்கு', தைர்ய பாவமாகிறது.
- இந்த '8 ஆம்பாவம்' எதிர் கொள்ளும் வினைகளுக்கும்... விளைவிக்கும் வினைகளுக்கும்... ஏற்ப, ஜீவன் தன்னைத் தானே தயார் செய்து கொள்வதால், 'சத்ரு பாவத்திற்கு', இது 'தைர்ய பாவமாகிறது'.
# 'சுக-சயன, மோக்ஷமான'... '12 ஆம் பாவத்திற்கு', இந்த '8 ஆம் பாவம்' 'தர்மமாகவும்-பாக்கியமாகவும்' அமைகிறது.
- பிறவியின் நோக்கமே... 'இறைவனை அடைவதுதான்'. அதாவது மீண்டும், ஒரு பிறவியை அடையாதிருப்பதுதான்.
- தனது 'தொடர் பிறவிகளால்', வாழும் காலத்திலும்... மிண்டும் பிறக்கும் காலத்திலும்... நிம்மதியற்று தவிக்கும் ஜீவன்... இம்முறையாவது, அந்தத் துன்பத்திலிருந்து விடுபட்டு விடமாட்டாமா...! என்று ஏங்கி, இந்த 'ஆயுள் பாவத்தை' தனக்குக் கிடைக்கும் 'பாக்கியமாகக்' கருதுவதால்... இந்த '8 ஆம் பாவம்'... 12 ஆம் பாவத்திற்கு 'பாக்கியமாகிறது'.
# இதற்கும் மேலாக, இந்த '8 ஆம் பாவம்' மறை பொருள் உணர்த்தும் பாவமாக அமைகிறது.
- 'மறை பொருள்' என்பது, உலக வாழ்வில், 'பொக்கிஷங்கள்' என்றும்... உள் வாழ்வில், 'பிறவாமை நோக்கி செல்வதற்கான யுக்திகள்' என்றும் வருணிக்கப்படுகிறது.
இன்னும் எண்ணற்ற சூக்ஷுமங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள... இந்த '8 ஆம் பாவம்' ஒரு சூஷும பாவம் என்றால் மிகையில்லை.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment