மாம்பழங்களை ருசிப்பதற்காக, ஒருவர் மாந்தோப்புக்கு சென்றால்... அவரது கவனம் முழுவதும், மாம்பழங்களை வாங்கி ரசித்து, ருசித்து உண்ணுவதில்தான் இருக்க வேண்டும்.
அதை விடுத்து, அந்த மாந்தோப்பில் எத்தனை நூறு மரங்கள் இருக்கின்றன...? எத்தனை ஆயிரம் கிளைகள் இருக்கின்றன...? எத்தன லட்ச இலைகள் இருக்கின்றன...? என்பதெல்லாம் தேவையற்ற கேள்விகளாக ஆகிவிடும்.
நமது நோக்கம் மாம்பழமாக இருக்கும் பக்ஷத்தில்... அதில் மட்டும் கவனம் வைபதுதான் உத்தமாமாக இருக்கும். நாம் அந்த தோப்புக்கு மாம்பழம் ருசிக்கத்தான் வந்தோம்... மாம்பழத்தை மட்டும் ருசிப்போம்'
அது போலத்தான், இறைவனை உணர்ந்து கொள்வதும்.
இறைவனை உணர்ந்து கொள்வது மட்டுமே நோக்கமாக இருக்கும் பக்ஷத்தில்... இந்த உலகத்தைப் பற்றியும்... படைப்புகள் பற்றியும்... மெய்ஞானம் பற்றியும்... ஆய்வுகளுக்குள் செல்வது தேவையற்றதாகிவிடும்.
இந்த உலகத்தில், மனித படைப்பின் நோக்கமே, இறைவனை உணர்ந்து கொள்வதும்... அவரை அடைவதும்தான். இந்த நோக்கத்தில்தான் மனிதனின் கவனம் இருக்க வேண்டும். அதிலிருந்து விலகி வேறுபட்ட விஷயங்களுக்குள் சிக்கிக் கொள்வது உத்தமமல்ல.
நாம் மாம்பழங்களை ருசிக்க வந்தோம்... அதை மட்டும் ருசித்து மகிழ்வோம்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment