ஜோதிடத்தில், 'குரு பகவானின்' அமைவு வெளிப்படுத்தும், 'கர்ம வினைகளின் விளைவுகளின்' காரணங்களை அறியாது, நாம் தவித்து நிற்கும் போது, 'அதைபற்றிய கவலையேதும் தேவையில்லை... நானிருக்கிறேன் வா..!' என்றழைக்கும், பேரருளாளனாக இருப்பவர்தான்... தஞ்சைக்கு அருகில், 'திட்டை' என்ற ஊரில் அமைந்த 'வசிஷ்டேவரராக' எழுந்தருளியிருக்கும் சர்வேஸ்வரன்.
இந்த விமானத்தின் கீழ் இருந்து, அருள் செய்யும் 'சர்வேஸ்வரரின் மீது', ஒவ்வொரு 'நாழிகையிலும்' (24 நிமிடங்களுக்கு ஒருமுறை)... ஒவ்வொரு 'சொட்டு நீர்' விழுவதை இன்றும் நாம் காணலாம்.
ஆலய விமானத்தின் மேல் அமைந்திருக்கும் 'சந்திரகாந்தக் கல்'... ஆகாயத்திலிருந்து ஈர்த்துக் கொள்ளும் நீரை... 'கங்கை நீரின்' மீது அடங்காத காதல் கொண்ட, சர்வேஸ்வரனின் மீது... ஒவ்வொரு நாழிகையிலும் அபிஷேகம் செய்கிறது.
இந்த ஆலயத்தில், வழிபட்ட 'வசிஷ்ட மகிரிஷி' தனக்கு 'குருவாக' இருந்து அருள் செய்ய வேண்டி, இந்த 'ஆபத்சகாயேஸ்வரை' பிரதிஷ்டை செய்தார். அதனால், இந்த முர்த்திக்கு, 'வசிஷ்டேஸ்வரர்' என்றும் பெயர்.
அவரின், பிரார்த்தனைக்கு இணங்கி, சர்வேஸ்வரன், 'குரு பகவானின்' அதிதேவதையான... 'ஸ்ரீ தக்ஷ்ணாமுர்த்தியின்' வடிவம் கொண்டு... வசிஷ்ட மகிரிஷிக்கு காட்சி அருளி... அவருக்கு 'குருவானார்'. தாயாருக்கும், சுவாமிக்கும் இடையிலேயே எழுந்தருளியிருக்கும் 'ஸ்ரீ தக்ஷ்ணாமூர்த்தி' நின்ற நிலையில் இருந்து அருள் செய்கிறார்.
உதாரணமாக...
'கடக லக்னத்தில்' பிறந்திருக்கிறவருக்கு, 'குரு பகவான்'... '6 ஆம் பாவமான' ருண - ரோக - சத்ரு ஸ்தானங்களுக்கும், '9 ஆம் பாவமான' பாக்கிய - தர்ம ஸ்தானங்களும் அதிபதியாகிறார். அவர், '12 ஆம் பாவமான' சுக-சயன-விரய ஸ்தானத்தில் அமைகிறார்.
இந்த அமைவினால்... ஜாதகர், தனது பூர்வ சொத்துக்களின் மூலமாகவே, தனது வாழ்வைக் கடத்த வேண்டியிருக்கிறது. முதலில் 'கடன்களை' பெற்று வாழ்வதும்... பின்னர், பெற்ற கடன்களுக்காக... தனது பூர்வ சொத்துக்களை இழக்க நேர்வதுமாக கழிகிறது. வாழ்வின் இறுதியில் அனைத்தையும் இழந்து நிற்க வேண்டிய சூழல் உருவாகும் வாய்ப்பும் ஏற்படுகிறது.
இந்த 'வினைகளிலிருந்து', ஜீவன் விடுபட வேண்டுமெனில்... இந்த 'தென் குடித் திட்டை' ஆலயத்திற்குச் சென்று, 'மங்களாம்பிகைத் தாயார்' சமேத 'வசிஷ்டேஸ்வரை' தரிசனம் செய்து, அவர்களுக்கிடையே எழுந்தருளியிருக்கும் 'குரு-தக்ஷ்ணாமுர்த்தி பகவானையும்' வழிபட்டு வர... அவரின் துன்ப நிலைகள் நீங்கி... அவர் இன்ப வாழ்வின் வழியே பயணிக்க ஆரம்பிப்பார் என்பது 'திட்டை' அளிக்கும் திண்ணம்.
தொடர்ந்து பயணிப்போம்... இறைவனின் அருளோடு...
ஸாய்ராம்.




No comments:
Post a Comment