ஜோதிடத்தில், 'குரு பகவான்' அமைந்திருக்கும் நிலை வெளிப்படுத்தும், கர்ம வினைகளின் விளைவுகளால், துன்பங்களை அனுபவிக்கும் ஜீவர்களுக்கெனவே அமைந்த ஆலயம்தான்... 'ஆபத்சகாயேஸ்வரர் ஆலயம்'.
தஞ்சை மாவட்டம், திருவாரூருக்கு அருகில் அமைந்துள்ள இந்த ஆலயத்தின் பிரதான முர்த்தி... 'ஆபத்சகாயேஸ்வரர்' என்ற ஈஸ்வரர். இவர், தேவர்களும், அசுரர்களும் இணைந்து, பாற்கடலைக் கடையும் போது, எழுந்த 'ஆலகால விஷத்தை' ஏற்றுக் கொண்டவராக... 'தேவர்களுக்கு' எழுந்த 'ஆபத்தை நீக்கிய'... 'ஆபத்சகாயேஸ்வரராக' இந்த ஆலயத்தில் பிரதான முர்த்தியாக எழுந்தருள் பாலிக்கிறார்.
அந்த 'ஆலகால விஷத்தின்' வீரியத்தினால், இந்த ஆலயத்தின் தல விருட்சமான 'பூளை' செடியின் பூக்கள்... இன்றும் கரிய நிறத்தில் இருப்பதைக் காணலாம்.
ஒரு ஜாதகத்தில்... 'குரு பகவான்' வெளிப்படுத்தும், விளைவுகள், அந்த ஜீவனின் 'பூர்வ கர்ம வினைகளையொட்டித்தான் 'அமையும். அந்த 'காரணத்தை' அறிய முடியாது தவிக்கும் போது, 'குரு பகவான்' அமையும் நிலைக்கு ஏற்ப, அவர் அமைந்த 'ஆலயங்களுக்குச்' சென்று, அந்த 'திருமுர்த்திகளிடம்' சரணடைந்து, அந்தக் கர்மவினைகளின் வலிமையைக் குறைத்துக் கொள்வதே... இறைபரிகாரமாகும்.
உதாரணமாக...
'சிம்ம லகனத்தில்' பிறந்த ஜாதகருக்கு, 'குரு பகவான்' 'பூர்வம்' (5 ஆம் பாவம்) மற்றும் 'ஆயுள்' (8 ஆம் பாவம்) ஸ்தானங்களுக்கு, அதிபதியாகிறார். அவர், '6 ஆம் பாவமான', 'ருண-ரோக-சத்ரு' ஸ்தானத்தில் மறைந்து, தனது பலத்தை இழந்தது மட்டுமல்ல... 'நீச நிலையிலும்' சஞ்சரிக்கிறார்.
இந்த அமைவினால், ஜாதகரின் வாழ்வில், அவர், அவரது 'பூர்வ வினைகளின்' துன்ப விளைவுகளை அனுபவிக்க நேரிடுகிறது. அவரது பூர்வ சொத்துக்கள் மற்றும், பூர்வத்தில் வாழும் நிலையை இழந்து... துன்பத்தில் உழலும் சூழலுக்குத் தள்ளப்படுகிறார்.
இந்த நிலையிலிருந்து மீள, அவர், இந்த 'ஆபத்சகாயேஸ்வரரின்' ஆலயத்திற்குச் சென்று, 'தாயார் ஏலவார்க்குழலி' சமேத 'ஆபத்சகாயேஸ்வரரை' தரிசனம் செய்து,
பிரகாரத்தில் இருந்து அருள் செய்யும் 'ஸ்ரீ தக்ஷ்ணாமுர்த்தி பகவானின்' திருவடி தொழுது வர... அவரின் துன்பங்கள் நீங்கி... அவரின் வாழ்வு சுபிக்ஷத்தை நோக்கி நகரும் என்பது திண்ணம்.
இறைவனின் அருளோடு... தொடர்வோம்...
ஸாய்ராம்.




No comments:
Post a Comment