'ஜோதிடக் கலையில்' கலைகளைக் குறிப்பவராக 'புத பகவான்' அமைகிறார். 'ஆய கலைகள் அறுபத்து நான்கிற்கும்' அதிபராகவும் அமைகிறார். இந்த 'ஜோதிடக் கலைக்கும்' அவர் முலமாகத் திகழ்கிறார்.
அவர் வலிமை பெற்று அமையும் போதுதான், கலஞர்கள் உருவாகிறார்கள். ஜோதிடச் சித்திரத்தில் அவர் பலம் பெற்று அமையும் போது 'அறிவு' சார்ந்தும்... மறைந்து நின்று அமையும் பொது 'ஞானம்' சார்ந்தும்... கலைஞர்கள் உருவாவதை கண்கூடாகப் பார்க்கலாம்.
கல்விக்கு எவ்வாறு இவரின் முக்கியத்துவம் இருக்கிறதோ... அது போல கலைக்கும் இவரது முக்கியத்துவம் அமைகிறது. இவரது, பலம் மற்றும் பலவீனம் வெளிப்படுத்தும் 'கர்ம வினைகளின் விளைவுகளிலிருந்து' மீண்டு, அந்தக் கலைகளின் ஆதிபத்தியத்தில் திளைக்க, அந்த 'கலைமகளின்' திருவடியை சரணடைவதும்... ஒரு உன்னத வழியாகும்.
கலைகளுக்குக் காரணமாகும்...'கலைமகளான', 'சரஸ்வதித் தாயார்' உறையும் ஆலயங்களுக்குச் சென்று... அவரை மனமுருகி வழிபட்டு வர, அந்தத் தாயாரின் அருள் கடாக்ஷம், எளியவர்களையும் கலஞர்களாக்கும் என்பது திண்ணம்.
அவ்வாறான ஒரு ஆலயம்தான், 'திவ்யத் தேசங்கள்' என்றழைக்கப்படும் 'வைணவத் தலங்களில்' ஒன்றான, திருச்சிராப்பள்ளியில் அமைந்திருக்கும், 'உத்தமர் கோவில்'.
உத்தமரான விஷ்ணு பகவான், இந்த ஆலயத்தில், புருஷோத்துமராகவும், மகாலக்ஷ்மித் தாயார், பூரணவல்லித் தாயாராகவும் எழுந்தருளி அருள் பாலிக்கிறார்கள்.
இந்த ஆலயத்தின் முக்கியத்துவமே, இங்கு 'சிவ பெருமானார் - விஷ்ணு பகவான் - பிரம்ம பகவான்' என்று, இந்த முவரும் எழுந்தருளி அருள் பாலிக்கும் ஸ்தலாமக இருப்பதுதான். அது போலவே, 'மலை மகளும் - அலை மகளும் - கலை மகளும்' இங்கு எழுந்தருளி பகதர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள்.
கலைமகளான 'சரஸ்வதித் தாயார்', கைகளில் வீணையின்றி, 'ஞான சரஸ்வதியாக'... ஏடுகளுடனும்... ஜப மாலையுடனும் காட்சி தருகிறார். சர்வேஸ்வரன், பெருமாள், தாயார்களை வணங்கி, தனிப் பிரகாரத்தில், பிரம்மாவுக்கு அருகிலேயே அமர்ந்திருக்கும், 'ஞான சரஸ்வதித் தாயாரையும்' சென்று தரிசனம் செய்து வர... கலைகள் கை கூடி... வளமான வாழ்வு அமையும் என்பதில் எந்த சந்தேகமௌம் இல்லை.
கீழே, பக்தர்களுக்காகத் தாயார், கைகளில் வீணை ஏந்தி, 'அலங்கார ருபத்தில்' காட்சி தருகிறார்.
அது போலவே, 'திருவரங்கத்தில்', 'ஸ்ரீ அரங்கநாதர் ஆலயத்திற்கு' எதிரில், அம்மாபண்டபம் செல்லும் சாலையில் அமைந்திருக்கும், தாயார் 'சாரதா தேவித் தாயாரும்', தில்லை நகர், சாஸ்திரி சாலையில் அமைந்திருக்கும் 'சாராதா தேவித் தாயாரும்', இந்த 'ஞான சரஸ்வதித் தாயாரின்'ரூபமாக... கைகளில் ஏடுகளுடனும்... ஜப மாலையுடனும்தான் அருள் செய்கிறார்.
ஞான பீடத்தில், எழுந்தருளி அருள் பாலிக்கும் 'அன்னை சாரதைத் தாயாரை' வணங்கியும், நாம் இந்த அருள் ஞானத்தைப் பெறலாம்.
'ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என் அன்னை - தூய
உருப்பளிங்கு போலாவாள், என் உள்ளத்தின் உள்ளே
தொடர்ந்து பயணிப்போம்... இறைவனின் அருளோடு...
ஸாய்ராம்.





No comments:
Post a Comment