'செவ்வாய் பகவான்' ஜோதிடத்தில் வெளிப்படுத்தும் 'கர்ம வினைகளின் விளைவுகளை' அனுபவிக்கும் போது, அதற்கான 'காரணங்களை' நம்மால் அறிந்து கொள்ள முடியாமல் தவித்துப் போவோம்.
அப்போது, அதற்கான காரணங்களை தெரிந்து கொள்ள விளைந்திடாமல், 'செவ்வாய் பகவானின்' அமைவு உணர்த்தும் சூட்சுமங்களுக்கு ஏற்ப, அவரின் அதிதேவைதாயான 'குமரக் கடவுள்' எழுந்தருளியிருக்கும், எண்ணற்ற ஆலயங்களில், அந்த அமைவு உணர்த்தும் குறிப்பிட்ட ஆலயத்திற்குச் சென்று சரணடவது உத்தமம்.
உதாரணமாக..
மேற்கண்ட ஜாதகத்தில், 'தனுர் லக்னத்தில்' பிறந்த ஒருவருக்கு, 'செவ்வாய் பகவான்'... பூர்வ புண்ணியாதிபதியாகவும் (5 ஆம் பாவம்)... சுக-சயன சயனாதிபதியாகவும் (12 ஆம் பாவம்)... அமைகிறார்.
ஆனால். அவரது அமைவு, '8 ஆம் பாவத்தில்' அமைகிறது. அந்த பாவத்தில், அவரது பலம் குறைந்து... நீச நிலையில் அமர்ந்திருக்கிறார்.
அதன் விளைவாக... தனது பூர்வத்தின் புண்ணிய பலன்களை அனுபவிக்க முடியாது தவிப்பதுடன்... தனது நிம்மதியையும் இழந்து... மனதாலும், உடலாலும்... சக்தியை இழந்து வாடும் நிலைக்குத் தள்ளப்படுவார்.
இந்த நிலையில் தத்தளிக்கும் அவர்,
நாகப்பட்டிணத்திற்கு அருகில், சிக்கலில் எழுந்தருளியுள்ள... 'நவநீதேஸ்வரர், வேல் நெடுங்கண்ணித் தாயார் சமேதமாக எழுந்தருளியிருக்கும் 'சிக்கல் சிங்காரவேலனைச்' சென்று சரணடைவது உத்தமான வழியாக அமையும்.
இந்த ஆலயத்தின் முலவராக, வெணணையிலிருந்து உற்பத்தியான வெண்ணைநாதராக... இந்த 'நவநீதேஸ்வரர்' எழுந்தருள்கிறார்.
இங்கு எழுந்தருளியிருக்கும்... 'வேல் நெடுங்கண்ணித் தாயாரிடம்' இருந்துதான்... 'சூரனை' சம்ஹாரம் செய்வதற்கான 'ஆற்றலை'... தாயாரிடமிருந்து 'வேலின்' உருவமாகப் பெற்றுக் கொண்டார்.
அந்த, ஆற்றலைப் பெற்றுக் கொண்டு, அந்த ஆற்றலின், உச்சத்தில் வியர்த்தும் போனார். அந்த நிலை... இன்றும், 'சூர சம்ஹாரத்திற்கு' முன்பாக, இந்த ஆலயத்தில் நிகழ்கின்றது. இன்றும், அந்த வேலைப் பெற்றுக் கொண்ட'சிங்கார வேலனின்' திருமுகத்தில் 'வியர்வைத் துளிகள்' பெருக்கெடுப்பதை நாம் நமது கண்களாலேயே காணலாம்.
இந்த, 'சக்தி மிகு ஆலயத்திற்குச்' சென்று, 'தாயார், சுவாமியைத் தரிசனம் செய்து'... அங்கு உற்சவ முர்த்தியாக... 'தெய்வானைத் தாயார், வள்ளித் தாயார் சமேதமாக' எழுந்தருளியிருக்கும் 'சிங்காரவேலன்' திருச் சன்னிதானத்தில்... மனமுருகி வழிபட்டு வர... 'செவ்வாய் பகவானது' பலமற்ற நிலையினால்... விளையும் 'துன்ப நிலைகள்' மாறி... அவரளிக்கும் சிறந்த 'ஆதிபத்தியப்' பலன்களை அனுபவிக்க முடியும் என்பது திண்ணம்.
தொடர்ந்து பயணிப்போம்... இறைவனின் அருளோடு...
ஸாய்ராம்.





No comments:
Post a Comment