'ஆற்றல்காரகரான'... 'செவ்வாய் பகவான்', பூமிக்காரகராகவும்... சகோதரக்காரகராகவும்... ஜோதிடத்தில் வருணிக்கப்படுகிறார். 'ஆத்மக்காரகரான', சூரிய பகவானிடம் இருந்து தனது 'ஆற்றலை' பெற்றுக் கொண்டு, 'சூரிய பகவானுக்கு; இணையாக ஜோதிடச் சக்கரத்தில் உலவுகிறார்.
'செவ்வாய் பகவானின்' அதிதேவதையாகக் 'குமரக் கடவுள்' வணங்கப்படுகிறார். இந்தக் 'குமரக் கடவுளின்' அவதாரமே... 'சர்வேஸ்வரனின்' நெற்றிக் கண்ணிலிருந்துதானே நிகழ்கிறது. இவ்வளவு ஆற்றலைப் பெற்ற 'செவ்வாய் பகவான்' ஆட்சி பெறும், 'மேஷ இராசியில்' இருந்துதான்... 'காலபுருஷ இராசியே' ஆரம்பிக்கிறது.
இவர் ஒரு ஜாதகத்தில் அமைந்திருக்கும் நிலைகளைக் கொண்டு, அந்த ஜாதகரின் 'பூர்வ புண்ணிய கர்ம வினைகளை' அறிந்து கொள்ள முடியும். இந்த 'ஆற்றல்காரகரின்' வலிமை ஒரு ஜீவனுக்கு குறையும் போது, அந்த ஜீவன் தனது ஆற்றலை மட்டுமல்ல.. தனது கர்ம வினைகளின், துன்ப விளைவுகளை அனுபவிக்க வேண்டியிருக்கிறது.
உதாரணமாக...
'மேஷ லக்னத்தில்' பிறந்த ஒரு ஜாதகருக்கு, 'செவ்வாய் பகவான்', '6 ஆம் பாவமான'... 'ருண-ரோக-சத்ரு' ஸ்தானத்திற்கும்.... '11 ஆம் பாவமான'... லாப ஸ்தானத்திற்கும் அதிபதியாகிறார். இவர், '8 ஆம் பாவமான'... 'ஆயுள் பாவத்தில்' அமர்கிறார்.
இந்த அமைவினால், 'கடனாலும் - நோய்களாலும் - எதிர்ப்புகளாலும்' இவரின் வாழ்வு, சோதனைக்குள்ளாகும் என்பது தெளிவாகிறது. சில வேளைகளில், சில விபத்துகளால், இவரது 'ஆயுளுக்கு' பங்கம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. இவரின் வினைகளின் விளைவுகள்... இவரின் தைர்யத்தை குறைத்து, குடும்பத்தில் நிலவும் நிம்மதியையும் குலைத்துவிடும் என்பதை இந்த அமைவு வெளிப்படுத்துகிறது.
இந்தத் துன்பத்திலிருந்து, விடுபடவும்... தனது 'கர்ம வினைகளின் விளைவுகளைக்' குறைத்துக் கொள்வதற்கும்... 'இறைவனின் திருவடி சரணாகதி' இந்த ஜீவனுக்குத் தேவைப்படுகிறது.
அந்த 'இறைவன்' எழுந்தருளியிருக்கின்ற ஆலயமாக வைத்தீஸ்வர ஆலயம் அமைகிறது. மயிலாடுதுறைக்கு அருகில், வைத்தீஸ்வரத்தில், 'தையல் நாயகித் தாயார் சமேத வைத்தீஸ்வரனாக' சர்வேஸ்வரன் எழுந்தருளியிருக்கிறார். இங்கு குமரக் கடவுள், 'முத்துக் குமார சுவாமியாக'... 'வள்ளித் தெய்வானைத் தாயார்களுடன்' எழுந்தருளியிருக்கிறார்.
இங்கிருக்கும் பிரகாரத்தில், நவக்கிரக நாயகரான, 'செவ்வாய் பகவான்' தனக்கு ஏற்பட்ட 'ஆற்றமுடியாத தொழு நோய்க்காக'... இந்த ஆலயம் வந்து, அங்கிருக்கும் திருக்குளத்தில் மூழ்கி எழுந்து, 'தாயாரையும் சுவாமி வைத்தியநாதரையும், முத்துக் குமார சுவாமியையும்' தரிசித்து... குணம் பெற்றார்.
'புள்ளிருக்கும் வேளுர்' எனப் புகழ் பெற்ற இந்த ஸ்தலத்தில், ராஜ பட்சிகளான ஜடாயு, சம்பாதி ஆகியோருக்கு... 'வைத்தியநாத சுவாமிகள்... முக்தி அளித்தவராகவும் இருக்கிறார்.
இங்கு, தனது நோய் தீர்ந்து... தனது 'முழு ஆற்றலையும்' பெற்றுக் கொண்ட 'செவ்வாய் பகவான்' பிரகாரத்தில் எழுந்தருளி... தன்னை தரிசிக்க வரும் ஜீவர்களுக்கு, தனது ஆசிகளை... தாயார், சுவாமிகள், முத்துக் குமார சுவாமியுடன் இணைந்து வழங்குகிறார்.
இந்த ஆலயத்திற்கு, 'செவ்வாய் பகவான்' வெளிப்படுத்தும்... 'கர்ம வினைகளால்' துன்பப்படும் ஜீவர்கள் சென்று... மனமுருகி வழிபட்டு வர... ஜீவர்களின் கர்ம வினைகள் விளைவிக்கும்... விளைவுகளிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள முடியும் என்பது கண்கூடு.
தொடர்ந்து பயணிப்போம்... இறைவனின் அருளோடு...
ஸாய்ராம்.






No comments:
Post a Comment