இந்தப் 'பிறவிப் பிணியை' நீக்க, ஜீவனுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு வாய்ப்புதான் இந்தப் பிறவி. இந்தப் பிறவியில், ஜீவன் அனுபவிக்கும் 'கர்ம வினைகளின் விளைவுகளத்தான்' கிரகங்கள் வெளிப்படுத்துகின்றன.
இந்தக் 'கர்ம வினைகளின் விளைவுகள'... 'ஜீவனக்காரகாராக' அருளும், 'சந்திர பகவான்' ஜாதகத்தில் அமையும், பாவத்தைக் கொண்டு, அறிந்து கொள்ளலாம். ஆனால், அதற்கான 'காரணங்களை' நம்மால் அறிந்து கொள்ள முடிவதில்லை.
'கர்ம வினைகள் அளிக்கும் விளைவுகளின்' துன்பங்களை அனுபவிக்கும் ஜீவர்கள், அதற்கான 'காரணங்களை' அறிந்து கொள்ள முடியாத நிலையில்... அதை முற்றிலுமாக அறிந்த... 'இறை சக்தியின்' திருவடியில் பணிந்து... அந்தக் கர்ம வினைகள் அளிக்கும் துன்பங்களிலிருந்து, தன்னை விடுவிக்கும் படி பிரார்த்திக் கொள்கிறார்கள்.
அவ்வாறு, பிரார்த்திக்கும் ஜீவர்களின், பிறவிப் பிணியாகிய... 'தொடர் பிறவியையும்... இந்தப் பிறவியில் அனுபவிக்கும், 'ருணம் - ரோகம் - சத்ரு' என்ற துன்பங்களிலிருந்தும்... நீக்கும் ஆலயமாகத் திகழ்கிறது... 'காட்டழகிய சிங்கர் கோவில்'.
இந்த ஆலயம், திருச்சி, திருவரங்கத்தில் அமைந்துள்ளது. இங்கு சர்வேஸ்வரரான 'பெருமாள்', 'மகாலக்ஷ்மித் தாயார் சமேத காட்டழகிய சிங்கராக' எழுந்தருளி அருள் பாலிக்கிறார்.
இந்த 'லக்ஷ்மி நரஸிங்கப் பெருமாளை' அவரின் திரு நட்சத்திரமான 'சுவாதி நட்சத்திரத்தன்று' வழிபட்டு வர, ஜீவர்களின் 'பிறவிப் பிணிகள்' நீங்கும் என்பது சர்வ நிச்சயம்.
தொடர்ந்து பயணிப்போம்... இறைவனின் அருளோடு...
ஸாய்ராம்.


No comments:
Post a Comment