'சந்திர பகவான்' மனோகாரகன் மட்டுமல்ல... அவர் ஜீவனைக் குறிப்பிடுபவர். எப்படி... 'சூரிய பகவானை', ஆத்மகாரகராக ஜோதிடம் வருணிக்கிறதோ, அது போல, 'சந்திர பகவானை', ஜீவனக்காரகராகவும் வருணிக்கிறது.
இந்த 'ஜீவன்' உலகத்தில், அதன் 'கர்ம வினைகளை' அனுபவித்துத் தீர்க்கவே பிறப்பை அடைகிறது. அந்த 'கர்ம வினைகளின்' துன்பத்தை அளிக்கும் விளைவுகளான 'கடன் - நோய் - வழக்கு' என்பன மற்றுமல்ல... அந்த ஜீவனின் பெரும் 'நோய்' அதன் 'தொடர் பிறப்பாக' அமைகிறது.
அந்தப் பிறவிப் பிணியை' நீக்குவதற்கான உபாயத்தையும், அதற்கான ஞானத்தையும், சில குறிப்பிட்ட ஆலயங்களில்... அங்கு எழுந்தருளும் 'இறைவன்' பக்தர்களுக்கு அருள்கிறான்.
அவ்வாறான ஆலயங்களில், மிக முக்கியம் வாய்ந்த ஆலயம்... தஞ்சை மாவட்டம், கும்பகோணத்திற்கு அருகில் அமைந்திருக்கும் 'திருச்சேறை' செந்நெறியப்பர்ஆலயம்'.
இந்த ஆலயத்தில், சுவாமி 'சார பரமேஸ்வரராகவும்', தாயார் 'ஞானாம்பிகாவாகவும்' எழுந்தருளி அருள் பாலிக்கிறார்.
ஜீவனின், 'பிறவிப் பிணியாகிய' தொடர்பிறவியையும், இந்தப் பிறவியில், ஜீவன் அனுபவிக்கும் 'ருணம் - ரோகம் -சத்ரு' என்ற பிறவிப் பிணிகளையும், நீக்குவதற்காக, இந்த சார பரமேஸ்வரர்'... 'ருண ரோக விமோசன லிங்கேஸ்வரராக' எழுந்தருளி... தன்னை தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு அனுக்கிரகித்து, அவர்களை 'இந்தப் பிறவிப் பிணிகளின் தளைகளிலிருந்து' விடுபட வைக்கிறார்.
இந்தப் பிறவிப் பிணியை நீக்கும், 'ருண ரோக விமோசன லிங்கேஸ்வரை', பிரதிஷ்டை செய்து வழிபட்டவர்... வசிஷ்ட மகிரிஷி.
'திங்கள் கிழமைகளில்', இந்த கருணாமூர்த்தியின் திருவடி பணிந்து... ஜீவர்கள் அனைவரும் தமது பிறவிப் பிணியை நீக்கி... அவரின் திருவடியில் கலந்து... பிறவியில்லாப் பெரு நிலையை அடையலாம்.
தொடர்ந்து பயணிப்போம்... இறைவனின் அருளால்...
ஸாய்ராம்.



No comments:
Post a Comment