'மனோகாரகன்' என்று அழைக்கப்படும், 'சந்திர பகவான்', ஜோதிடத்தில் வெளிப்படுத்தும், 'கர்ம வினைகளின் விளைவுகளைக் களைவதற்கு' நவக்கிரக ஆலயங்களில், பிரதானமாக அமையும் கோவிலாக திருவையாற்றில், திங்களூரில், 'பெரிய நாயகித் தாயார் சமேத கைலாசநாதர் சுவாமிகள்' ஆலயம் அமைந்திருக்கிறது.
'சந்திர பகவான்'... தனது பயணத்தை 27 நட்சத்திரங்கள் வழியாகத் தொடர்கிறார். அதில், அவரது 'ரோகிணி நட்சத்திரத்தின் வழியேயான' பயணம், அவருக்கு 'உச்ச கதியை' அளிக்கிறது.
தொடரும், 'புனர் பூச, பூச, ஆயில்ய நட்சத்திரங்களின்' வழியேயான பயணம் 'ஆட்சி நிலையையும்'... 'விசாகம், அனுஷம்,கேட்டை நட்சத்திரங்களின் வழியேயான பயணம் 'நீச நிலையையும்... அளிக்கிறது.
இதுமட்டுமன்றி, 15 நாட்களுக்கு ஒருமுறை, 'வளர்பிறை' என்ற ஏற்றத்தையும்... 'தேய்பிறை' என்ற இறக்கத்தையும்... அடைந்து, 'பௌர்ணமி' என்ற 'ஆர்ப்பரிக்கும் நிலையையும்'... 'அமாவாஸ்யை' என்ற 'ஆழ்ந்து அடங்கும் நிலையையும்' வெளிப்படுத்துகிறார்.
இந்த 'மாறுபட்ட பயணங்கள்' மற்றும் 'நிலைகளால்' துன்பப்பட்ட 'சந்திர பகவான்', இந்த ஆலயத்திற்கு வந்து, 'தாயாரையும், சுவாமியையும் சரணடைந்து', தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட தலமாக... இந்தத் 'திங்களுர் தலம்' திகழ்கிறது.
இந்த 'சந்திர பகவான்' ஜாதகங்களில் அமையும் நிலைகள்... அந்த ஜாதகரின் கர்ம வினைகளைச் சுட்டிக் காட்டுகிறது.
உதாரணமாக...
முதல் அமைப்பில், 'மீன லக்னமாக' அமைந்த ஜாதகருக்கு, 'சந்திர பகவான்' 'பூர்வ புண்ணியாதிபதியாக' (5 ஆம் பாவம்) ஆதிபத்தியம் பெற்று, தனது பலத்தை இழந்து, 'பாக்கிய ஸ்தானத்தில்' (9 ஆம் பாவம்) அமைகிறார்.
இதனால், ஜாதகருக்கு, அவரது 'பூர்வ புண்ணிய பலன்கள்' அவை சொத்துக்களாக இருந்தாலும்... தந்தை மூலம் அனுபவிக்கும் அனுபவங்களாக இருந்தாலும்... அவரது வாழ்வில் அவர் அனுபவிக்க வேண்டிய பாக்கியங்களாக இருந்தாலும்... அதை அனுபவிக்க முடியாத நிலை ஏற்படும்
அது போல, இரண்டாவது அமைப்பில், 'ஆயுள் மற்றும் அட்டம பாவத்திற்குறிய' (8ஆம் பாவம்) 'சந்திர பகவான்'... மேலும் வலுப்பெற்று... '6 ஆம் பாவமான', 'ருண-சத்ரு-ரோக பாவத்தில்' அமைகிறார்.
இதனால், ஜாதகருக்கு, அவரது வாழ் நாள், அடிக்கடி நோய்களாலும்... எதிர்பாரா விபத்துக்களாலும்... சுமக்க முடியா கடன்களாலும் சூழப்படும் நிலை ஏற்படும். இந்த மனப் போராட்டங்களால்... ஜாதகர் நிம்மதியற்றுத் தவிக்கும் நிலை ஏற்படும்.
இந்த அமைவுகளினால் துன்பப்படும் ஜீவர்கள், திங்களூர் சென்று...'தாயார் பெரியநாயகி சமேத கைலாசநாதரை சேவித்து' அவர்களிடம், தனது நிலைகளுக்காக சரணடைந்த 'சந்திர பகவானை'... தனிப் பிரகாரத்தில் தரிசனம் செய்து வர... இந்தத் துன்பங்களுக்கு மூலமான... கர்ம வினைகளின் விளைவுகளிலிருந்து... விடுபடும் பாக்கியம் கூடிவரும்.
தொடர்ந்து பயணிப்போம்... இறைவனின் அருளோடு...
ஸாய்ராம்.



No comments:
Post a Comment