'சூரிய பகவானின்' அமைவு சுட்டிக் காட்டும் 'கர்மவினைகளுக்கு' ஏற்ப, அந்தக் கர்ம வினைகளைக் குறைத்துக் கொள்ளவும், அந்தக் கர்மவினைகளையே களைந்து போக வைப்பதற்குமான ஆலயங்களில், மிக முக்கிய பங்கை வகிப்பது, திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள, 'அருள்மிகு புண்டரீகாட்சப் பெருமாள் திருக்கோயில்'.
'செண்பகவல்லித் தாயார்' சமேத 'புண்டரீகாட்சப் பெருமாளாய்', விஷ்ணு பகவான் இந்த ஆலயத்தில் எழுந்தருளியிருக்கிறார்.
இந்த ஆலயத் 'திருமுர்த்திக்கும்'... 'சூரிய பகவானுக்கும்' மிக நெருங்கிய தொடர்பு உள்ளதை இந்த ஆலய நிர்மாணமே சுட்டிக் காட்டிவிடும். 'சூரிய - சந்திர - கருட பகவான்கள்' புடை சூழ 'புண்டரீகாட்சப் பெருமாள்', நான்கு திருக்கரங்களுடன், பிரமாண்ட சுதை சிற்பத்துடன் காட்சி தருகிறார்.
'சூரிய பகவானின்'... 'உச்ச கதிப் பயணமான', 'உத்திராயணம்' என்று அழைக்கக் கூடிய, தை மாதம் முதல் ஆனி மாத வரையிலான பயணத்தின் போதும்,
அவரின், 'நீச கதிப் பயணமான', 'தக்ஷிணாயணம்' என்ற, ஆடி மாதம் முதல் மார்கழி மாத வரையிலான பயணத்தின் போதும்,
இந்த ஆலய மூர்த்தி, இரண்டு தனித் தனி வாயில்கள் வழியாக தன் தரிசனத்தை பக்தர்களுக்கு அருள்கிறார்.
ஜாதகத்தில், இந்த 'உச்ச கதி', 'சூரிய பகவானின்' அமைவு சில சூட்சும கர்ம வினைகளையும், 'நீச கதி', 'சூரிய பகவானின் அமைவு', சில சூட்சும கர்ம வினைகளையும், வெளிப்படுத்தும்.
உதாரணமாக...
(1) ஆம் அமைவில், 'துலா லக்ன' ஜாதகருக்கு, 11 ஆம் பாவாதிபதியாகிய 'சூரிய பகவான்' லாபாதிபதியாக மட்டுமல்ல... பாதாகதிபதியாகவும் அமைகிறார். அவர் '7 ஆம் பாவத்தில்' மிக பலம் பெற்று அமையும் போது, தொடர்பு மற்றும் களத்திர பாவம் 'தகித்துக் காணப்படுவது' இயல்பே. இந்தப் பாவத்தை 'தணிக்க வைப்பதற்கு' ஏற்ற துணையோ, இணையோ இவர் வாழ்வில் வந்து சேர வேண்டியது முக்கியம்.
இந்த தகிப்பை நீக்கித் தணிப்பை ஏற்படுத்த, இந்த 'புண்டரீகாட்சப் பெருமாளை', 'உத்திராயணம்' என்ற 'உச்சகதி'... 'சூரிய பகவானின்' காலத்தில் சென்று, தாயார், பெருமாள் சமேதமாக, கருவறையில் இருந்து அருள் பாலிக்கும் 'சூரிய-சந்திர' பகவான்களை... 'உத்திராயண வாசல்' வழியாகத் தரிசித்து வர... 'சூரிய பகவானின்' தகிப்புக் குறைந்து தணிப்பு ஏற்படுதல் என்பது அனுபவமாகும்.
அதுபோல... (2) ஆம் அமைவில், 'மகர லக்ன' ஜாதகருக்கு, '8 ஆம் பாவமான', 'ஆயுள் பாவத்திற்கு' அதிபதியாகிற, 'சூரிய பகவான்'. '10 ஆம் பாவமான' ஜீவன்-கர்ம பாவத்தில்', பலமற்று... நீச நிலையில் அமரும் போது, ஜீவனம் மற்றும் தனது கடமைகளை கடந்து போவதில், எண்ணற்றத் தடைகள் வருவதைக் காணலாம்.
இந்தத் தடைகளைக் கடந்து, வெற்றி நடை போட...'தக்ஷிணாயணம்' என்ற 'நீச கதிப்' பயணத்தை 'சூரிய பகவான்' மேற்கொள்ளும் காலத்தில், தாயார் சமேத புண்டரீகாட்சப் பெருமாளை, 'தக்ஷிணாயண வாசல்' வழியாகத் தரிசித்து வர... தடைகள் நீங்கி, காரியங்கள் பலிதமாவது கண்கூடாகும்.
இறைவனின் அருளால்... தொடர்ந்து பயணிப்போம்.
ஸாய்ராம்.





No comments:
Post a Comment