'நவக்கிரகங்களின்' அமைவு, ஜாதகத்தில் உணர்த்துவது, ஜீவனின் கர்ம வினைகளைத்தான்.
நவக்கிரகங்கள் வெளிப்படுத்தும், கர்ம வினைகளின் விளைவுகளத்தான், அவை அமைந்திருக்கும் அமைவுகளையொட்டி ஜோதிடத்தில் ஆராய முற்படுகிறோம்.
அதை ஓரளவு, நிர்ணயத்தபின், அந்தக் கர்ம வினையின் சூட்சுமத்திற்கு ஏற்ப, அந்த ஜீவனை, இறைவனின் திருவடியில் ஒப்புவித்து, அங்கு, ஜீவன் மேற்கொள்ளும் பிரார்த்தனைகள், வழிபாடுகள், மற்றும் அந்த தெய்வத்துடன் அது ஏற்படுத்திக் கொள்ளும் உறவுக்கு ஏற்ப, அதன் கர்ம வினையைக் களைந்து போக வைப்பதே... ஒரு ஜோதிடனின் பிரதான கடமையாக அமைகிறது.
உதாரணமாக...
'கும்ப லக்ன' ஜாதகர் ஒருவருக்கு, '7 ஆம் பாவத்திற்கு' அதிபதியான, 'களத்திர ஸ்தானாதிபதியாகிய', 'சூரிய பகவான்'... '8 அம் பாவத்தில்'... லக்ன பாவத்திலிருந்து, மறைந்து அமர்ந்திருக்கிறார்.
'பூர்வம்' மற்றும் 'ஆயுள் ஸ்தானாதிபதியாகவும்'... பெண்களுக்கு 'மாங்கல்ய ஸ்தானாதிபதியாகவும்'... இருக்கும் 'புத பகவான்'... தனதுவிட்டிலேயே, 'ஆட்சியும் - உச்சமும்' பெற்று, வலுத்தாலும், 'லக்னத்தைப்' பொருத்தவரையில், 'மறைந்துதான்' இருக்கிறார்.
இவ்வாறு, இந்த அமைவைப் பெற்ற ஜாதகருக்கு, '8 ஆம் பாவத்தில்', 'திருமணத்திற்கும், தொடர்புக்கும்' ( 7 ஆம் பாவம்) காரணமான 'சூரிய பகவானும்', 'பூர்வத்திற்கு' தொடர்புடைய (5 ஆம் பாவம்) 'புத பகவானும்', இணைந்து, லக்ன பாவத்திற்கு மறைவைப் பெற்றிருப்பது, ஜாதகர் தனது 'பூர்வ கர்ம வினைகளின்' தொடர்ச்சியின் விளைவால், 'இந்தப் பிறவியில், திருமணத்திற்கான ஒரு துணை அமைவதில், தடங்களையும், தாமதத்தையும், அவ்வாறு அமைந்தாலும், அந்த பந்தத்தைத் தக்க வைத்துக் கொள்ள மிகப் பெரிய போராட்டத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருப்பதையும்...' சுட்டிக் காட்டுகின்றது.
இந்த தாமதத்திற்கும், தடங்களுக்குமான நிலைகளை அனுபவிக்கும் ஜாதகருக்கு, அதற்கான 'காரணம்' மட்டும் தெரிவதில்லை. இந்த ஜாதகரின், ஜோதிடச் சித்திரத்தைப் பார்க்கும், ஜோதிடருக்கும் இதே நிலைதான். 'காரியம்' தெரிகிறது, 'காரணம்' தெரிவதில்லை. அதனால், இந்த ஜாதகரை, அந்தக் 'காரணத்தையும், அதனால் விளையும் காரியத்தையும்' அறியும் 'இறை சக்தியின்' ஒப்படைக்கிறார்.
இந்த அமைவைப் பெற்ற , ஜாதகர், தஞ்சை மாவட்டம், 'திருமங்கலங்குடியில்' எழுந்தருளியுள்ள 'மங்களாம்பிகைத் தாயார்' சமேத 'பிராணநாதர் சுவாமிகளை' தரிசனம் செய்து, மனமுருகி வழிபட்டு வர, 'மங்களாம்பிகை தாயாரின்' திருவருளினால், ஜீவனின் 'பூர்வ கர்ம வினைகளின் வீரியம்' குறைந்து, தடைகளும், தடங்கல்களும், படிப்படியாக நீங்கி, தக்க வரன் வந்து அமைந்து, இல்வாழ்வு ஒளியாக மலரும் என்பதில் சந்தேகமில்லை.
தேவை, நம்பிக்கையும்... பொறுமையுமே...!
ஸாய்ராம்.


No comments:
Post a Comment