இறைவனது 'திருவடி சரணாகதியான' பரிகாரங்கள், ஜோதிடத்தில், இராசிச் சக்கரத்தில் கிரகங்களின் அமைவுகளை, அடிப்படையாகக் கொண்டு, வழிகாட்டப்படுகிறது.
கிரகங்கள், தாமே இறைவனின் திருவருள் கடாக்ஷத்திற்கு ஆட்பட்ட ஸ்தலங்களை, 'நவக்கிரக ஸ்தலங்கள்' என்று அழைக்கிறோம். அந்த ஆலயங்களில் எழுந்தருளியுள்ள 'திருமூர்த்தியிடம்', கிரகங்கள் சரணாகதியடைந்து, அந்தந்த ஆலயங்களின் பிரகாரத்தில், 'தனி முர்த்திகளாகவே' எழுந்தருளி, பக்தர்களுக்கு அருளாசிகள் வழங்குகின்றன.
இந்த நவக்கிரக ஸ்தலங்களில்...
# சூரிய பகவான் - 'திருமங்கலங்குடியில்'... 'மங்களநாயகித் தாயார்' சமேத 'பிராணநாதரிடம்' சரணடைகிறார். தாயாரையும், சுவாமியையும் வழிபட்டு, பின்னர், 'ஆடுதுறையில்' தனிக் கோவிலில் எழுந்தருளி அருள் பாலிக்கும், 'சூரிய பகவானை' வணங்கி வரலாம்.
# சந்திர பகவான் - திங்களூரில், 'பெரியநாயகித் தாயார்' சமேத 'கைலாசநாதர்' ஆலயத்தில், திருச்சுற்றில் தனிப்பிரகாரத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கிறார்.
# செவ்வாய் பகவான் - 'வைத்தீஸ்வரத்தில்' எழுந்தருளியுள்ள, 'தையல் நாயகித் தாயார்' சமேத 'வைத்தீஸ்வர சுவாமிகளின்' திருவடியில், பிரகாரத்தில், தனிச் சன்னதியில் எழுந்தருளி அருள் பாலிக்கிறார்.
# புத பகவான் - 'திருவெண்காடு' என்ற ஸ்தலத்தில், 'பிரம்ம வித்யா நாயகித் தாயார்' சமேத, சுவேதாரண்யேஸ்வரரின்' ஆலயத்தின் பிரகாரத்தில், தனிச் சன்னதியில் எழுந்தருளி அருள் பாலிக்கிறார்.
# குரு பகவான் - 'ஆலங்குடி' ஸ்தலத்தில், 'ஏலவார்க்குழலித் தாயார்' சமேத 'ஆபத்சகாயேஸ்வரரின்' ஆலயப் பிரகாரத்தில்; 'குரு தக்ஷ்ணாமுர்த்தியாகத் 'தனிச் சன்னதியில் எழுந்தருளுகிறார்.
# சுக்கிர பகவான் - 'கஞ்சனூர் ஸ்தலத்தில், 'கற்பகாம்பாள் தாயார்' சமேத 'அக்னீஸ்வரரின்' ஆலயப் பிரகாரத்தில், மூலவரைப் பிரதிபலிக்கும், உற்சவர் திருமேனியிலேயே கலந்து அருள் பாலிக்கிறார்.
# சனி பகவான் - 'திருநள்ளாறு' என்ற புனிதத் தலத்தில், 'பிராணேஸ்வரித் தாயார்' சமேத, 'தர்பாரண்யேஸ்வரரின்' ஆலயத்தின், பிரகாரத்தில், மங்களங்கள் தரும் நாயகராக, தனிச் சன்னிதானத்தில் வீற்றிருக்கிறார்.
# ராகு பகவான் - திருநாகேஸ்வரத்தில், 'தாயார் பிறயணி வானுதலால்' சமேத, 'நாகேஸ்வர சுவாமி', அருள் பாலிக்கும் ஆலயத்தின், பிரதான சன்னிதானத்தில் எழுந்தருளியிருக்கிறார்.
# கேது பகவான் - கீழப் பெரும் பள்ளம் என்ற ஊரில்;, எழுந்தருளி அருள் பாலிக்கும், 'அம்பாள் சவுந்தர்ய நாயகித் தாயார்' சமேத, 'நாகநாத சுவாமிகளின்' ஆலயத்தில், தனிப் பிரகாரத்தில் எழுந்தருளியிருக்கிறார்.
மேற்கண்ட ஆலயங்களில், 'தாயார்' சமேத 'சுவாமிகளின் திருவடிகளைப்' பணிந்து, பின்னர், இந்த 'நவக்கிரக நாயகர்களத்' தொழுது வர, ஜீவர்களின் 'கர்ம வினைகளின் முடிச்சுகள்' அவிழ்ந்து, 'கர்ம வினைகள்' களைந்து போகும் என்பது, பக்தர்கள், இன்றும் உணரும் அனுபவங்களாக இருக்கிறது.
தொடர்ந்து, 'பாகவதன்' என்ற 'இறையடியார்களின்' திருவடிச் சரணாகதியைப் பற்றி ஆய்வோம்... இறைவனின் அருளோடு...
ஸாய்ராம்.

No comments:
Post a Comment