இறைவனது 'திருவடி சரணாகதியைத்தான்'... 'இறை பரிகாரம்' என்று சொல்கிறோம்.
ஜோதிட இராசிச் சக்கரத்தில், கிரகங்களின் அமைவுகள், ஜாதகரின் 'கர்ம வினைகளின் முடிச்சுக்கான' சூட்சுமத்தை, தனது அமைவைக் கொண்டு, வெளிப்படுத்துகின்றன.
இன்றைய காலத்தில், அந்த சூட்சுமத்தை 'துல்லியமாகச் சுட்டிக் காட்டும்' வல்லமை அரிதாகிவிட்டது என்பதை மறுக்க முடியாது. ஜாதகரின் தற்போதைய சூழலைத்(காரியம்) துல்லியமாகச் சுட்டிக்காட்ட முடிந்த அளவுக்கு, அதன் பூர்வத்தை(காரணம்) சுட்டிக் காட்ட முடிவதில்லை.
ஆதலால்தான்,
- கிரகங்களின் 'அதிதேவதைகளாக' அமையும் 'இறை சொரூபங்களை', அந்த ஆலயங்களுக்குச் சென்று சரணடைதல் என்பது ஒரு முறையாகவும்...
- இந்த நவ நாயகர்கள், தாமே இறைவனிடம் சரணடைந்து, அந்த ஆலயங்களில், பிரகாரங்களில் எழுந்தருளி அருள் பாலிக்கும், ஆலயங்களுக்குச் சென்று சரணடைதல் ஒரு முறையாகவும்...
- இறைவனின் அவதாரங்களாக எழுந்தருளி அருள்பாலிக்கும் 'சத்குருநாதர்களை' சரணடைவது என்பது, ஒரு முறையாகவும்...
ஜோதிடர்களால், கடைப் பிடிக்கப் படுகிறது.
கிரகங்களின் 'அதிதேவதைகளாக' அமையும்...
* சூரிய பகவான் - சிவபெருமான்.
* சந்திர பகவான் - பார்வதித் தாயார்.
* செவ்வாய் பகவான் - முருகப் பெருமான்.
* புத பகவான் - விஷ்ணு பகவான்.
* குரு பகவான் - ஸ்ரீ தக்ஷ்ணாமூர்த்தி பகவான்.
* சுக்கிர பகவான் - லக்ஷ்மித் தாயார்.
* சனி பகவான் - சாஸ்த்தா எனப்படும் அய்யனார்.
* ராகு பகவான் - துர்க்கைத் தாயார்.
* கேது பகவான் - விநாயகர்
... 'இறை சொரூபங்களை', சரணடைவது என்பது முதல் படியாக அமைகிறது.
தொடர்ந்து, அடுத்தடுத்த, வழிபாடுகளுக்குள் பிரவேசிப்போம்... இறையருளோடு...
ஸாய்ராம்.

No comments:
Post a Comment