ஒருவர், கீழே குவித்து வைத்திருக்கும் மணலையும், சுண்ணாம்புக் கலவையையும், செங்கற்களையும் பார்த்துக் கொண்டே, மாடிப்படிகளின் வழியாக மேலே ஏறி மாடியை அடைகிறார்.
படிகளில் ஏறும் போதே... படிகளின் உறுதித் தன்மையையும், கைப்பிடிகளின் பலத்தையும் பரிசோத்துக் கொண்டடே மாடியை அடைகிறார். மாடிப்பகுதியை பார்வையிட்டு... அதன் உறுதித் தன்மையையும் கண்டு திருப்தியடைகிறார்.
மாடியில் இருந்து கீழே, மணல்... சுண்ணாம்புக் கல்... செங்கற்கள்... என ஒவ்வொன்றாகப் பார்க்கும் போதுதான், அவை அனைத்தும் 'மண்ணை' அடிப்படையாகக் கொண்டுதான் உருவாக்கப் பட்டுள்ளது... என்ற உண்மை அவருக்குப் புரிகிறது.
அதுமட்டுமல்ல... தான் ஏறி வந்த மாடிப் படிகள், மாடியின் கைப்பிடி, மாடியின் தரைத்தளம், பக்கவாட்டுச் சுவர், தரைத்தளப் பகுதி என அந்த மோத்த வீட்டின் மூலமும்... அதே 'மண்ணை' அடிப்படையாகக் கொண்டுதான் வடிவைமைக்கப் பட்டிருக்கின்றன.
கீழே இருக்கும் போது உணர்வுக்கு வராத உண்மைகள், மேலிருக்கும் போது உணர்வாகிறது.
அது போல, 'பிரம்ம தேடலில்'... இந்த உடல் தாங்கி நிற்கும் பெயர் பிரம்மல்ல... இந்த உடல் பிரம்மல்ல... இந்த பிரபஞ்சத்தில் கண்ணுக்குத் தெரியும் எந்த வஸ்துவும் பிரம்மல்ல... என்று படிப்படியாக 'இதுவல்ல... இதுவல்ல' என்று கடந்து சென்று... இறுதியில், தனக்குள்ளே இருந்து அருள் செய்து கொண்டிருப்பதுதான் பிரம்மம் என உணர்ந்து கொள்கிறோம்.
இந்த உணர்வு மேலெழும்போதுதான், இதுவரை தான், தனித் தனியாக பார்த்த பிரபஞ்ச வஸ்துக்கள்... அனைத்தும் 'பிரம்ம சொரூபமே'... என்ற உண்மை உணர்வுக்கு வருகிறது.

No comments:
Post a Comment