'ஆயுள்' - ஒரு ஜீவனுக்கு, இந்தப் புவியில், தனது கர்மவினைகளுக்கு ஏற்ப, அமையும் உடலுக்குள், வாழக் கூடிய வாழ்நாட்கள்.
இந்த வாழ்நாட்களை, அந்தந்த ஜீவர்களே, 'தமது செயல்கள் வெளிப்படுத்தும் விளைவுகளின்' மூலமாகத் தீர்மானித்துக் கொள்கின்றன என்பதைத்தான்... ஜோதிடக் கலை, 'பிறப்பு-இறப்பு' என்ற சுழற்சித் தத்துவத்தின் மூலம் நிரூபணம் செய்கிறது.
ஒவ்வொரு ஜீவனும், அதனதன் பிறவிகளில்... சேர்த்து வைத்துள்ள மொத்தக் .கர்மவினைக் கட்டுகளிருந்து. (சஞ்சித கர்மா), இந்தப் பிறவிக்கான'கர்ம வினைத் தொகுப்பை (பிராரப்பத கர்மா), சுமந்து கொண்டு பிறவியெடுக்கிறது. இந்தப் பிறவியில், அந்த ஜீவன்' எதிர்கொள்ளும் அல்லது வெளிப்படுத்தும்' செயல்களின் விளைவையும் (ஆகாமிய கர்மா) சுமந்து கொண்டு... அடுத்த பிறவியை நோக்கி நகர்கிறது. இந்த கர்ம வினைகளின் சுழற்சியையே... 'பிறவிப் பெரும் பிணி' என்பதாக வருணிக்கிறோம்.
'மகா கருணையாளரான' இறைவன், இந்தப் பிறவியை அடையும் ஜீவனுக்கு, அதன் 'மொத்தத் தொகுப்பான' (சஞ்சித கர்மா) கர்ம வினைகளிலிருந்து... 'புண்ணிய மற்றும் பாப வினைகளை' சமமாகக் கலந்து (பிராரப்த கர்மா) இந்தப் பிறவியை அளிக்கிறார். அதனால்தான், இந்தப் பிறவியில், இன்பத்தையும் துன்பத்தையும் மாறி மாறி அனுபவிக்கிறோம்.
நாம் அனுபவிக்கும் இன்ப-துன்ப நிகழ்வுகளுக்கு நமது 'பூர்வ வினைகளே' காரணம் என்பதை உணரும்போதுதான்... அதிலிருந்து விடுபடவதொன்றே... பிறவிப்பிணியிலிருந்து விடுபடுவதற்கான உபாயம் என்பதை அறிகிறோம்.
இந்த அனுபவத்தை... ஜீவன்... தனது 'ஆயுள் காலத்தில்' பெறுவதற்கு... பேருதவியாக இருப்பவரும்... 'ஜோதிடக் கலையில்', ஆயுளுக்குக் 'காரகராகவும்'... இந்த வாழ்நாட்களில் ஜீவன், 'விளைவிக்கும் அல்லது எதிர்கொள்ளும்' செயல்களுக்கான 'சாட்சியாகவும்'... 'தர்மத்தை' பரிபாலனம் செய்யக் கூடியவராகவும்... 'சனி பகவான்' அமைகிறார்.
ஜோதிடச் சித்திரத்தில்... 'சனி பகவான்'...
# 'மேஷ இராசியில்' தனது சுய பலத்தை இழந்து, 'நீச நிலையில்' சஞ்சரிக்கிறார்.
# 'துலா இராசியில்' தனது பலத்தை மீட்டு, 'உச்ச கதியில்' சஞ்சரிக்கிறார்.
# 'மகர இராசியில்' தனது ஆளுமையை நிலை நிறுத்தி 'ஆட்சி செய்கிறார்'.
# 'கும்ப இராசியில்' தனித்துவம் பெற்ற 'ஆட்சியாளராக' அமைகிறார்.
இவரின் நிலைகள் உணர்த்தும்... வெளிப்படுத்தும்... கர்ம வினைகளின் சூட்சுமங்களை... அவரருளாலும்... இறையருளாலும்... தொடர்ந்து ஆய்வோம்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment