கல்வி, அதற்கு மூலமான அறிவு, அதிலிருந்து வெளிப்படும் புத்தி... என இவற்றை வெளிப்படுத்தும் கிரகமாக... 'புத பகவான்' அமைகிறார்.
சுக வாழ்வுக்கு அடிப்படையான... பொருளாதார வளர்ச்சி, செல்வம், வீடு, வாகனம் என எண்ணற்ற சுக வாழ்வுச் சூழல்களுக்கு... 'சுக்கிர பகவான்' காரணமாக அமைகிறார்.
இவர்கள் இருவருமே, ஒருவருக்கொருவர் 'நட்புக் கிரகங்கள்' என்பதை யாவரும் அறிவோம்.
ஜோதிடக் கலையின், மூலமான 'இராசிச் சக்கரத்தில்' இந்த இரு கிரகங்களின் சூட்சும அமைவுகளே... 'கல்வியும், சுக வாழ்வும்...' எவ்வாறான நிலையை ஒரு ஜீவனின் வாழ்வில்... அவரவர்களின் 'கர்ம வினைகளுக்கு ஏற்ப' அமைகிறது, என்பதைச் சுட்டிக் காட்டும்.
'புத பகவான்', 'கன்னி இராசியில்' தனது 'உச்ச பலத்தை' அடைகிறார். அந்த வீடு அவருக்கு 'ஆட்சி வீடாகவும்' அமைகிறது. 'தனது ஆட்சி விட்டிலேயே... உச்ச பலத்தை அடையும்... வல்லமை' இவருக்கு மட்டுமே அமைகிறது. 'கல்வியின் மேன்மையைக்' குறிப்பிடும் ஸ்தானமாக இந்த 'கன்னி வீடு' அமைவதில் வியப்பில்லை.
அது போலவே, 'சுக்கிர பகவான்', 'மீன இராசியில்' தனது 'உச்ச பலத்தை' அடைகிறார். அந்த விட்டின் 'ஆட்சியாதிபதியாக'... 'குரு பகவான்' அமைகிறார். 'சுக-போகக்காரகன், தனக்காரகன் ஆட்சி பெறும் வீட்டில் உச்ச நிலை பெறுவது...' என்பதும் இவருக்கு மட்டுமே அமைகிறது. 'செல்வ சுகத்தின் மேன்மையைக்' குறிப்பிடும் ஸ்தானமாக இந்த 'மீன வீடு' அமைவதில் வியப்பில்லை.
இந்த இரண்டு இராசி வீடுகளான... 'கன்னி இராசியிலும்'... 'மீன இராசியிலும்'... இந்த இரண்டு 'நேரெதிர் தன்மைகளைக் கொண்ட'... 'புத பகவானும்'... 'சுக்கிர பகவானும்'... எவ்வாறு ஒரு சூட்சும 'பரிவர்த்தனையை' மேற்கொள்கிறார்கள் என்பதுதான்... 'காரண - காரியங்களின்' தன்மைகளை வெளிப்படுத்துகிறது.
# 'கன்னி இராசியில்'... 'புத பகவான்'... 'ஆட்சி மற்றும் உச்ச நிலையைப்' பெறுகிறார். அதே வேளையில், 'சுக்கிர பகவான்' இதே விட்டில்... 'நீச நிலையில்' பலமிழந்து காணப்படுகிறார்.
... இந்த அமைவு வெளிப்படுத்தும் சூட்சுமம், ' கல்வியில் மேன்மையை அடையும் ஜீவர்கள்... செல்வ நிலையை அனுபவிக்க முடியாது... தத்தளித்து நிற்பார்கள்' என்பதுதான்.
# 'மீன இராசியில்'... 'சுக்கிர பகவான்'... உச்ச நிலையைபெ பெறுகிறார். அதே வேளையில், 'புத பகவான்' இதே வீட்டில்... 'நீச நிலையில்' பலமிழந்து காணப்படுகிறார்.
... இந்த அமைவு வெளிப்படுத்தும் சூட்சுமம், 'செல்வச் செழிப்பில் சுக-போக வாழ்வு வாழும் வாய்ப்பைப் பெற்ற ஜீவர்கள்... கல்வி அறிவுப் பாதையில் பயணிக்க முடியாமல் போக நேரிடும்' என்பதுதான்.
இந்த 'காரண-காரிய' ... கர்ம வினை முடிச்சுகளை அறிந்து கொள்ளும் போது, ஜீவர்களின் வாழ்வில்... 'கல்வியும்... சுக போக வாழ்வும்...' எவ்வாறு ஒன்றுக் கொன்று 'எதிர் நிலைகளில்' நிற்கிறது... என்ற தெளிவு பிறந்துவிடும்.
ஸாய்ராம்.,

No comments:
Post a Comment