'பிரம்ம ஹத்தி' என்பது பற்றி ஜோதிட உலகில் பல்வேறு கருத்துக்கள் உலவி வருகின்றது. அதைபற்றிய ஒரு ஆய்வை இங்கு சமர்ப்பிக்கின்றோம். இது ஒரு தெளிவை பெருவதற்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம்.
'பிரம்மம்' என்ற பேரருள் கருணைதான்... இந்த ஜீவனது உடலில்... 'சத்து சித்து பரமானந்த சொரூபம்' என்ற வடிவத்தை அடைகிறது. அந்த 'சுத்த சைதன்யத்தை' மூலமாகக் கொண்டுதான்... இந்த ஜீவன்... தனது 'கர்ம வினைகளால்'... இந்த உடலைப் பெறுகிறது. இந்த உடலின் மூலமாகத் தனது 'கர்ம வினைகளை' அனுபவித்து... மீண்டும்... அந்த 'பரம சொரூபத்தில்' கலந்துவிடுகிறது. இந்த உலகில் பிறவியெடுத்த ஒவ்வொரு ஜீவனும்... இந்த 'சுழல் வட்டத்திலிருந்து' தப்பித்து விடுவதில்லை.
பிறவிகள் எடுப்பது ஒரு நிலை... பிறவியைத் தவிர்ப்பது ஒரு நிலை...
முதல் நிலையில்... இந்த பிறவியில், தமது 'கர்ம வினைகளை' இன்பமாகவும் - துன்பமாகவும்... இந்த ஜீவன் அனுபவித்தே தீர வேண்டும். இந்த கர்ம வினைகளை அனுபவித்துதான் கடந்தும் போக வேண்டும். இதிலிருந்து தப்பிக்க வேறு எந்த வாய்ப்போ, வழியோ... ஜீவனுக்கு இல்லை.
இரண்டவது நிலையில்... எத்தனை பிறவிகளை அடைந்தாலும்... இறுதியில் 'பரப் பிரம்மத்தை' அடைவதைத் தவிர, ஜீவனுக்கு வேறு வழியும் இல்லை.
இந்த முதல் நிலைதான். ஜீவனுக்குத் தடையாக அமைகிறது. அதாவது 'பரப்பிரம்மத்தை அடைய'... 'தமது கர்ம வினைகள் தடையாக' இருக்கிறது.
இதைத்தான்... 'பிரம்ம ஹத்தி' என்றழைக்கிறோம். 'பிரம்மம்' என்பதை ஓரளவு எளிமையாக நிர்ணயம் செய்திருக்கிறோம். 'ஹத்தி' என்பது தடை என்பதாகிறது. 'பிரம்ம ஹத்தி' என்ற சொல்லாடலை... 'பிரம்மத்தை அடைவதற்குத் தடை' என்று எளிமைப்படுத்தலாம்.
எது பிரம்மத்தை அடையத் தடையாகிறது...? என்ற கேள்வியை எழுப்பினால், அதற்குப் பதிலாக... நமது கர்மவினைகள்தான்... என்பதுதான் பதிலாகக் கிடைக்கும்.
இந்தத் தடையைத் தகர்த்தெடுக்க நம்மால் முடியும் என்பதைத்தான்... நமது தேசத்தில் அவதரித்த எண்ணற்ற மகான்களும்... மகன்னீயர்களும்... ஞானியர்களும்... சித்த புருஷர்களும்... யோகியர்களும்... நிரூபணம் செய்திருக்கிறார்கள்.
அவர்களால்தான் இது முடியும். எளிய ஜீவர்களுக்கு இது சாத்தியமாகுமா...? என்ற கேள்வி எழுந்தால்... அதுவும் சாத்தியமாகியிருக்கிறது. மகான்களின், மகன்னீயர்களின், ஞானியர்களின், சித்த புருஷர்களின், யோகியர்களின்... தொடர்புகளைப் பெற்ற, எளிய ஜீவர்கள் கடைத்தேற்றம் பெற்ற எண்ணற்ற பதிவுகள் நம் புராணங்களிலும், இதிகாசங்களிலும் கொட்டிக் கிடக்கின்றன.
அதுமட்டுமல்ல... அண்மையில் வாழ்ந்து 'இறை சொரூபமான'... இராமகிருஷ்ண பரமஹம்ஸர், லாகிரி மஹாசயர், சேஷத்திரி மகான், , யுக்தேஸ்வர் கிரி மஹராஜ், வள்ளலார், ரமண மகிரிஷி, ஸாயீ பாபா, காஞ்சிப் பெரியவர், யோகானந்த பரமஹம்ஸர், யோகி ராம்சுரத் குமார், அரவிந்தர், அன்னை... போன்ற எண்ணற்ற மகா புருஷர்களின் வாழ்வியல் வரலாறுகள் இதற்குச் சான்றாக அமைகின்றன.
இறுதியாக, 'பகவான் ரமண மகிரிஷி'... அருளிய 'ஒரு எளிய உபாயத்தை' நாம் கடைபிடிக்க... இந்தத் தடையை வென்று...'பிரம்மத்தை' அடைவது வெகு சுலபாகும்.
அது, 'உனது கர்ம வினைகளை உனது உடம்பு பார்த்துக் கொள்ளும். நீ என்னைப் பார்...!' என்பதுதான்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment