இத் திரிகோண அமைவில் ஒரு கோணம் வலுவிழந்தால்... பூர்வ புண்ணிய வினைகள் வழி நடத்தும் லீலைகளையும்... அதனால் அந்த ஜீவன் அனுபவிக்கும் பாக்கியங்களையும் பார்த்தோம்...
இந்தப் பகுதியில்... ஒரு கோணம் மட்டும் வலுத்தால்... அந்த ஜீவன் அனுபவிக்கும் 'கர்ம வினைகளின் விளைவுகளை'... ஆய்வோம்...
'மேஷ லக்னத்தில்' பிறந்த ஜாதகருக்கு... பூர்வ புண்ணியாதிபதி மற்றும் பாக்கியாதிபதி வலுவிழக்கும் போது... அந்த ஜீவன் எவ்வாறு தனது வாழ்வை நடத்தப் போகிறது என்று பார்ப்போம்.
உதாரணம் - 3
'மேஷ லக்னத்தில்' பிறந்த ஒரு ஜாதகருக்கு...
- செவ்வாய் பகவான் - மகர இராசியில்... அவிட்ட நட்சத்திரம் 1 ஆம் பாதத்திலும்...
- சூரிய பகவான் - கன்னி இராசியில் உத்திர நட்சத்திரம் 4 ஆம் பாதத்திலும்...
- குரு பகவான் - விருச்சிக இராசியில்... விசாக நட்சத்திரம் 4 ஆம் பாதத்திலும்... அமைந்திருப்பதாகக் கொள்வோம்.
# செவ்வாய் பகவான் வலுத்து... 10 மிடமான ஜீவன ஸ்தானத்தில் அமர்கிறார். அவரின் பார்வையை... லக்னத்திற்கும்... சுக ஸ்தானத்திற்கும்... பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கும் விரவ விடுகிறார்.
# சூரிய பகவான் வலுவிழந்து... 6 ஆமிடத்தில் அமைந்து விரய ஸ்தானமான 12 ஆம் இடத்தைப் பார்வை செய்கிறார்.
# குரு பகவான் 8 ஆமிடமான ஆயுள் ஸ்தானத்தில்மறைந்து அமர்ந்து... தனது 5 ஆம் பார்வையாக,12 என்ற விரய-சுக-சயன ஸ்தானத்தையும்... தனது 7 ஆம் பார்வையாக, தன-குடும்ப-வாக்கு ஸ்தானத்தையும்... தனது 9 அம் பார்வையாக, சுக ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார்.
இந்த அமைவுல் உள்ள ஜாதகருக்கு...
லக்னாதிபதியாகிய 'செவ்வாய் பகவானின்' அமைவினால்...
* இவர் தனனைத் தானேஉயர்த்திக் கொள்வார்.
* தனக்குக் கிடைக்கும் வாய்ப்பைப் பயன் கொடுத்திக் கொண்டு... கடினமான சூழலிலும்... தனது கல்வியை பூரணப்படுத்துவார். அது தனது எதிர்காலத்திற்கு ஆதாரமானது என்பதை உணர்ந்து கற்பார்.
* தனது சூழல்களைப் பொருட்படுத்தாது... ஒழுக்கம்-கட்டுப்பாடு இவற்றில் கவனம் செலுத்தி...
* இவருக்குக் கீழ் அமையும் கூட்டம் சிறியதாக இருந்தாலும்... பெரியதாக இருந்தாலும்... அதை திறம்பட வழி நடத்துபவராக இருப்பார்.
பூர்வ புண்ணியாதிபதியாகிய 'சூரிய பகவானின்' அமைவினால்...
*கடுமையான குடும்ப சூழலில் பிறந்திருப்பார்.
* பிறக்கும் போதே இவரின், பூர்வம் பெரும் கடனில் சிக்குண்டிருக்கும்.
* இவரின் கல்வி மற்றும் வாழ்விற்காக மேலும் அந்த பூர்வம் கடனாவது மட்டுமல்ல... விரயமும் ஆகும்.
* ஒவ்வொரு கடமைக்கும் கடன் படுவதும்... மிகவும் சிரமங்களுக்கு இடையே சேரும் வருமானத்தைக் கொண்டு... கடன்களை முழுவதும் அடைக்க முடியாத சூழலும் ஏற்படும்.
பாக்கியதிபதியாகிய 'குரு பகவானின்' அமைவினால்...
* ஒவ்வொரு கடமைக்கும்... தக்கத் தருணத்தில் பணம் வந்து சேரும்.
* அந்த கடமையின் இறுதி நிலை வரை பெரும் போராட்டத்தை அனுபவிக்க வேண்டியிருக்கும்.
* மிகவும் சுறு சுறுப்பானவராகவும்...புத்துணர்ச்சியுடனும்... இறை நம்பிக்கையுடன்... குரு நம்பிக்கையும் இணைந்து... வாழ்வின் ஒவ்வொரு கட்டத்தையும்... போராடி வெற்றி பெருவார்.
* தனது வாழ்வில் மிகவும் போராடி... தனது பூர்வத்தைக் காப்பார்.
* ஆனால்... அதை பராமரிக்கவும்... அனுபவிக்கவும்... முடியாமல் அதை இழந்தால் போதும் என்ற நிலைக்குத் தள்ளப் படுவார்.
* பூர்வத்தை விட்டு வெழியேறிய பின்தான்... வாழ்வில் முன்னேற்றத்தைக் காண்பார்.
* தனது வாழ்வின் கனவான ஒரு வீட்டை... மிகவும் போராட்டத்திற்குப் பின் அமைத்து... அதில் வாழும் வாய்ப்பைப் பெறுவார்.
இந்த 'திரிகோண' அமைவில்... '3 கோணங்களின் ஸ்தான பலத்தை இழந்தாலும்'... இந்த திரிகோண அமைவை சில மாறுபட்ட கோணங்களிலும் தொடர்ந்து ஆய்வோம்... இறைவனின் அருள் கருணையோடு...
ஸாய்ராம்.

No comments:
Post a Comment