இதுவரை, லக்னம்-பூர்வம்-பாக்கியம் என்ற 'திரிகோணங்கள்' வலுத்த ஜாதகரின் அமைவுகளையும்... அவை உணர்த்தும் 'நிறைந்த பூர்வ புண்ணியங்களையும்'... அதனால் அவர் அனுபவிக்கும் பாக்கியங்களையும் பார்த்தோம்.
இத் திரிகோண அமைவில்... ஒரு கோணம் வலுவிழந்தால்... பூர்வ புண்ணிய கர்ம வினைகள் வழி நடத்தும் லீலைகளை... தொடர்ந்து ஆய்வோம்...
'மேஷ லக்னத்தில்' பிறந்த ஜாதகருக்கு... பூர்வ புண்ணியாதிபதியின் மறைவு... எவ்வாறான வாழ்வை தீர்மானிக்கிறது... என்பதை ஆய்வோம்...
உதாரணம் - 2
'மேஷ லக்னத்தில்' பிறந்த ஒரு ஜாதகருக்கு...
- செவ்வாய் பகவான் - மகர இராசியில்... அவிட்ட நட்சத்திரம் 1 ஆம் பாதத்திலும்...
- சூரிய பகவான் - கன்னி இராசியில்... உத்திர நட்சத்திரம் 4 ஆம் பாதத்திலும்...
- குரு பகவான் - சிம்ம இராசியில்... உத்திரம் 1 ஆம் பாதத்திலும் அமைந்திருப்பதாகக் கொள்வோம்.
# வலுத்துள்ள 'செவ்வாய் பகவான்' லக்னாதிபதியாகி... 10 ஆமிடமான 'ஜீவன' ஸ்தானத்தில் அமர்ந்து... லக்னத்தையும், சுகத்தையும், பூர்வத்தையும் பார்வை செய்கிறார்.
# பூர்வ புண்ணியாதிபதியாகிய 'சூரிய பகவான்' 6அமிடத்தில் மறைந்து... விரய ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார்.
# பாக்கியாதிபதியாகிய... 'குரு பகவான்', பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து... பாக்கிய ஸ்தானமான தனது வீட்டையும்... லாப ஸ்தானத்தையும்... லக்னத்தையும்... பார்வை செய்கிறார்.
இந்த அமைவில் உள்ள ஜாதகருக்கு...
லக்னாதிபதியாகிய 'செவ்வாய் பகவானின்' அமைவினால்...
* தன்னைத் தானே உயர்த்திக் கொள்ளும் வல்லமையையும்...
* சிறந்த கல்வியையும்... எதிர்கால வாழ்விற்கான அனுபவங்களையும்...
* ஒழுக்கம்... கட்டுப்பாடு... நிர்வாகம்... இவற்றில் கண்டிப்பானவராகவும்...
* ஒரு கூட்டத்தை வழி நடத்துபவராகவும்... இருப்பார்.
பூர்வ புண்ணியாதிபதியாகிய 'சூரிய பகவானின்' அமைவினால்...
* தான் பிறக்கும் குடும்ப சூழல் சற்று கடுமையானதாக இருக்கும்...
* தனது தந்தையாரின் முயற்சிகள்... பூர்வ சொத்துக்களை கடன்களுக்குள் சிக்க வைத்திருக்கும்.
* ஜாதகர் தனது கல்வீக்கும், அனுபவங்களுக்குமாக... அந்த பூர்வ சொத்துக்களின் மூலம் பெற்ற கடன்களும்... விரயங்களும்தான்... மூலமாக இருக்கும்.
பாக்கியாதிபதியாகிய 'குரு பகவானின்' அமைவினால்...
* ஜாதகரின் உழைப்பினாலும்... முயற்சியினாலும்... தனது பூர்வ சொத்துக்களின் மேல் இருந்த சுமைகள் படிப்படியாகக் குறைத்து... தனது காலத்தில் அந்த பூர்வத்தை மீட்டெடுப்பார்.
* ஆனால்... அந்த பூர்வத்தை அருகில் இருந்து அனுபவிக்க முடியாத தொலைவில் ஜாதகரின் வாழ்வு அமையும்.
இதிலிருந்து... இந்த 'திரிகோண அமைவில்' ... 'பூர்வம்' என்ற ஒரு ஸ்தானத்தின் வலிமை குறையும் போது... 'கர்ம வினைகளின் சூழல்' எவ்வாறு ஒரு ஜாதகரின் வாழ்வை மாற்றுகிறது என்பதை அறியலாம்.
தொடர்ந்து... ஒரு கோணம் மட்டும் வலு\த்து... ஏனைய இரு கோணங்கள் வலுவிழந்தால்... அந்த ஜாதகரின் கர்ம வினைகள் அவரை எவ்வாறு வழி நடத்துகிறது என்பதை... ஆய்வோம்... இறைவனின் அருளோடு...
ஸாய்ராம்.

No comments:
Post a Comment