திரிகோண ஸ்தானம் : ( லக்னம் - பூர்வ புண்ணியம் - பாக்கியம் )
உதாரணம் - 1 :
'மேஷ லக்னத்தில்' பிறந்த ஒரு ஜாதகருக்கு...
- செவ்வாய் பகவான் - மகர இராசியில்... அவிட்ட நட்சத்திரம் - 1 ஆம் பாதத்திலும்...
- சூரிய பகவான் - தனுர் இராசியில்... உத்திராட நட்சத்திரம் - 1 ஆம் பாதத்திலும்...
- குரு பகவான் - சிம்ம இராசியில்... உத்திரம் 1 ஆம் பாதத்திலும்... அமைந்திருப்பதாகக் கொள்வோம்.
# இந்த ஜாதகருக்கு... லக்னாதிபதியாகிய 'செவ்வாய் பகவான்' தனது 'சுய நட்சத்திர சாரம் பெற்று' வலுத்து... 10 ஆமிடமான 'கர்ம-ஜீவன' ஸ்தானத்தில் அமர்ந்து... தனது ஸ்தான வீடான லக்னத்தையும், சுக ஸ்தானத்தையும்... சுக ஸ்தானத்தில் அமர்ந்த பாக்கியாதிபதியாகிய 'குரு பகவானையும்', பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும்... பார்வை செய்கிறார்.
# பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியாகிய 'சூரிய பகவான்' பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து... தைர்ய ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார்.
# பாக்கியாதிபதியாகிய 'குரு பகவான்' பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமைந்து... அந்த பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியாகிய... 'சூரிய பகவானுடன்' பரிவர்த்தனை பெற்று... தனது ஸ்தானமான பாக்கிய ஸ்தானத்தையும்... அதில் அமர்ந்திருக்கும் 'சூரிய பகவானையும்'... லாப ஸ்தானத்தையும்... லக்னத்தையும் பார்வை செய்கிறார்.
இந்த அமைப்பில் உள்ள ஜாதகருக்கு...
லக்னாதிபதியாகிய 'செவ்வாய் பகவானின்' அமைவினால்...
* தன்னைத்தானே உயர்த்திக் கொள்ளும் வல்லமை பெற்றவராக இருப்பார்.
* எதிர் காலத்தில் தான் பெறப்போகும் புகழுக்கும்... உயர்வுக்கும் அடிப்படையான... கல்வியையும், அனுபவங்களையும் பெறுபவராக இருப்பார்.
* ஒழுக்கத்துடனும்... கட்டுப்பாடுடனும் கூடிய சிறந்த நிர்வாகியாக இருப்பார்.
* தனது உழைப்பினால் தனது பூர்வத்தையும், அதன் புகழையும் பன்மடங்காகப் பெருக்குபவராக இருப்பார்.
* பெரும் உழைப்பாளர்களை தன்னகத்தே கொண்டவராக இருப்பார்.
பூர்வ புண்ணியாதிபதியாகிய 'சூரிய பகவானின்' அமைவினால்...
* தான் பிறந்த பூர்வம் மிகவும் புகழ் வாய்ந்ததாக இருக்கும்.
* அதன் பெருமையை மட்டுமல்ல... அதன் பாக்கியங்களையும் ஜாதகர் பூரணமாக அனுபவிப்பராக இருப்பார்.
* ஜதகரின் பூர்வ புண்ணிய அமைப்பு... ஜாதகருக்கு பெரும் தைர்யத்தை கொடுப்பதாக இருக்கும்.
* தனது புர்வ புண்ணியத்தினால் தான் வாழ்வை அமைத்துக் கொள்வது மட்டுமல்ல... தனக்குப் பின் வரும் தலைமுறக்கும் சேர்த்து இவர் பூர்வத்தை பன்மடங்கு பெருக்குபவராக இருப்பார்.
* அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் இவரின் பங்களிப்பு பெருமை மிக்கதாக இருக்கும்.
பாக்கியாதிபதியாகிய 'குரு பகவானின்' அமைவினால்...
* தான் பிறந்த பூர்வத்தை கட்டிக் காப்பாற்றுபவராகவும்... அதை பன்மடங்காகப் பெருக்குபவராகவும்... தர்ம வழியில் நடப்பவராகவும்... தனது தந்தை இருப்பார்.
* தனது தந்தையாரின் அரவணைப்பையும்... அவரது புகழையும்... அவரின் சுக-பாக்கியங்களையும்... தனது வாழ்வு முழுவதுமக பூரணமாக அனுபவிப்பராக இருப்பார்.
* ஜாதகரின் ஒவ்வொரு முயற்சிக்கும் பெரும் உதவியாகவும்... ஊக்கமாகவும் இருக்கும் தந்தையினால்... ஜாதகர் பெரும் தைர்யம் வாய்ந்தவராக இருப்பார்.
* ஜாதகரின் உழைப்பினால் பெருகும் செல்வத்தையும்... சிறந்த முறையில் பூர்வத்துடன் இணைத்து... பராமரிக்கும் தந்தையின் பேருதவியைப் பெற்றவராக இருப்பார்.
* ஜாதகர் சேர்க்கும் பெயரும்... புகழும்... சொத்துக்களும்...இவரது வாழ்வின் பாக்கியங்களை பூரணமாக்குவதுடன்.. இவரது சந்ததியர்களின் வாழ்வும் பூரணமானதாக இருக்கும்.
... இதுவரை, லக்னம்-பூர்வம்-பாக்கியம் என்ற 'திரிகோணங்கள்' வலுத்த ஜாதகரின் கிரக அமைவுகளையும்... அவை உணர்த்தும் 'நிறைந்த பூர்வ புண்ணியங்களையும்'... அதனால் அவர் அனுபவிக்கும் பாக்கியங்களையும் பார்த்தோம்.
இந்த திரிகோண அமைவில்... இரு கோணங்கள் மட்டும் வலுவடைந்து... ஒரு கோணம் வலுவிழந்தால்... அவரின் 'பூர்வ புண்ணிய பலத்தினால்'... ஒருவரின் வாழ்வு எவ்வாறாக மாற்றமடைகிறது...?
அதைத் தொடர்ந்து... உதாரண ஜாதக அமைப்பைக் கொண்டு... ஆய்வோம்... இறைவனின் அருளோடு...
ஸாய்ராம்.

No comments:
Post a Comment