லக்னம் - கன்னி, நவாம்ஸ லக்னம் - மீனம், இராசி - கும்பம், நட்சத்திரம் - சதயம் 4 ஆம் பாதம், தசா புத்தி இருப்பு - ராகு பகவானின் தசாவில் 01 வருடம்; 03 மாதம்; 28 நாட்கள், நடப்பு தசா, புத்தி - 23.10.2019 முதல் 23.04 2020 வரை 'ராகு பகவானின்' தசாவில் 'சந்திர பகவானின் புத்தி'.
லக்னாதிபதியாகிய 'புத பகவானும்', பஞ்சாமாதிபதியாகிய 'சனி பகவானும்', பாக்கியாதிபதியாகிய 'சுக்கிர பகவானும்'... 'திரி கோணாதிபதிகளாக'... ஜாதகத்தில் வலுத்துக் காணப்படுகிறார்கள்.
இந்தப் புது வருடப் பிறப்பின் போது, ஜாதகத்தில் அமைந்திருக்கிற அனைத்துக் கிரகங்களும்... 'குரு பகவானின்' தொடர்புடனும்... அவரின் கட்டுப்பாட்டுக்குள்ளும் அமைவது... 'குருவின் அருளன்றி' வேறேது...!
# லக்னாதிபதியாகிய... 'புத பகவானும்', பஞ்சாமாதிபதியாகிய... 'சனி பகவானும்'... குரு பகவானுடன் இணைந்திருக்கிறார்கள்.
# தைர்ய-அட்டமாபதியாகிய... 'செவ்வாய் பகவானை', குரு பகவான் தனது நட்சத்திர சாரத்தால் இயக்குகிறார்.
# சுகம்-களத்திர ஸ்தானாதிபதியாக... 'குரு பகவானே' ஆட்சி பெற்று பலத்துடன்... தனது விட்டிலேயே அமைகிறார்.
# தன-பாக்கியாதிபதியாகிய... 'சுக்கிர பகவான்' அமர்ந்த ஸ்தானாதிபதி 'சனி பகவான்', குரு பகவானுடன் இணைந்திருக்கிறார்.
# லாபாதிபதியாகிய 'சந்திர பகவான்' அமர்ந்த ஸ்தானாதிபதி 'சனி பகவான்'... சந்திர பகவானைப் பார்த்தும்... குரு பகவானுடன் இணைந்தும் இருக்கிறார்.
# சுக-சயன-விரயாதிபதியாகிய... 'சூரிய பகவான்' குரு பகவானுடன் இணைந்து இருக்கிறார்.
# 'கேது பகவான்'... குரு பகவானை இயக்கினாலும்... சுக ஸ்தானத்தில் அவருடன் இணைந்து, அவரது வீட்டிலேயே சங்கமமாகியிருக்கிறார்.
# 'ராகு பகவான்'... தசம் கேந்திரமான ஜீவன் ஸ்தானத்தில்... தனது சுய சாரத்தில் இருந்தாலும்... குரு பகவானின் பார்வையைப் பெறுகிறார்.
இருப்பினும்... 29.11.2018 லிருந்து 23.10.2019 வரை நடந்த 'ராகு பகவானின் தசாவின் சூரிய பகவானின் புத்திக் காலம்'... வீடு, நாடு என்ற இரு நிலைகளையும்... ஜீவனம் என்ற வெற்றி எதிர் நீச்சலுடனும், நிர்வாகம் என்ற போராட்டத்துடனும், அதில் தர்மம்-நியாயம்-நேர்மை என்ற நிலைகளைக் கடைப்பிடிக்க நேர்ந்ததில் இருந்த மன உளைச்சலுடனும்... கடந்து போக வைத்தது. விரயங்கள்... அது 'மன நிம்மதியாக இருந்தாலும்', 'பொருளாதர ஏற்றமாக இருந்தாலும்'... அதில் 'நிறைவு இல்லாமல்' இருக்கலாம், ஆனால், 'கடமைகளை பூரணமாக்கியதில்' என்னவோ... திருப்திகரமாக அமைந்தது.
நடந்து கொண்டிருக்கும்... 'சந்திர பகவானின்' புத்திக் காலமான... 23.10.2019 லிருந்து 23.04.2020 வரையிலான காலம்... வீடு, நாடு என்ற இரு நிலைகளையும்... பெரும் போராட்டகளமாக மாற்றியிருப்பதை... 'சந்திர பகவானின்' அமைவே சுட்டிக் காட்டுகின்றது. லாபாதிபதியாகிய 'சந்திர பகவான்' ருண-ரோக-சத்ரு ஸ்தானத்தில்... 'ராகு பகவானின்' சாரம் பெற்று... சுக-சயன-விரய ஸ்தானத்தை பார்ப்பதிலிருந்தே... இதை உணரலாம்.
இந்த அமைவு,
* மன நிம்மதியை இழக்கவைக்கும்.
* நிம்மதியை இழந்த மனதில் குழப்பங்களை ஏற்படுத்தும்.
* அதனால், குடும்ப-பொருளாதார நிலைகளில் முடிவுகள் எடுப்பதில் தயக்கமும், தாமதமும் ஏற்படும்.
* தேவையான, நேர்மையான, தைர்யமான, தர்மமான, கடமைகளுக்கான முடிவுகளும் சோதனைக்குள்ளாகும்.
தொடரப் போகும்... 'செவ்வாய் பகவானின்' புத்திக் காலமான... 23.04.2020 லிருந்து 29.04.2021 வரையிலான காலம்... மிக நல்ல காலமாக அமைகிறது. தைர்ய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கின்ற 'செவ்வாய் பகவானை' இயக்குவது... 'குரு பகவானே'. மேலும்... 'கெட்டவன் கிட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம்' என்ற நிலையில் 'செவ்வாய் பகவான்'... அம்ஸத்தில் 'நீச நிலையில்' அமர்கிறார். இந்த அமைவு...
* 23.10.2019 லிருந்து 23.04.2020 வரையில் நிலவி வந்த,குழப்பங்களை நீக்கி... தயக்கங்களையும், தாமதங்களையும் கடந்து... சோதனைகளிலிருந்து விடுபட்டு... கடமைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் காலமாக அமையும்.
* கடந்த காலத்தில் திட்டமிட்டு, பூர்த்தி செய்யப்படாத நியாயமான திட்டங்கள் அனைத்தும் வெற்றியடையும்.
* நமக்கு எதிராக இருந்த அனைத்துத் தடைகளும்... தவிடு பொடியாகும்.
* இதுவரை, நமக்கு எதிராக இருந்த எதிர்ப்புகள் அனைத்தும்... நமது நிலைப்பாடுகளின் நியாயத்தை உணர்ந்து... நமக்குச் சாதகமாக செயல்பட ஆரம்பிக்கும்.
* கனவுகளாக மனதில் உறுதி பெற்றிருந்த 'ஜீவனத்திற்கான திட்டங்கள்' அனைத்தும்... முழு வடிவம் பெற்று... வெற்றிப் பாதையில் நடைபோடும்.
* நாட்டிலும்... விட்டிலும் அமைதி நிலவும்.
பிறக்கும் இந்த 'ஆங்கிலப் புது வருடமான 2020'... வீட்டிற்கும், நாட்டிற்கும் மாற்றமாகவும்... ஏற்றமாகவும் அமைய... இறைவனை பிரார்த்திக்கின்றோம்...
ஸாய்ராம்.

தகவலுக்கு மிக்க நன்றிகள் அண்ணா
ReplyDeleteநன்றி.
Delete