முன் பதிவின் தொடர்ச்சி...
('... இந்த இரண்டு 'நிழல் கிரகங்களும்'... வலமிருந்து - இடமாக (Anti Clock-Wise) சுற்றி வருவதாக ரிஷிகள் அமைத்திருப்பதற்கான காரணமே... 'அவை அந்த ஜீவனின் வாழ்வை பின்னோக்கிப் பார்க்கிறது...' என்பதை உணர்த்துவதற்காகவே...')
'அவை ஜீவனின் வாழ்வை பின்னோக்கிப் பார்க்கிறது...' என்பதற்கு ஆதரமாக, 'புராணத்திலும்... கோவில் ஆகமவிதிகளிலும்' இதற்கான சான்றுகள் கிடைக்கின்றன.
இந்த நிழல் கிரகங்களுக்கு, கிரகங்களுக்கு உண்டான அதிகாரம் வழங்கியது பற்றிய... 'புராண வழியான கதை' உலவிவருவதை... அனைவரும் அறிவோம்.
அதன்படி, பால்கடலைக் கடைந்து 'அமிர்தம்' பெற்ற நிலையில்... அதை 'தேவர்களுக்கும்'... 'அசுரர்களுக்கும்' பிரித்துக் கொடுக்கும் பொறுப்பை... 'மஹா விஷ்ணு பகவான்' ஏற்றுக் கொண்டார். 'மோகினியின்' ரூபத்தில், பகவான் தேவர்களை ஒருபுறமும்... அசுரர்களை மறுபுறமும் அமரவைத்து... முதலில் தேவர்களுக்குப் பறிமாறுகிறார். 'சுவர்பாணு' என்ற அசுரன், தேவர்களின் உருவத்தை எடுத்துக் கொண்டு... அமிர்த்தை வாங்கி பருகி... அமர வாழ்வை அடைந்தான். இதனைக் கண்ட 'சூரிய-சந்திர பகவான்கள்'... 'விஷ்ணு பகவானிடம்' தெரிவிக்க, அவர் தனது கையில் வைத்திருக்கும் மத்தைக் கொண்டு அடித்ததால், தலை வேறு - உடல் வேறாக சுவர்பாணுவின் உடல் பிரிந்து போனது. அமிர்தத்தை உண்ட காரணத்தால், மரணிக்காமல்... 'பிரம்ம தேவரிடம்' வரமிருந்து... தன்னைத் தண்டிக்கக் காரணமாகவிருந்த... 'சூரிய-சந்திர பகவான்களை' பீடிக்க... 'நவக்கிரக பரிபாலனத்தில்'... 'ராகு - கேது பகவான்கள்' என்ற 'நிழல் கிரகங்களாக' பொறுப்பேற்றுக் கொண்டனர்.
'இடமிருந்து, வலமாக' சுற்றி வரும் 'சூரிய - சந்திர பகவான்களை'... 'ராகு-கேதுக்கள்' பீடிக்க வேண்டுமெனில்... அவர்கள், 'வலமிருந்து, இடமாகத்தானே' சுற்றி வர வேண்டும். இதைத்தான்... இந்த புராண வரலாறு உறுதிப்படுத்துகிறது.
கோவில்கள், அவற்றிற்கான 'ஆகம விதிகளின்' படியே நிர்மாணம் செய்யப் படுகின்றன. 'ராஜ கோபுரம் முதல் கருவறை வரையிலும்'... 'சிலா ருபங்கள் முதல் சித்திரங்கள் வரையிலும்'... அனைத்தும் 'ஆகம விதிகளுக்கு' உடபட்டே அமைகின்றது.
அதன்படி... சிவாலயங்களில், பிரகாரச் சுற்றில்... 'சண்டிகேஸ்வரருக்கு' முன்பாக... 'நவக்கிரகங்கள் சந்நதி' அமைக்கப் படுகிறது.
இந்த அமைவின்படி... 'மேற்கு திசையை' நோக்கியிருக்கும் 'சனி பகவானுக்கு' வலது புறமாக (வட-மேற்கு திசையில்), 'சர்ப்பத்தின் தலையுடன்' கூடிய 'கேது பகவானும்'... இடது புறமாக (தென்-மேற்கு திசையில்), 'சர்ப்பத்தின் உடல் பகுதியுடன்' கூடிய 'ராகு பகவானும்' அமைந்திருப்பதைக் காணலாம். ஆயுள் காரகரான... 'சனி பகவானைன்' வலது புறம் தனது தலையை வைத்து... இடது புறமாக உடல் பகுதி அமைந்திருப்பதிலிருந்தே... இந்த 'சர்ப்பம்' வலமிருந்து - இடமாகச் சுற்றி வருவதை' நவக்கிரக அமைப்பிலிருந்து உறுதி செய்யலாம்.
இந்த 'ராகு - கேது பகவான்களின்'... ஏனைய சூட்சுமங்களைத் தொடர்ந்து ஆய்வோம்... இறைவனின் அருளோடு...
ஸாய்ராம்.



No comments:
Post a Comment