'யோகங்கள்'... ஜோதிடக்கலையின் வல்லுனர்களுக்கும்... ஆர்வலர்களுக்கும்... பயனாளர்களுக்கும்... மிகவும் பிடித்தமான ஒரு அங்கம்.
இந்த 'யோகங்களின் அமைவு'... ஜாதகர்களின் வாழ்வில்... அவரவர்களின் கர்ம வினைகளுக்கு உட்பட்டு... எவ்வாறு பயனளிக்கப் போகிறது...? என்பதைத்தான் இந்தத் தொடரில் ஆய்வதற்கு முற்படுகிறோம்.... இறைவனின் அருளோடு...
'சந்திர மங்கள யோகம்' ( சந்திர - செவ்வாய் பகவான்களின் இணைவு) :
பொதுவாக ... 'சந்திர பகவானுக்குக்' கேந்திரங்களில் (லக்னம்-சுகம்-களத்திரம்-ஜீவனம் என்ற 1-4-7-10) 'செவ்வாய் பகவான்' அமைவதைக் குறிப்பிட்டாலும்...
'சந்திர பகவானுடன்... செவ்வாய் பகவான்' இணையும் போதும், 'சந்திர பகவானுக்கு சம-சப்தம ஸ்தானத்தில் செவ்வாய் பகவான்' அமையும் போதும்... இந்த யோகத்தின் அமைவு பூரணம் பெறுவதை அனுபவத்தில் உணரலாம்.
ஒரு ஜீவனின் 'கர்ம வினைகள்' என்ற 'பூர்வ வினைகளின் விளைவுகள்தான்'... 'மனம்' என்ற இடத்திலிருந்து 'எண்ணங்களாக' உற்பத்தியாகிறது. இந்த எண்ணங்களுக்கு ஏற்ப செயல்படும் ஜீவன்... அதை வெளிப்படுத்தும் போதும்... எதிர்கொள்ளும் போதும்... ஏற்படும் இன்ப-துன்ப அனுபவங்களை... மனோகாரகராக இருந்து 'சந்திர பகவான்' பிரதிபலிக்கிறார்.
மனதில் தோன்றும் எண்ணங்கள் யாவும் செயல் வடிவமாவதில்லை. அவை 'மண்ணில் தூவப்பட்ட விதைகளைப் போல' உயிருடன்தான் இருக்கும். அதில் எந்த விதை இப்போது முளை விட வேண்டுமோ, அதை, நமது 'பூர்வ வினைகள்தான்' தீர்மானிக்கின்றன. அந்த தீர்மானிக்கப்பட்ட எண்ணத்திற்கான... செயல் வடிவத்தையும்... அதற்கான ஆற்றலையும் தருபவர்தான்... 'செவ்வாய் பகவான்'.
பூமிக்காரகன்... சகோதரக்காரகன்... தைரியக்காரகன் என்று அழைக்கப் பட்டாலும்... 'செவ்வாய் பகவானின்' மகத்துவமே, இவர் அளிக்கும் 'ஆற்றலில்தான்' அடங்கியிருக்கிறது. ஒழுங்கு... கட்டுப்பாடு... சீருடைப் பணி... சிறந்த நிர்வாக மேலாண்மை... என, எண்ணற்ற குணங்களுக்கு இவர் காரணகர்த்தாவாக இருக்கிறார்.
இந்த 'மனோகாரகரான' சந்திர பகவானுடன்... 'ஆற்றல்காரகரான' செவ்வாய் பகவான் இணையும் போது...
மனதில் தோன்றும் எண்ணங்கள் யாவும் வலிமை பெறுகிறது. 'நினைத்ததை... நடத்தியே... முடிப்பவன், நான் ! நான்!...' என்ற வரிகளுக்கு ஏற்ப... நினைத்த காரியங்களை... நினைத்தபடி செயல்படுத்தும் ஆற்றல் ஒருவருக்கு வந்து சேருகிறது. 'எண்ணங்கள் சொல்லாவதும்... பிறகு அது போலவே செயலாவதும்...' எவ்வாளவு மகிழ்ச்சியான அமைவு.
ஆனால், இந்த அமைவு ஒருவரின் ஜாதகத்தில் அமையும் 'ஸ்தானங்களுக்கு ஏற்பவும்'... 'அவரவரின் கர்ம வினைகளுக்கு ஏற்பவுமே'... இந்த யோகத்தை ஜாதகர்கள் அனுபவிப்பர்.
உதாரணமாக... 'மேஷ லக்னத்தில்' பிறந்த ஒருவருக்கு... 'சந்திர- செவ்வாய் பகவான்களின் இணைவு'... 5 ஆமிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமைவதாகக் கொள்வோம். 'பழம் நழுவிப் பாலிலும்... அதுவும் நழுவி வாயிலும் விழுந்ததைப் போல...' இந்த அமைவைப் பெற்ற ஜாதகர்... பெயரும், புகழும் பெற்ற குடும்பத்தில் ஒரு வாரிசாகப் பிறப்பார். 'Baby born with Silver Spoon'... என்று இவரது வாழ்வை வருணிக்கலாம். தந்தையின் புகழே... இவரது வாழ்வை நடத்திக் கொண்டு போகும். பின், இவரது எண்ணங்கள் ஈடேற இவருக்கு ஏது தடை...! தந்தையைப் போலவே... இவரும் ஒரு பிரபலமான நிலையை அடைவார். அவரையும் கடந்து இவர் புகழ் பெறுவார்.
இதே அமைவு... இந்த 'மேஷ லக்னத்தில்' பிறந்தவருக்கு... 11 ஆமிடமான 'பாதக ஸ்தானத்தில்' அமைவதாகக் கொள்வோம். இந்த 'சந்திர மங்கள யோகமே' இவரை அதள பாதாளத்தில் தள்ளி விடும்.
மேற்கூறிய... அனைத்து அம்சங்களும் நிறைந்தவராக இருந்த, இவரது வாழ்வு... இவரின் பொறுப்பேற்பிற்குப் பின்... பெரும் சரிவை நொக்கிச் செல்லும். இவரின் எண்ணங்கள் எல்லாம் மறைமுகமான... திரை மறைவான... அதர்மத்தை நோக்கி நகர வாய்ப்பு கூடிவருமாதலால்... அவையாவும் இவருக்கு எதிராகி... புகழ்ச்சியிலிருக்கும் இவரை... இவரின் செயல் பாடுகளாலும்... பிடிவாதத்தினாலும்... கீழ் நிலைக்கு தள்ளி விடும் அளவிற்கான அபாயம் நிறைந்ததாகிவிடும்.
இதைப் போலவே...ஏனைய யோகங்களையும்... இறைவனின் அருளோடு... ஆய்வதற்கு முற்படுவோம்...
ஸாய்ராம்.

No comments:
Post a Comment