Tuesday, November 5, 2019

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 31. 'ஏழாம் இடம்' என்ற 'இணையும் - துணையும்' - பகுதி 3. துணை (இல்வாழ்க்கைத் துணை)

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 31. 

'ஏழாம் இடம்' என்ற 'இணையும் - துணையும்' - பகுதி 3. 

துணை (இல்வாழ்க்கைத் துணை)





'... நமக்கு உடன் படாதவர்களின் தொடர்பையும், துணையையும் கொண்டுதான்... இந்த உலக வாழ்வில்... நமது 'பூர்வ வினைகள்' என்ற 'கர்ம வினைகளைக்' கடந்து போக வேண்டும்...'

                                                                    ~~~~~~~~

'... நட்பு என்ற இணைவு... ஒரு பந்தத்தை ஏற்படுத்துகிறது... ஆனால். 'பற்றை ஏற்படுத்துவதில்லை'...'

                                                                     ~~~~~~~~

'... மாறாக... இந்த 'பந்தத்துடன்... பற்று' என்பது சேர்ந்தால்...? '

அந்த 'துணை' ... ஒரு 'இல்வாழ்க்கை' என்ற பந்தமாக மாறிப் போகிறது. 'இல்-வாழ்க்கைத் துணை' என்று உச்சரிக்கும் போதே...'மகிழ்ச்சி' என்பதைக் கடந்து பெரும் 'பொறுப்புகள்'... என்ற உணர்வுதான் ஓங்கி நிற்கிறது... இருபாலார்க்கும். இதனால்... இந்த பந்தம் ஒரு பற்றுதலுக்கு உள்ளாவதைத் தவிர்க்கவே முடியாமல் போகிறது.

அதனால்தான், இந்தப் 'பற்றை' உருவாக்கும் 'துணை' என்ற 'இல்வாழ்க்கை பந்தம்'...

~ எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகிறது.

~ பாகுபாடுகளுக்கு உட்பட்டுப் போகிறது. ( மதம் - இனம் - பொருளாதராம்                      போன்ற...)

~ வயது வரம்பு இலக்காகிறது.

~ மனதில் இருப்பதையும்... தோன்றுவதையும், பகிர்ந்து கொள்ளலாமா...?                   என்ற  தயக்கத்துடனேயே... இருக்கிறது.

~ மற்றவர்களின் குறையையே... பெரிதாக்கிப் பார்ப்பது. அதாவது... மனிதர்கள்        எப்போதும் குறைகளுடன் இருப்பவர்கள்தான்... என்பதை உணர்ந்து                        கொள்ளாமல் போவது.

~ சிறு-சிறு பிரச்சனைகளை பெரிதாக்குவதும்... அதைத் தொடர்ந்து விட்டு                  விடாமல் பிடித்துக் கொள்வதும்... மன்னிப்பு கேட்டுக்கொள்வதை விட்டு              விட்டு அதை எதிர்-பாலாரிடமிருந்து எதிர்பார்ப்பது.

~ இடம்-தூரம்-காலம் எல்லாம்... இந்த உறவில் பெரும் மாற்றத்தை                                உருவாக்குவதால்... அதற்குள்ளேயே கட்டுண்டு கிடப்பது.

~ ஒரு துன்பம் என்று நிகழும் போது... நிவாரணத்தைத் தேடுவதை                                   விட்டுவிட்டு... அதற்கு யார் காரணம்...? என்ற தேடுதலில்... ஒருவரை                      ஒருவர் குறை கண்டுபிடித்து... வெறுப்புக்குள்ளாவது.

இத்தனை சிக்கல்கள்... இந்த பந்தத்தில் இருப்பதனால்தான்... இந்த 'இல்-வாழ்க்கை' என்ற 'துணையை' சேர்க்கும் போது மட்டும்...

# சொந்தத்தில் இணைப்பது.

# உறவுக்குள் இணைப்பது.

# குலம் - குடி - குடும்பம் சார்ந்து சேர்ப்பது.

# பெயர் பொருத்தம் பார்த்து சேர்ப்பது.

# நட்சத்திரங்களைக் கொண்டு பொருத்தங்கள் பார்த்து இணைப்பது.

# இருவரது 'ஜாதகங்களையும்' தனித்தனியாக ஆய்ந்து... அதற்குப் பின்                         இணைப்பது.

என்ற எண்ணற்ற வழிமுறைகளை... 'ஜோதிடம்' என்ற கலை அளிக்கிறது.

'கர்ம வினைகளைக்' களைந்து போகும் பாதையாக இந்த 'இல்-வாழ்வு' அமைவதால்தான்... இந்த இணைவைப் பற்றி முன்னோர்கள்...

'திருமணம்... இது ஆயிரம் காலத்துப் பயிர்...!' என்று... ஆழ்ந்து சிந்தித்திருக்கிறார்கள்.

இதன் வழியே... நாமும் சிந்திப்போம். செயல் படுவோம்.

கர்ம வினைகளைக் களைந்து... கடமைகள முடித்து... இறைவனடியில் கலந்து போகும் வழிமுறைகள் ஆய்வோம்.

ஸாய்ராம்.


No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...