Monday, November 4, 2019

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 29. 'ஏழாம் இடம்' என்ற 'இணையும் - துணையும்' - பகுதி 1.

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 29.

'ஏழாம் இடம்' என்ற 'இணையும் - துணையும்' - பகுதி 1.




'லக்னத்தில்' இருந்து ஆரம்பித்து.. ஒரு ஜீவன் தனது வாழ்வுப் பாதையை... 'குடும்பம் - சகோதரம் - தாய் - பூர்வம்' என்று கடந்து... தனக்கு விதிக்கப்பட்ட... 'பூர்வ வினைகள் தரும் அனுபவங்களை'... 'சத்ரு என்ற ஸ்தனத்தில்' அனுபவிக்க ஆரம்பிக்கும் போதுதான்... அந்த ஜீவனுக்கு 'தொடர்பு' என்ற 'ஏழாம் இடத்தின்' மூலமாக...'இணையும் - துணையும்' ஏற்படுகிறது.

நமது 'பூர்வ வினைகள்'... இரு விதமாகத்தான் செயல் படுகின்றன...

1. நாமாக திட்டமிட்டு செயல் படுவது...

2. நாம் எதிர்பார்க்காத போது... நமக்குத்... தாமாக நிகழ்வது...

... இந்த இரண்டு விதமான செயல் வடிவங்களுக்கு மூலமாக இருப்பதுதான்... இந்த 'இணையும் -துணையும்'

பொதுவாக இந்த 7 ஆம் ஸ்தானத்தை... 'நட்பு - களத்திரம் - தொடர்பு - பங்குதாரர்...' என்று எவ்வாறு அழைத்தாலும்... அவை அனைத்தும் இந்த 'இணை - துணை' என்ற 'பொதுக் கட்டமைப்பில்' வந்து சேர்ந்துவிடும்.

நமது 'கர்ம வினைகளின்' தொடர்புதான் 'சேர்க்கைக்கும்' காரணமாகிறது. அந்த சேர்க்கையால் நமக்கு 'இன்பமும்' விளையலாம்... தாளாத 'துன்பமும் விளையலாம். அதை சூட்சுமமாக 'ஜாதக சித்திரம்' சுட்டிக் காட்டிவிடும்.

ஒவ்வொரு ஸ்தானத்திற்கும் நேரெதிரான 7 ஆவது ஸ்தானம்தான்... இந்த 'தொடர்பு ஸ்தானம்'. நன்றாக ஊன்றிப் பார்த்தால்... 7  ஆமிடமான தொடர்பு ஸ்தானாதிபதி... பொதுவாகவே 'நட்புக் கிரகமாக' அமையமாட்டார்.

# 'மேஷ' இராசியாதிபதியான ';செவ்வாய் பகவானுக்கு' ... 7 ஆமிடமான தொடர்பு ஸ்தானாதிபதியாக... 'துலா' இராசியாதிபதியாகிய... 'சுக்கிர பகவானாக' அமைவார்.

# 'மிதுன' இராசியாதிபதியாகிய 'புத பகவானுக்கு' ... 7 ஆமிடமான தொடர்பு ஸ்தானாதிபதியாக ... 'தனுர்' இராசியாதிபதியாகிய ... 'குரு பகவான்' அமைவார்.

# 'கடக' இராசியாதிபதியாகிய 'சந்திர பகவானுக்கு' ... 7 ஆமிடமான தொடர்பு ஸ்தானாதிபதியாக ... 'மகர' இராசியாதிபதியாகிய... 'சனி பகவான்' அமைவார்.

# 'சிம்ம' இராசியாதிபதியாகிய 'சூரிய பகவானுக்கு' ... 7 அமிடமான தொடர்பு ஸ்தானாதிபதியாக ... 'கும்ப' இராசியாதிபதியாகிய ... 'சனி பகவான்' அமைவார்.

இதிலிருந்து நமக்கு புலப்படும் 'சூட்சுமம்'... 'நமக்கு உடன்படாதவர்களின்' தொடர்பையும், துணையையும் கொண்டுதான்... இந்த உலக வாழ்வில்... நமது 'பூர்வ வினைகள்' என்ற 'கர்ம வினைகளைக்' கடந்து போக வேண்டும் என்பது...

இதை, எவ்வாறு இந்த இணை என்ற 'நட்பும்'... துணை என்ற 'உறவும்' கொண்டு கடந்து போகிறோம் என்பதைத் தொடர்ந்து பார்ப்போம்... அடுத்தடுத்த பதிவுகளில்... இறைவனின் அருளோடு...

ஸாய்ராம்.

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...