ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 28.
காரகத்துவங்களும், ஆதிபத்தியங்களும் ; பகுதி 5.
சூட்சுமம் 2 : ஆதிபத்தியங்கள், மாரகத்துவத்துக்கும்... பாதகத்துவத்துக்கும் கட்டுப்பட்டவைகள்.
இந்த சூட்சுமத்தில், பாதகத்துவத்துக்கு கட்டுப்பட்டு ஆதிபத்தியம் எவ்வாறு தனது கடமையை ஆற்றுகிறது என்பதை முந்தைய பதிவில்... உதாரணம் 1 ன் வழியே பார்த்தோம்.
தற்போது... மாரகத்துவத்துவத்துக்கு... இந்த ஆதிபத்தியம் எவ்வாறு கட்டுப்பட்டு செயலாற்றுகிறது என்பதை... இன்னொரு உதாரணத்தின் மூலமாகப் பார்ப்போம்.
உதாரணம் 2 :
'மேஷ லக்னத்தில்' பிறந்திருக்கும் ஒருவருக்கு 2 ஆமிடமான 'தனம் - வாக்கு - குடும்பம்' என்ற ஸ்தானமும்... 7 என்ற 'துணை - இணை' என்ற ஸ்தானமும்... 'இரு மாராகாதிபதிகளாக' அமைகிறது.
# 2 ஆமிடமான 'தனம் - வாக்கு - குடும்பம்' என்ற ஸ்தானத்திற்கு ஆதிபத்திய ரீதியாக... ஸ்தானாதிபதியாக 'சுக்கிர பகவான்' அமைகிறார்.
# 7 ஆமிடமான 'துணை - இணை' என்ற ஸ்தானத்திற்கும் ஆதிபத்திய ரீதியாக... அதே 'சுக்கிர பகவான்' தான் ஸ்தானாதிபதி அந்தஸ்த்தைப் பெறுகிறார்.
# இவ்வாறு... 'சுக்கிர பகவான்' இந்த மேஷ லக்னத்திற்கு... இந்த இரண்டு ஆதிபத்தியங்களும் பொறுப்பேற்றுக் கொள்வதுடன்... 'இரண்டு மாராகஸ்தானங்களுக்கும் பொறுப்பாகிறார்.
ஆதிபத்திய ரிதியாக பலம் பெற்ற இந்த 'சுக்கிர பகவான்' இந்த ஜாதகருக்கு சிறு வயது மற்றும் இளமையில்... பிறந்த குடும்பத்தில் செல்வ நிலைகளில் நிறைவையும்... அழகாக பேசும் ஆற்றலையும்... கவர்ச்சியான தோற்றத்தையும்... எப்போதும் பெண்களால் பாராட்டுதல்களையும், அன்பையும் அனுபவிப்பராக இருப்பார். அண்டார் அயலாரிடமும்... பழகும் நபர்களிடமும் ஈர்ப்பு கொண்டவராக இருப்பார். குறிப்பாக 'பெண்களால்' சுகம் பெறுபவராக இருப்பார்.
# அதே நேரத்தில் இந்த 'சுக்கிர பகவான்'... 2 மற்றும் 7 ஆம் இடங்களான 'இரு மாரக ஸ்தானத்தங்களுக்கும்' அதிபதியாவதால்... நாம் மேற் குறிப்பிட்ட சூட்சும விதியின் படி... 'மாரகத்துக்கு' ஒப்பான பலன்களையும் அளிக்கக் கடமைப் பட்டுள்ளார். அதனால், இந்த இடங்கள் விளைவிக்கும் 'மாரகத்திற்கு' ஒப்பான பலன்களையும் அளிக்கக் கடமைப்பட்டுள்ளார்.
இந்த அமைவிற்கான பலன்களை ஆயும் போது...
சொல் வழக்கில்... மாராகாதிபதிகளைப் பற்றிச் சொல்லும் போது... 'இரு மாராகாதிபதிகள் கொல்லான்' என்பது வழக்கில் உள்ளது. இதற்கான அர்த்தம்... ஒவ்வொரு ஜீவனுக்கும் இரு வழியிலான மறைவு வழக்கத்தில் உள்ளது. அவை... ஜீவன் வெளியே செல்வது மற்றும் ஜீவன் உள் அடங்குவது. இந்த இரன்டு வழிகளிலும் செல்லாத ஜீவன் இந்த உடலுக்குள் இருந்து அவதியடைவதைப் போல...
... இந்த ஜாதகன் தனது தக்க வயதின் போது... தனது குடும்பத்திலிருந்தும்... அதன் செல்வ நிலையிலிருந்தும் விலகிப் போகும் நிலையும்...தான் பேசும் கவர்ச்சியான பேச்சுகளே தனக்கு எதிராகத் திரும்பும் நிலையும்... தனது குடும்பத்திலும், தான் சேரும் குடும்ப அமைவிலும், துணை அமைவிலும் தாளாத மனத் துயரை அடையும் நிலையும்... அதிலும் குறிப்பாக பெண்களினால் பெரும் அவதிக்குள்ளாகும் சூழலும் ஏற்படும். அவர்களிடும் சேர்ந்து வசிக்க முடியாமலும்... அவர்களை விட்டு விலக முடியாத சூழலும் ஏற்படும்.
இதுவரையிலான 6 பகுதிகளில் நாம் விவரித்தது போலத்தான்... காரகத்துவங்களும், ஆதிபத்தியங்களும் செயல்படுவதை நாம் அனுபவத்தில் ஆய்ந்து உணரலாம்.
ஜோதிடம் என்ற பெரும் கடலில் நாம் இதுவரை முழ்கி எடுத்தது... ஒரு சில நன்முத்துக்களே. இறைவன் அருளால்... மெலும் சில ஜோதிட சூட்சுமங்களை ஆய முற்படுவோம்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment