Friday, November 1, 2019

ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 27. காரகத்துவங்களும், ஆதிபத்தியங்களும் ; பகுதி 4.

ஜோதிடமும் அதன் சூட்சுமங்களும் - பகுதி 27.

காரகத்துவங்களும், ஆதிபத்தியங்களும் ; பகுதி 4.




சூட்சுமம் 2 : ஆதிபத்தியங்கள், மாரகத்துவத்துக்கும்... பாதகத்துவத்துக்கும்
                              கட்டுப்பட்டவைகள்.

இந்த 'சூட்சுமத்தை', உதாரணத்துடன் விளக்கும் போது, ஆதிபத்தியங்கள் எவ்வாறு பாதகத்துவத்துக்கும்... மாரகத்துக்கும் கட்டுப்படுகின்றன் என்பது ஓரளவு புரிதலுக்கு வரும்.

உதாரணம் 1 :

'மகர லக்னமான'... 'சர லக்னத்தில்' பிறந்திருக்கும் ஒருவருக்கு... 11 ஆமிடம் 'பாதக ஸ்தானமாகிறது'

# 11 ஆமிடமான 'லாப - மூத்த சகோதர ஸ்தானத்திற்கு' அதிபதியாக                                     அமைபவர் 'செவ்வாய் பகவான்'.

#  இந்த 'செவ்வாய் பகவான்'... 'மகர லக்னத்திற்கு', 4 ஆமிடமான 'தாய் - சுகம் -            வீடு மற்றும் வாகன ஸ்தானத்திற்கும்' அதிபதியாகிறார்.

இவ்வாறு 'மகர லக்னாதிபதிக்கு', தாய் - சுகம் - வீடு - வாகனம் - லாபம் - மூத்த சகோதர அரவணைப்பு...  ஆகியவற்றின் 'புண்ணிய பலன்களின் விளைவுகளுக்கு' காரணமாக 'செவ்வாய் பகவான்'... 'ஆதிபத்திய ரீதியாக' பலம் பெறுவதால்... இந்த ஜாதகர் அனுபவிக்க வேண்டிய பலன்களை ஆயும் போது...

இந்த ஜாதகரின் 'பிறப்புச் சூழலில்' தாயின் அளவில்லாத அன்பையும்... நிறைந்த சுக வழ்வையும்... இந்த ஜாதகரின் மூத்த சகோதரங்களின் அரவணைப்பையும்...ஈடுபடும் காரியங்கள் அனைவற்றிலும் வெற்றியையும்... அனுபவித்தவராக இருப்பார்.

# அதே நேரத்தில்... இந்த 'செவ்வாய் பகவான்' 11 ஆமிடமான 'பாதக                                  ஸ்தானத்திற்கு' அதிபதியாவதால்... முன்னர் அறிவித்த சூட்சும விதியின்            படியிலான 'பாதக பலன்களையும்... தனது 'பா(B)வ வினைகளின்                              விளைவுகளாக' அனுபவிக்க வேண்டியிருக்கிறது.

இந்த அமைவிற்கான பலன்களை ஆய்ம் போது...

... இந்த ஜாதகரின் தக்க பருவத்தின் போது, தாயாரின் அருகாமையையும்... மூத்த சகோதரத்தின் அரவணைப்பையும்... பூர்வ இடத்தில் வசிக்க முடியாத சூழலும்... ஆற்றலும், சக்தியும், அனுபவமும் நிறைந்திருந்தாலும் அதை செயல் படுத்த வாய்ப்பு கிடைக்காத நிலையும்... ஏற்படும்.

மேற்கண்ட சூட்சும விதியின்படி... 'பாதகத்துவத்திற்கான' நிலையை, ஆய்ந்த படி... 'மாரகத்துவத்திற்கான' நிலையை தொடர்ந்து... ஆய்வோம் அடுத்த பதிவில்... இறைவனின் அருளுடன்...

ஸாய்ராம்.

No comments:

Post a Comment

ஆன்மீக அனுபவம்... சிவசக்தி அம்மையார்

கடந்த 2003 ஆம் ஆண்டின் இறுதியில், தாயாரின் தரிசனம் முதன் முதலாகக் கிடைக்கப் பெற்றோம்.  அடியேனுக்கும், எனது வழிகாட்டியாகிய அண்ணார், 'பகவா...