ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 26.
காரகத்துவங்களும், ஆதிபத்தியங்களும் : பகுதி 3.
சூட்சுமம் 1 : காரகத்துவத்திற்கான கிரகங்கள் அந்தந்த காரகத்தில் நிற்பது... 'காரகோபவ நாஸ்தியாவதிற்கு' வழி வகுக்கும்.
இந்த 'சூட்சுமத்தை', உதாரணத்துடன் விளக்கும் போது... இந்த சூட்சும விதிக்கு உட்பட்டு... எவ்வாறு 'காரகத்துவமும், ஆதிபத்தியமும்' செயல்படுகிறது என்பது ஓரளவு புரிதலுக்கு வரும்.
உதாரணம் 1 :
ஒரு ஜாதகர் 'கும்ப லக்னத்தில்' பிறப்பதாகக் கொள்வோம். அவருக்கு 2 ஆம் இடத்தில்... 'குரு பகவான்' அமைகிறார் என்றும் கொள்வோம்.
# இப்போது... 'குரு பகவான்' இரண்டாம் இடத்திற்கு 'குடும்பக் காரகராக' அமைகிறார்.
# இரண்டாம் ஸ்தானத்திற்கு, ஸ்தானாதிபதியுமாகிறார்.
# இரண்டாம் இடமான 'வாக்கு-தனம்-குடும்பம்' என்ற 2 ஆமிடத்திற்கும்... 'லாபம்-மூத்த சகோதரம்' என்ற 11 ஆமிடத்திற்கும்... 2 மற்றும் 11 க்கான 'இரு ஆதிபத்தியங்களுக்கு' அதிபதியுமாகிறார்.
இந்த அமைவின் பலன்களை ஆயும் போது...
... 'குரு பகவான்'... 'ஆதிபத்தியங்களின்' அடிப்படையில் மிகவும் பலம் பெறுபவராகிறார். அதனால்... இந்த ஜாதகரின் 'சிறு வயதின் போது' - ஒரு நிறைந்த குடும்பத்தில் பிறந்திருப்பார் - 'நிறைந்த' என்பது தந்தை, தாயார், சகோதரம் என்பதாக - குடும்பத்தினரிடமிருந்து அனைத்து பாக்கியங்களையும், சுக சௌரியங்களையும் சிறு வயதில் பூரணமாக அனுபவித்திருப்பார் - இவர் குடும்பத்தில் இளையவராகவும், முத்தவர்கள் குடும்பத்தின் முக்கிய அங்கத்தினர்களாக பலம் பெற்றும் காணப்படுவர் - செல்வ செழிப்பில் குறைவில்லாமலும் - நிறைந்த தேஜஸ் என்பதான முக அமைப்பையும் - நல்ல வாக்கு வன்மையையும் கொண்டவராக இருப்பார் ... என்பதாக பலன்கள் அமையும்.
# மேற்கண்ட 'காரகத்துவத்திற்கான'... 'சூட்சும விதியின்' படி... 'குரு பகவான்' குடும்பக்காரகராகி... குடும்ப பாவத்தில் பலம் பெற்று அமர்வதால் 'காரஸ்தானத்தில் பலம் பெற்று... 'காரகோபவ நாஸ்தி' யாகிறார்.
இந்த அமைவிற்கான பலன்களை ஆயும் போது...
... இந்த ஜாதகர் தனது, 'தக்க பருவத்தின் போது' - எப்போது குடும்பத்தின் துணையும், அரவணைப்பும் தேவைப்படுமோ, அந்த நேரத்தில் அந்தத் துணையையும், அரவணைப்பையும் இழக்கும் சூழல் உருவாகும் - பொருளாதாரப் பற்றாக்குறையை தனித்து எதிர் கொள்ள நேரிடும் - தனது அடிப்படைத் தேவைக்கு மூத்தோரின் துணையை நாட வேண்டி வரும் - அவர்களின் புறக்கணிப்புக்கும் ஆளாக நேரிடும் - இதையெல்லாம் கடந்து, ஒரு சூழலில், தானே தனது குடும்பத்தைக் காக்கும் பொறுப்பையும் ஏற்க நேரிடும் - தான் குடும்பத்திலிருந்து பெற முடியாத அரவணைப்பையும், பாதுகாப்பையும் தான், தனது குடும்பத்திற்கு கொடுக்கும் சூழல் ஏற்படும்... என்பதாக பலன்கள் அமையும்.
'காரகத்துவ்த்திற்கும் - ஆதிபத்தியத்திற்குமான'... இரண்டாம் சூட்சும விதியை, தொடர்ந்து ஆய்வோம்... இறைவனின் அருளால்...
ஸாய்ராம்.

No comments:
Post a Comment