தான் விரும்புவது நடவாத போதும்... தனக்கு விருப்பம் இல்லாத நிகழ்வுகள் வாழ்வில் நிகழும் போதும்... நமது வாழ்வு, நமது வசம் இல்லை என்பதை மனித குலம் உணர்ந்து கொள்கிறது.
அதற்கான காரணங்களை உலக வாழ்வில் தேடும் போது... விரக்தியை அடைகிறது. தனது வாழ்வின் போராட்டங்களுக்கு,,, இந்த உலகத்தில் வாழும் ஏனைய மாந்தர்கள்தான் காரணம், என்று குற்றம் சாற்றத் தோன்றுகிறது. பின், அவர்களின் வாழ்வையும் உற்று நோக்கும் போது... அனைவருக்குமே இது பொதுவான போராட்டம்தான்... ஒவ்வொருவரது வாழ்வும் அவரவர்களின் 'கர்ம வினைகளுக்கு ஏற்பவே' அமைகிறது... என்ற உண்மையும் புலப்படுகிறது.
இிந்த உண்மைகள் மனதில்... இதையெல்லாம் யார் நிர்வகிக்கிறார்கள்...? இந்த ஜனன - மரண சுழல்களின் பதிவுகளை யார் கண்காணிக்கிறார்கள்...? இந்த ஜீவ வாழ்வின்... வாழ்க்கைப் போராட்டங்களை யார் முடிவுக்குக் கொண்டு வரப் போகிறார்கள்...? என்ற, எண்ணற்ற கேள்விகளை எழுப்புகிறது. அந்தக் கேள்விகள் மனதில் ஆவலுடன் எழும் போது... அவை, நம்மை படைப்பவரின் படைப்புகளுக்கு... முன், கொண்டுபோய் நிறுத்துகிறது.
அவரது படைப்புகளின் நுட்பத்திலிருந்தே... அந்த படைப்பாளரின் 'சக்தி' புலப்படுகிறது. இந்த மாபெரும் பிரபஞத்தை உருவாக்கி... எண்ணற்ற ஜீவராசிகளைப் படைத்து... அவையனைத்துக்கும், வாழ்வதற்கு வழியும்... வசதியும் செய்து கொடுத்து... ஒவ்வொரு நொடியும் காத்து, இயக்கி. இரட்சிக்கும் 'ஒரு மகா சக்தி' இருப்பதை... அந்த படைப்புகளிலிருந்தே... உணர முடிகிறது.
அந்த 'மகா சக்தியின்' மீது கொள்ளும் வியப்பு... பயத்துடன் கூடிய 'பக்தியாக மலர்கிறது'. எண்ணற்ற மாந்தர்களின் எண்ணங்களுக்கு ஏற்ப... எண்ணற்ற முறைகளில் இந்த பக்தியின் வெளிப்பாடும்... வழிபாடும்... நிகழ்கிறது.
எவ்வாறான பக்தி வழிபாடானாலும்... அது படைப்பவரிடமே நம்மைக் கொண்டு சேர்க்கும் என்ற நிதரிசனம் மட்டும் மாறாதிருக்கிறது. அதுதான் பக்தியின் சக்தி.
அந்த பக்தி-சக்தியின் வழியே பயணிப்போம்.. படைப்பாளரின் கருணையோடு..
ஸாய்ராம்.

No comments:
Post a Comment