மகான்களுக்கும் மடங்கள் மற்றும் ஆசிரமங்களுக்குமான தொடர்பு எவ்வாறு இருந்தது...? பகுதி 5. - பகவான் ஸ்ரீ ராகவேந்திரர்.
ஜீவ இரகசியங்கள் நிறைந்திருக்கும் 'நடராஜர் ஸ்தலம்' அமைந்த சிதம்பரத்திற்கு அருகில் இருக்கும் புவனகிரியில்... 'வேங்கடநாதன்' என்ற நாமகரணத்துடன்... அவதாரம் செய்தவர்... 'ஸ்ரீ ராகவேந்திரர் ஸ்வாமிகள்'.
சங்கு கர்ணன்... பிரஹலாதன்... பாஹ்லீகன்... வியாஸராஜர்... என்ற அவதாரங்களின் தொடர்ச்சியாகத்தான், ஸ்ரீ ராகவேந்திரரின் அவதாரமும் நிகழ்ந்தது.
கன்னட தேசத்து பிராமணர்கள் குலத்தில் அவதரித்த இந்த மஹான்... தமது குலத்திற்கு ஒப்ப... திருவேங்கடநாதனையும்... அவரின் அருளால் 'மத்வ மஹான்' நிறுவிய 'மத்வ மடத்தின்' வழியேயான 'ஸ்ரீ ராம பகவானின்' பக்தியிலும் திளைத்து மகிழ்ந்திருந்தார்.
ஆஞ்சநேயர்... பீமன்... என்ற அவதாரங்களின் தொடர்ச்சியான... அவதாரம்தான் 'மத்வரின்' அவதாரம். ஸ்ரீ இராம பக்தியிலும்... ஸ்ரீ கிருஷ்ண பக்தியிலும் திளைத்திருந்த இந்த மஹானின் பக்திக்கு இணங்கி... பகவான் ஸ்ரீ இராமர் இன்றும் 'மூல இராமராக'... அவர் ஸ்தாபித்த 'மத்வ மடத்தில்' அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்.
ஸ்ரீ கிருஷ்ண பகவானோ... ஸ்ரீ மத்வ மகானின் பக்திக்கு இணங்கி... ஒரு படகின் 'பாரச்சுமைக்குள்' இருந்து வெளிப்பட்டு... 'ஆ நிறை மேய்க்கும் கண்ணனாக' 'உடுப்பி மஹா ஷேத்திரத்தில்'... இந்த மகானால் பிரதிஷ்டை செய்யப்பட்டு... பக்தர்களால் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
'ஸ்ரீ சுதீந்திர தீர்த்தருக்கு' அடுத்த பீடாதிபதியாக... இந்த 'மத்வ மடத்தின் பீடாதிபதியாக'... அவரால் பட்டம் சூட்டப் பட்டார்... வேங்கடநாதன் என்ற பூர்வாஸ்ரமப் பெயர் கொண்ட... 'ஸ்ரீ ராகவேந்திரர்'.
மிகப் புகழ் பெற்ற... மத்வ மடம்... அதன் பிரதான காரியங்களாக, வேதத்தை இரட்சிப்பது... அதை ஓதுவது மற்றும் ஓதுவிப்பதான கடமைகளை விரிவாக்கம் செய்தது. அந்தந்த பிரதேசங்களுக்கு ஏற்ப... நலிந்தவர்களுக்கான உதவிகளுக்கும்... ஆன்மீக முன்னேற்றத்திற்கான பக்தி ஒழுக்கத்திற்கும்... பூஜா நியமங்களுக்கும்... பசிப்பிணியை நீக்கும் தர்ம சாலைகளுக்கும்... முக்கியத்துவத்தைக் கொடுத்தது.
அந்த புகழ் பெற்ற 'மத்வ மடத்திற்கு' பொறுப்பேற்ற 'ஸ்ரீ ராகவேந்திரர்'... பக்தி நெறியில் திளைத்திருந்த பக்தர்களுக்கு... அருள் பரப்பும் காமதேனுவாக... கற்பக விருட்சமாக திகழ்ந்தார். அற்புதங்கள் நிகழ்த்தும், மத்வ பிடாதிபதிகளின் வரிசையில்... தானும் ஒரு 'அற்புத சித்தராக' விளங்கினார்.
தன்னுடைய காலத்திலேயே... தனக்கு அடுத்து வரும் பீடாதிபதிக்கு வழிவிட்டு... பகவானின் அழைப்பு இணங்கி... 'ஜீவ சமாதி' என்னும் மிக உயர் நிலை சமாதியை... 'மந்த்ராலயம்' என்னும்... இன்றைய ஆந்திரப் பிரதேச எல்லையில் அமைந்த புண்ணியப் பிரதேசத்தில், அடைந்து... பிருந்தாவனஸ்தரானார்.
இதுதான்... இந்த மஹானுக்கும்... இவரமர்ந்த ஆசிரமத்திற்கும் இடையேயான தொடர்பு.
ஸாய்ராம்.

Nice
ReplyDeleteநன்றி.
Delete