மகான்களுக்கும் மடங்கள் மற்றும் ஆசிரமங்களுக்குமான தொடர்பு எவ்வாறு இருந்தது...? பகுதி 6 - காஞ்சி மஹா பெரியவர்.
இந்த 'சனாதன தர்மம்' எப்போதெல்லாம் ஒருதொய்வை அடைகிறதோ... அப்போதெல்லாம்... அந்த 'பரம் பொருளே'', ஒரு உருவம் தாங்கி... ஒரு அவதாரமாக இந்த மண்ணில் இறங்கி... மீண்டும் இந்த தர்மத்தை நிலைநாட்டியிருக்கிறது. இதற்கு... இந்த பாரத மண்ணில், யுகங்கள் தோறும் அவதரித்த 'மகான்களே' சாட்சி...!
காலடி என்ற மிக்ச் சிறிய கேரளத்து கிராமத்தில்... அந்த ஆதிசிவனே... 'ஆதி சங்கரராக' அவதரித்தார். இவரது ஆயுள் காலம் வெறும் 32 தான். ஆனால் ஆற்றிய தொண்டுகளோ... ஆண்டுகளைக் கொண்டு அளவிடமுடியாததாகும்.
* இந்த பாரத தேசத்தை... தனது கால்நடையாக மூன்று முறை வலம் வந்தவர்.
* இறையின் பேரருள் ஒரே சக்தியாகத்தான் இருக்கிறது என்ற 'அத்வைத' சித்தாந்தத்தை நிறுவியவர்.
* இந்த சனாதன தர்மத்தைக் கடைபிடிப்பவர்களின் மனோ நிலைகளை உணர்ந்து அதற்கேற்ப... ஆறு வகையான வழிபாட்டு முறைகளை... ஷண்மதங்களாக வகைப்படுத்தியவர்.
* பத்ரி, துவாரகா, சிருங்கேரி, பூரி, ஆகிய பரந்த பாரத தேசத்தில்... நான்கு திசைகளுக்குமாக 'ஸ்ரீ மடத்தை' நிறுவி... அதன் தலைமை பிடமாக 'காஞ்சி பீடத்தை' அமைத்தவர்.
அந்த புரதாண 'காஞ்சி பீடத்தின்' 68 ஆவது பீடாதிபதியாக... தனது 13 ஆவது வயதில் பொறுப்பேற்றுக் கொண்டவர்தான்... 'சுவாமிநாதன்' என்ற பூர்வாசிரமப் பெயர் கொண்ட...'சந்திர சேகர சரஸ்வதி ஸ்வாமிகள்' என்ற 'காஞ்சிப் பெரியவர்'.
32 ஆண்டுகளில் 'ஆதிசங்கரர்' ஆற்றிய பெரும் தொண்டுகளை... தனது நூறு வயது வரையிலான முழுமையான ஆண்டுகளில்... ஒரு க்ஷணமும் ஓய்வெடுக்காமல்... பலமுறை இந்த பாரத தேசத்தை தனது கால்களால் வலம் வந்து விரிவு படுத்தியத் தெய்வத் துறவி... 'காஞ்சி முனிவர்'.
மஹா யோகீஸ்வரராக... அந்தர் ஞானம் பெற்ற ஞானியாக... உயர் தபஸ்வியாக... சதா நேரமும் நாம ஜபம் செய்த துறவியாக... ஒவ்வொரு நொடியும் 'சகஜ சமாதி நிலையில்' திளைத்த உயர் யோக சாதகராக... இருந்தாலும்... ஒரு 'புரதாண மடத்திற்கு' அதிபதியாக தனது கடமைகளை ஆற்றிய செம்மை... என்றும் போற்றுதலுக்குறியது.
பாரத தேசத்தில் பரந்து விரிந்திருந்த 'ஸ்ரீ மடத்தின்' நிர்வாகத்தினை எந்தத் தொய்வும் வராமல் நிர்வகித்த பெருமை இவரைச் சாரும். மடத்தின் 'நிர்வாகிகளை' எப்போதும் ஒரு 'திகில்' நிலையிலேயே வைத்திருப்பதுதான் இவரின் நிர்வாக சாதூர்யம்.
மடத்தின் கைங்கர்யங்களுக்கு எவரேனும் ஒரு பெரும் உதவி செய்ய நிர்வாகிகளை அணுகினால்... நிர்வாகிகள் ஒப்புதலுக்காக இவரிடம் வரும் போது... இவர் கேட்கும் கேள்வி... 'இப்போது ஏதேனும் கைங்கர்யம் நடைமுறையில் உள்ளதா...? அதற்கான வாய்ப்பு வரும் போது... அவர்களிடம் பெற்றுக் கொள்ளலாம்...!' என்பதாகத்தான் இருக்கும். அது போல வாய்ப்புகள் வரும் போது... அவர்களை ஞாபகப் படுத்தி... வரவழைத்து... அந்த கைங்கர்யத்திற்கான பொறுப்புகளை அவர்கள் வசம் ஒப்படைப்பார்.
எப்போதும் பற்றாக்குறையிலேயே... நிர்வாகத்தை வைத்திருப்பார். 'எப்போது தேவையோ... அப்போது 'காமாட்சி' வழிகாட்டுவாள்...!' என்பதுதான்... அவர் நிர்வாகிகளுக்குக் காட்டிய பக்தியின் வழி முறை.
'ஸ்ரீ மடம்' எப்போதும் எளியவர்களுக்கான புகழிடம்... என்பதாகத்தான் அவர் காலத்தில் திகழ்ந்தது. வைதீக முறைகளின் வழிகாட்டுதலுக்கும்... சனாதன தர்மத்தைக் காக்கும் வழி வகைகளுக்கும்... வேதங்களின் புனிதத்துவம் காப்பதற்கும்... இந்த மடங்களின் நிர்வாகத்தை நடத்தினாலும்... தனது 'தவ வாழ்வு' என்றும் மாறாதவாறு... 'தாமரை இலைத் தண்ணீராகத்' திகழ்ந்தது... இந்த மகானின் வாழ்வு.
இதுதான்... இந்த மகா முனிவருக்கும்... மடத்திற்குமான தொடர்பு.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment