ஜோதிடமும் அதன் சூட்சுமமும் - பகுதி 23.
'திருமணப் பொருத்தங்களும் அதன் சூட்சுமங்களும்' - பகுதி 6.
'ஜாதகப் பொருத்தம்'
சென்ற பகுதியில் விவரித்ததன் படி அடிப்படை அம்சங்கள் ஒத்துப் போகும் நிலையில்... ஆழ்ந்த நிலையிலான அணுகுமுறைக்குள் பிரவேசிப்போம்.
வயது... லக்னம்... இராசி... தசா-புத்தி... இவையனைத்தும் ஒத்துப் போகும் பக்ஷத்தில்... கிரகங்களின் அமைவுகளின் வழியேயான பொருத்த முறைக்குள் பிரவேசிக்கலாம்.
உதாரணம் - 1 : வரன் தேடும் ஆண் ஜாதகரின் ஜாதகத்தில்... லக்னாதிபதி பலத்தை இழந்து மறைந்து இருக்கும் பக்ஷத்தில்; பொருத்தம் பார்க்கப்படும் பெண் ஜாதகத்தில்... லக்னம் வலுத்தும், சுப ஆதிபத்தியப் பெற்ற கிரகங்களின் பார்வையும் பெற்றிருந்தால்... அதை உத்தமமான பொருத்தம்.
அதே நேரத்தில்... பெண் ஜாதகத்தில் லக்னாதிபதி வலுவிழந்து காணப்பட்டால்... மேற்படி நாம் பார்க்கும் ஆண் ஜாதகருக்கு இந்த அமைவு பொருந்தி வருவதற்கு வாய்ப்பேற்படாது.
உதாரணம் - 2 : வரன் தேடும் ஆண் ஜாதகரின் ஜாதகத்தில்... லக்னாதிபதி வலுவாக அமைந்திருக்கும் பக்ஷத்தில்... பெண் ஜாதகத்தில் 7 ஆம் ஸ்தானாதிபதி வலுத்து இருப்பது... உத்தமாமான பொருத்தம்.
அதே நேரத்தில்... பெண் ஜாதகத்தில் 7 அம் அதிபதி வலுகுறைந்து, மறைந்து பலமற்று இருக்கும் பக்ஷத்தில்... மேற்கண்ட ஆண் ஜாதகருக்கு இந்த அமைவு பொருந்தி வருவதற்கு வாய்ப்பேற்படாது.
உதாரணம் - 3 : வரன் தேடும் ஆண் ஜாதகரின் ஜாதகத்தில் 7 ஆம் பாவத்தில்... 'ஆதிபத்திய ரீதியான பாபர்கள்' இருக்கும் பக்ஷத்தில்... பெண் ஜாதகத்தில் அந்த 7 ஆமிடத்தில் கிரகங்கள் ஏதும் இல்லாமலும்... ஆதிபத்திய சுபர்களில் ஏதாவது ஒன்று அமைந்திருப்பதும் உத்தமமான பொருத்தம்.
உதாரணம் - 4 : வரன் தேடும் ஆண் ஜாதகத்தில் 9 அம் பாவமான 'பாக்கியஸ்தானம்' வலுத்து இருக்கும் பக்ஷத்தில்... அமையப் போகும் பெண் ஜாதகத்தில் அந்த பாக்கிய ஸ்தானம் வலுத்து இருப்பது உத்தமமான பொருத்தம்.
அதே நேரத்தில்... பெண் ஜாதகத்தில் 'பாக்கிய ஸ்தானம்' பழமிழந்து இருக்கும் பக்ஷத்தில் அது பொருந்தி வருவதற்கு வாய்ப்பேற்படாது.
இதுபோல ஏனைய பாவங்களையும் பொருத்தி... அதன் வழியாக பொருத்தங்களை தீர்மானிக்கலாம்.
மேற்கூறிய பொருத்தங்களின் அமைவு உணர்த்துவது ஒன்றைத்தான். அது ஒவ்வொரு ஜீவனுக்கும், அதன் குறை நிறைகளுக்கு ஏற்ப, அதை ஈடுகட்டும் வகையில் ஒரு துணையை இறைவன் கொண்டு வந்து சேர்ப்பான்... என்ற சத்தியத்தைத்தான்.
'இந்த உண்மையை உணர்ந்து கொண்டு... 'நிறை குறைகளை' சமன் செய்வதுதான்... ஜாதக ரீதியான பொருத்த முறைகளின் வழியாக... ஒரு ஜோதிடர்... வரன்களின் ஜாதகத்தை அணுகுவதன் முறை..'
இவ்வாறு தேர்ந்தெடுத்து பொருந்தும் ஜாதகத்தில்... தாமாகவே குல-குடி-குடும்ப-குலதெய்வ பொருத்தங்களும்... நட்சட்திர ரீதியான பொருத்தங்களும்... கூடி வந்து விடுவதை... அனுபவத்தில் உணர்ந்து கொள்ளலாம்.
அதுமட்டுமல்ல... வரன்களுக்கு, இல்வாழ்வு என்பது ஒரு கடமை என்றும்... அதன் வழியாக இருவரும் இணைந்து தமது 'கடமைகளை' பற்றற்று பூர்த்தி செய்து... 'கர்ம வினைகளைக் களைந்து'... பிறவியில்லா பெரும் வாழ்வை அமைத்துக் கொள்ள தரப்படும் ஒரு வாய்ப்பு என்றும்... உணரவைக்க முடியும்.
இது இந்த 'ஜோதிடக் கலையாலும்'... அதைக் கையாளும் 'ஜோதிடர்' என்ற 'தெய்வக்யஞர்களால்' மட்டுமே சாத்தியமாகும்.
இந்த 6 பகுதிகளில்... திருமணப் பொருத்தம் என்ற மிகப் பெரிய சமுத்திரத்தின்... சில தூய்மையான துளிகளை சுவைத்த அனுபவத்தில்... இறைவனுக்கு நன்றி செலுத்தி விடைபெறுவோம்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment