தாமரை மலரின் மீது இறைவன் எழுந்தருளியிருப்பதில் இருக்கும் சூட்சுமம்.
தாமரை மலர்வது சேற்றில்தான். ஆனால் அது சென்று சேரும் இடமோ... இறைவனின் திருவடி. இறைவனின் திருவடிக்கு 'திருவடிக் கமலம்' என்ற பெயரும் உண்டு. 'கமலம்' என்பது தாமரை மலரைக் குறிக்கும்.
ஓடும் நீரில் இல்லாமல்... சேர்ந்திருக்கும் நீரில்தான் தாமரை வளர்கிறது. சேர்ந்திருக்கும் நீர் நிலைக்குத்தான் 'குளம்' என்று பெயர். குளத்தின் அடிப்பகுதியில் மண்ணின் தன்மை மிகவும் இளகி... 'சேறு' என்ற நிலையில் இருக்கும். அந்த நிலையில்தான் அது தண்ணீரை உள் கொள்ளாமல்... குளத்தை ஒரு கொள்கலனாக வைத்திருப்பதற்கு உதவும்.
அந்த தண்ணீரின் மேல் பகுதியில் வளரும் பல நீர் வாழ் தாவர வகைகளில் ஒன்றுதான்... தாமரை. ஏனைய நீர் வாழ் தாவரங்களிலேயே இப்படி ஒரு அழகான வண்ண மலரை விகசிக்க வைப்பதால்தான் இந்த தாமரையின் செடிக்கு ஒரு சிறப்பு.
இதன் தன்மையை ஆய்ந்தால்... தண்ணீரிலேயே வாழ்ந்தாலும்... தன் தேவைக்கு மேல் ஒரு சொட்டு நீரையும் தான் ஏற்றுக் கொள்வதில்லை. அதுமட்டுமல்ல... தன் மீதோ... தனது உறுப்பான இலைகளின் மீதோ... ஒரு சொட்டு நீரையும்... தக்கவைத்துக் கொள்வதும் இல்லை. குளம் நிறைந்து நீர் இருந்தாலும்... தன் தேவைக்கு அதிகமாக... ஒரு சொட்டு நீரை, உட்கொள்வதும் இல்லை... ஒட்ட வைத்துக் கொள்வதுமில்லை.
இந்தப் பற்றற்ற தன்மைக்கான பரிசுதான்... இறைவனின் திருவடி.
நமது மனமும் அது போலத்தான். எப்போது, நமது மனம் இந்த உலகம் என்ற நீர் நிலையில்... 'பற்று' என்ற நிலையில் சிக்கிக் கொள்ளாமலும்... 'பந்தம்' என்ற நிலையை ஒட்டிக் கொள்ளாமலும்... இருக்கும் 'பக்குவ' நிலக்கு உயர்கிறதோ... அப்போது மனம் என்ற மலர்... மலர்ந்து... தாமரை போல ஆகிறது. மனம் மலர்ந்து மலராகும் போது... அதில் தானாகவே வந்து அமர்ந்து விடுகிறான் 'பரம புருஷனான' பகவான்.
இந்த 'மனம் மலர்ந்து மலராகும்' நிலையைக் குறிப்பதற்காகவே... நாம் வழிபடும் 'இறைவனின் சித்திரங்களில்'... தாமரை மலரின் மீது இறைவன் அமர்ந்திருப்பதாகவும்... நிற்பதுவுமான... நிலைகளில் வழிபடுகிறோம்.
அதன் சூட்சுமம்... நம் மனத்தில் இறைவன் எழுந்தருளியிருப்பதான நிலையின் வடிவமே.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment