ஜோதிடமும் அதன் சூட்சுமமும் : பகுதி 20.
'திருமணப் பொருத்தங்களும் அதன் சூட்சுமங்களும்' - பகுதி 3.
'ஜாதகப் பொருத்தம்'
'ஜாதகப் பொருத்த முறையை' ஆய்வதற்கு முன்... ஜீவ வாழ்வைப் பற்றிய அடிப்படை சூட்சுமங்களைப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
ஒரு ஜீவனின் பிறப்பிலேயே அதன் தாய், தந்தை, உடன் பிறப்பு, உறவு என அனைத்தும்... அதனதன் 'கர்ம வினைகளுக்கேற்ப' தீர்மானிக்கப் பட்டுவிடுகிறது.
ஜீவனின் வாழ்வு நிலையின் போதுதான் அது ஏற்படுத்திக் கொள்ளும் 'தொடர்பு... துணை' என்ற அமைவு ஏற்படுகிறது. இதுவும் 'கர்ம வினைகளின்' அடிப்படையில்தான் ஏற்படுகின்றன. ஆனால்... அதை தீர்மானிக்கும் இடத்தில் இந்த ஜீவன் இருக்கிறது. அதுதான் இறைவன் இந்த 'மனித இனத்திற்கு' மட்டும் கொடுத்திருக்கும் 'வரமும் - சாபமும்'... 'CHOICE' ம் CHANCE' ம்'.
இந்த தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளாமலேயே... ஜீவனால், தனது வாழ்வை கடந்து விட முடியும். ஆனால் தனது 'கர்ம வினைகள்' என்ற முடிச்சை அவிழ்க்க 'இந்த இல்வாழ்வு' என்ற 'வாழ்வியல் முறை' சிறந்தது என்பதால் அதை ஜீவர்கள் ஏற்று... அதன்வழி நடந்து... கடமைகளைப் பற்றற்று முடித்து... கர்ம வினைகளைக் களைந்து... 'இறைவனின் திருவடியில்' கலந்து விடும் வாய்ப்பாகக் கருதினார்கள்.
சென்ற பிறவியின் நெருங்கிய தொடர்புகளும்... அதனுடனான நமது பந்தமும்தான், இப்பிறவியில் அது ஒரு 'நட்பாகவோ' அல்லது 'வாழ்க்கைத் துணையாகவோ' அமைகிறது.
இந்த இணைவு 'நட்பாக' அமையும் போது அதில் ஒரு 'பந்தம்' இருக்கிறது... ஆனால் 'பற்று' இருப்பதில்லை. அதனால் தான் அந்த 'பந்தத்தில்' எப்போதும் ஒரு 'சுகமும், மகிழ்வும்' இருக்கிறது. இணையும் போதும்... கால சூழல்களால் பிரியும் போதும்... அதனால் விளையும் மகிழ்ச்சியும்... துயரமும்... ஒரு கட்டுக்குள் இருக்கிறது. இது ஒரு 'Commitment' இல்லாத பந்தம்.
அதுவே இந்த இணவு 'ஒரு இழ்வாழ்வுத் துணையாக' அமையும் போது... அது ஒரு 'பந்தமாகவும்'... பெரும் 'பற்றுக்குள்ளும்' நம்மை இழுத்துச் செல்கிறது. துணை என்னும் 'பந்தம்' என்றும் நம்மை விட்டும் பிரிய முடியாத 'பற்றாக' மாறும் போதுதான்... அது ஒரு 'Commitment' ஆக மாறிவிடுகிறது. இந்த உறவால் விளையும் 'மகிழ்வும்' ... 'துயரமும்' அந்த ஜீவனின் வாழ்வின் நிலையையே புரட்டிப் போட்டு விடுகிறது.
இன்றைய சூழலில்... நாம் ஏற்கனவே விவரித்த படி... 'இல்வாழ்வு' ஜீவர்கள் கடந்து போக வேண்டிய 'வாழ்வியல் கடமை' என்ற நிலை மாறி... அது ஒரு 'சுகத்தையும்... இடைவிடா மகிழ்வையும்' தேடும் ஒரு வாய்ப்பு என்பதான, 'எதிர்பார்ப்புகள் நிறைந்த' நிகழ்வாக மாறியிருக்கிறது.
இந்தக் 'கருத்தியலை' மாற்றுவதற்கும்... அந்த 'எதிர் பார்ப்புகள்' எப்போதும் வாழ்வியலில் அமைந்து விடுவதில்லை என்ற உண்மையை உணரவைப்பதற்கும்... 'ஜாதகப் பொருத்தம்' என்ற வழிமுறையன்றி பிரிதொரு உகந்த வழிமுறை நம் வசம் இல்லை.
வரும் பகுதிகளில்... இந்த 'ஜாதகப் பொருத்த முறையின்' சூட்சுமங்களை... 'இறைவன் அருளினால்'... தொடர்ந்து அணுகுவோம்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment