பக்தி ஒன்றே பரிகாரம் - பகுதி 4.
'மந்திராலய மஹான்' நடத்திய அற்புதம்.
திருச்சியின் புற நகர் பகுதியில் வசிக்கும் ஒரு பெரியவர்... நண்பர் ஒருவரின் அறிமுகத்தோடு... அவரின் மகனின் எதிர்காலம் பற்றிய சில சந்தேகங்களைத் தெளிவாக்கிக் கொள்வதற்காக... நம்மை சந்தித்தார்.
அவரின் மகனின் ஜாதகத்தில் 'ஒரு நுட்பமான அமைவு' காணப்பட்டது. அது பிரதானமான மூன்று (3) கிரகங்கள் 'நீச நிலையில்' பலமிழந்து காணப்பட்டன. அதில் ஒரு கிரகத்திற்கு மட்டும்... 'நீச பங்கம்' ஏற்பட்டிருந்தது. 'நீச பங்கம்'... என்பது... 'நீசம் நின்ற ராசிநாதன் ஆட்சி உச்சம் ஏறிடில் நீச பங்க ராஜ யோகம்...' என்ற ஒரு ஜோதிட விதியை ஒட்டியது.
அந்த அமைவையும்... பிற அமைவுகள்... தசா புத்திகள் கணக்கீடுகளின் படியும்... அவருக்கு ஒரு எதிர்கால பலன் அளிக்கப்பட்டது. அது... 'அந்த ஜாதகர் கடல் கடந்து வெளி நாடு சென்று பணிபுரிய நேரிடும்...' என்பதுதான். அதற்கு அந்தப் பெரியவர் கூறிய பதில் சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அது... 'அவர் வெளிநாடு செல்ல முடியாத ஒரு சூழல் நிலவுவதாகவும்... நிச்சயமாக அதற்கான வாய்ப்பு இல்லையென்பதுதான்...'. அதற்கு நாம், 'இந்த ஜாதகர் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு இருப்பது உண்மைதான்... ஆனாலும் அந்த சங்கிலியின் பூட்டைத் திறக்க ஒருவர் வருவார்...' என்று கூறி... அவரது மகனுக்காக... 'பகவான் ஸ்ரீ ராகவேந்திரரிடம்' பிரார்த்தனை செய்து கொள்ளும் படி ஆலோசனை அளித்து அனுப்பிவைத்தோம்.
பல மாதங்களுக்குப் பிறகு, அவர் நம்மை சந்திக்க வந்தார். அவர் கேட்ட முதல் கேள்வி...' பூட்டைத் திறந்து... சங்கிலிகளின் பிணைப்பிலிருந்து விடுவிக்க ஒருவர் வருவார்... என்று கூறினீர்களே... ஆனால் அது யார் என்று ஏன் கூறவில்லை...?' என்று கேட்டார். நாமும் அந்தக் கேள்வியை ரசித்துக் கொண்டே...' இந்தக் கேள்வியை அன்று நீங்கள் எழுப்பவில்லையே...!' என்றோம்.
அவர் நடந்ததை விவரித்தார்... 'அவரின் மகன் சென்னையில் ஒரு பிரபல கணணி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவர் தங்கியிருந்த வீட்டின் கீழ் தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் சிலர் தங்கியிருந்தனர். அதில் கேரளாவைச் சேர்ந்த ஒரு செவிலியர் 'அமெரிக்கா' செல்வதற்கான முயற்சியில் இருந்தார். அவர் முயற்சிக்கும் பணிக்கு, துணைவருடன் சென்று தங்கக் கூடிய திருமணவானவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டிருந்தது. அந்த செவிலியரின் உதவியால்... அவரது மகனுக்கிருந்தத் தடையைக் கடந்து... அவர்கள் இருவரும் அமெரிக்கா சென்று விட்டார்கள். மகனிடம் இருந்து தகவல்கள் ஏதும் இல்லாததால்... இவர் சென்னைக்குச் சென்று பார்த்த போது... இந்த உண்மைகள் எல்லாம் தெரியவந்தது.
இந்த நிகழ்வுகள் அந்த பெரியவரின் குடும்பத்தையெ புரட்டிப் போட்டுவிட்டது. அவரின் மகன்தான் மூத்தவர். அவருக்கு இரண்டு சகோதரிகள். இருவரும் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் சூழல் வேறு. அவரின் துணைவியார் மகனின் மீது மிகவும் பாசம் வைத்திருந்தவர். மகனின் இந்த முடிவு தாயாரை மிகவும் பாதித்ததில் ஆச்சரியம் ஏதும் இல்லை. அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்தில்தான்... நம்மை சந்திக்க வந்திருந்தார்.
நாம் அவருக்கு அளித்த உபாயம்... 'பகவான் ஸ்ரீ ராகவேந்திரப் பிரபுவிடம்' பிரார்த்தனை வைப்பதைத்தான். அந்த பிரார்த்தனையை... அவரின் துணவியார்தான் வைக்க வேண்டும் எனும்போது... மகன் மீதான் வெறுப்பில், தாயாரால்அதை செய்ய முடியாது... என்று அவர் மறுக்கும் போது... ஐந்து பிரார்த்தனைகளை வரிசைப்படுத்தி...
1. எங்கள் குடும்பத்தின் ஆதாரமே அவன்தான், அவன் எங்கிருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும்.
2. என் மீதும், எங்கள் குடும்பத்தின் மீதும், அளவற்ற அன்பு கொண்ட மகனின் அன்பு என்றும் எங்களுக்குக் கிடைக்க வேண்டும்.
3. அவனது சூழலால் அவன் ஒரு முடிவு எடுத்திருக்கிறான். அந்த முடிவு அவனுக்கு ஒர் அமைதியான... மகிழ்வான வாழ்வை அளிக்கட்டும்.
4. அவனின் அன்பும், ஆதரவும், பொருளாதார உதவியும், என்றும் எங்களுக்குத் தேவைப்படுகிறது.
5. அவனின் நிலையை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம். அவனின் தொடர்புக்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம்.
என்பதாக வரிசைப்படுத்தி...அதை அவர் படித்துப் பார்க்கும் படியும்... அதில் நியாயம் இருந்தால் அதை... ஒவ்வொரு வியாழன் அன்றும் மாலைவேளையில்... 'பகவான் ராகவேந்திரரின்' திருவுருவப்படம் ஒன்றை ஒரு மனையில் வைத்து... திருவிளக்கேற்றி... நிவேதனம் சமர்ப்பித்து... தூப, தீப, ஆராதனைக்குப் பின், மனையை 5 முறை வலம் வந்தபின்... இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்குமாறு கூறினோம். இதை தொடர்ந்து ஒரு மூன்று வாரங்களுக்குத் தொடருமாறும் வலியுருத்தினோம்.
முதல் வியாழன் கடந்தது. அடுத்த வியாழனுக்கு முன்னதாகவே... அந்தப் பெரியவர் மலர்ந்த... மகிழ்வான முகத்தோடு... நம்மைச் சந்திக்க வந்தார். நடந்ததை விவரித்தார்.
பிரார்த்தனைகளைப் படித்தத் தாயார்... மனம் நெகிழ்ந்து போய்... அந்த வியாழன் அன்று மிகவும் சிரத்தையுடனும்... பக்தியுடனும்... அந்த எளிய பூஜையை மேற்கொண்டார். பூஜையின் முடிவில் இந்தப் பிரார்த்தனைகளை பிரபுவின் திருப்பாதங்களில் சமர்ப்பித்தார். அன்றைய இரவு அனைவருக்கும் நிம்மதியாகக் கழிந்தது. வெள்ளியன்று காலை... அவர் வீட்டு மாடியில் இருப்பவர் வந்து... தனது அலை பேசியைக் கொண்டு வந்து கொடுத்து... அதில் அவர்களது மகன்... அமெரிக்காவிலிருந்து பேசுவதாகக் கூற... குடும்பம் மொத்தமுமே... ஆச்சரியத்திலும்... ஆனந்தத்திலும் திளைத்துத்தான் போனது. பிறகு நடந்தது அனைத்தும்... பல மாதங்களுக்குப் பிறகு அந்தக் குடும்பத்தில் நிகழ்ந்த... மகிழ்வான தருணங்கள்.
அவர் கூறியதைக் கேட்டு... நாமும் 'பகவான் ஸ்ரீ ராகவேந்திரப் பிரபு' நடத்திய அற்புத லீலைகளால்... மயிர்க்கூச்செறிந்து போனோம். அப்போது அவர் ஒரு பையில் கொண்டுவந்ததை நம்மிடம் கொடுத்தார். நாம் எப்போதும் எதையும் பெற்றுக் கொள்வதில்லை என்பதை அறிந்திருந்த அவர்... அன்புடன் தான் கொண்டு வந்ததை ஏற்றுக் கொள்ளும்படிக் கூற... பையைத் திறந்த போது.... அவரின் வீட்டைச் சுற்றிப் பயிரிட்டிருந்த பச்சக் காய்கறிகளுடன்... ஒரு T Shirt ஒன்றும் இருந்தது... அதில்... New York City என்று அச்சடிக்கப்பட்டிருந்தது.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment