மனம் என்பது என்ன... பகுதி - 4.
'எண்ணங்களற்ற மனம்', 'ஒரு அசையாத நீர் நிலையைப்' போன்றது. அதில் ஒரு கல் விழுந்தால் போதும்... ஒன்றன் பின் ஒன்றாக வளையங்கள் கரையைத் தொடும்படியாக விரியும். போடப்பட்டது ஒரு சிறிய கல்தான். ஆனால் அதன் தாக்கம் எண்ணற்ற வளையங்களைத் தோற்றுவித்து விடுகிறது.
அது போலத்தன் மனமும். எண்ணங்களற்ற மனம் என்பது மிகவும் அரிதானது. அது எப்போதும்... எவருக்கும்... வாய்த்துவிடுவதில்லை. மனித ஜீவர்களைத் தவிர... ஏனைய எந்த உலக ஜீவன்களை எடுத்துக் கொண்டாலும்... இந்த மனம் என்ற ஒன்று... இவ்வளவு சிக்கல் நிறைந்த அமைவாக அமையவில்லை. ஏன் மனித ஜீவர்களுக்கு மட்டும் இப்படி ஒரு அமைவைத் தந்தான்... படைப்பாளன்...!
ரசனை மிகுந்த... புத்தி சாதுர்யம் மிக்க... அறிவுடன் கூடிய... ஒரு ஜீவனின் படைப்புத்தான்... தனது படைப்புகளை ரசித்து, வியந்து... அதன் வழியாக தன்னையும் தேடும்... என்ற உயரிய நோக்கில்... படைப்பவரால் படைக்கப்பட்டதே... இந்த மனித ஜீவன். ஆனால் அது படைப்பவனை விட்டுவிட்டு... அவனது படைப்பின் வழியே கடந்து செல்வதுதான் காலம் நடத்தும் கோலாட்டம்.
மனித ஜீவனுக்கென ஒரு 'சிறப்பு அந்தஸ்த்து' படைப்பவரால் கொடுக்கப்பட்டது. அது... 'சூழலுக்கு ஏற்ப முடிவெடுக்கும் தன்மைதான்'. ஏனைய... எந்த ஜீவனுக்கும் இல்லாத 'சிறப்பு அந்தஸ்த்து' இது. உதாரணமாக 'ஒரு பசுவுக்கு' பசி வருகிறது என்ற எண்ணம் எப்போது தோன்றும் என்றால்... அதற்கான உணவு தயார் நிலையில் இருக்கும் போதுதான். பசுவுக்கான உணவைத் தயார் செய்த
பின்னர்தான்... அதற்கு பசி என்ற உணர்வையே ஏற்படுத்துகிறான்... படைப்பாளன்.
மனித ஜீவனுக்கு மட்டும்... பசி என்ற உணர்வை ஏற்படுத்திவிட்டு... அவன் என்ன செய்கிறான்... என்று பார்த்துக் கொண்டிருக்கிறான் படைப்பாளன். 'தனக்கான உணவு நிச்சையமாக நம்மைத் தேடி வரும்' என்று நம்புகிறானா...? அல்லது... 'நாம்தான் உணவைத் தேடி போகவேண்டும்'...என்று... தாமாக உணவைத் தேடி போகிறானா...? என்ற இந்தப் பந்தயத்தில்... முதலில்; மனிதன் தோற்றதிலிருந்துதான்... 'கர்ம வினைகள்' என்ற கட்டுக்கள் ஆரம்பித்திருக்க வேண்டும்.
இந்த சிந்தனைகள் தோன்றும் இடமாக இருப்பதுதான்... மனம். நமது கர்ம வினைகளுக்கு ஏற்பத்தான்... எண்ணங்களும்... சிந்தனைகளும்... இந்த மனம் எண்ணும் மாயத் திடலில் நடக்கும் போராடங்களாக மாறுகிறது. கடலின் அலைகள் போல... ஒன்றன் பின் ஒன்றாகத் தொடரும் எண்ணங்கள்... எண்ணற்ற சூழல்களின் மாற்றங்களை நமது வாழ்வில் ஏற்படுத்திவிடுகிறது.
'கர்ம வினைகள்'... மனதில் இரண்டு விதமான எண்ணச் சூழல்களை உருவாக்கி விடுகிறது. ஒன்று நாமாக திட்டமிட்டு ஒரு செயலைச் செய்வதற்கான எண்ணங்கள். இன்னொன்று... நமக்கு வெளியிலிருந்து ஏற்படும் சூழலுக்கு ஏற்ப முடிவு எடுக்கும்படியான எண்ணங்கள். இந்த இரண்டைத் தவிர... வேறு எந்த விதமான சூழலும் மனதிற்கு ஏற்படுவதில்லை.
இந்த மனதைக் கட்டுப் படுத்த முடியுமா...? அல்லது ஒரு கட்டுகுள்ளாவது வைத்துக் கொள்ள முடியுமா...? அல்லது இதைக் கடந்துதான் போக வேண்டுமா...?
மனதின் வழியே பயணித்துப் பார்ப்போம்.
ஸாய்ராம்.

No comments:
Post a Comment