ஜோதிடமும் அதன் சூட்சுமமும் ; பகுதி 14.
'கால புருஷ இராசியும்' ... அதன் சூட்சுமங்களும்-பகுதி 5. சுக்கிர பகவான்.
கால புருஷ இராசியின் இராசியாதிபதியான... 'செவ்வாய் பகவானும்', பூர்வ புண்ணியாதிபதியான... 'சூரிய பகவானும்', பாக்கியாதிபதியாகிய... 'குரு பகவானும்'... காலத்தை 'ஒரு கட்டுக்குள்' வைத்திருக்கிறார்கள்.
காலத்தை இந்த கட்டுக்குள் இருந்து விடுவிக்கும் பணியைத்தான்... இந்த 'சுக்கிர பகவன்'... தனது 'குடும்பம்' மற்றும் 'துணை, இணை, களத்திரம்' என்ற இரு ஆதிபத்தியங்களைக் கொண்டு நடத்துகிறார். இந்தக் காலம் என்ற சூழலுக்குள் கட்டுப்படும் அனைத்து ஜீவர்களும்... 'சுக்கிர பகவானின்' கட்டுக்குள் இருந்து விடுபட முடியாது தவித்துப் போகிறார்கள்.
தாங்கள் 'பிறந்த குடும்பம்' ஒரு புறம்... தாங்கள் 'அமைத்துக் கொள்ளும்' குடும்பம் மறுபுறம்... என இந்த இரண்டு சூழல்களுக்குள் இருந்து யாரால்தான் தங்களை விடுவித்துக் கொள்ள முடியும்...? இதைத்தான்... 'இரு மாராகாதிபதிகள் கொல்லான்' என்று வருணித்தார்கள்.
நாம் 'பிறந்த குடும்பத்தின் தொடர்புகளும்'... அதனால் 'உருவாகும் பற்றுகளும்'... வாழ்வில் ஒரு நிலையில் தாமாக அற்றுப் போய்விடும். காலம் அந்த நிகழ்வை இயற்கையாகவே நடத்தி விடும். ஆனால், நாம் 'ஏற்படுத்திக் கொள்ளும் தொடர்புகளும்'... அதிலிருந்து 'விளையும் பற்றுகளும்' நம் வாழ்வின் இறுதிவரை வந்து... நம்மை 'பந்தத்தில்' ஆழ்த்தி விடுவதைத்தான்... 'இரு மாராகாதிபதிகள் கொல்லான்'... என்ற சொற்றொடர்... விளக்குகிறது.
காலம் ஏற்படுத்திக் கொடுக்கும் இந்த 'சுக்கிர பகவானின்' சூழல்... ஜீவர்களுக்கு ஒரு சவால்தான். இந்த வலைப் பின்னல்களில் இருந்து 'ஜீவன் விடுபட்டால்'... அதற்கு 'ஒரு பெரு வாழ்வு' காத்துக் கொண்டிருக்கிறது. காலம்... 'சுக்கிர பகவானின்' மூலம் விரிக்கும் இந்த வலையில் 'சிக்கிக் கொண்டால்'... 'குறுகிய வாழ்வின்' பிடியில் இருந்து தவிக்க வேண்டியிருக்கிறது.
இந்த 'சுக்கிர பகவானின்' அமைவுக்குள்ளும்... ஒரு நுட்பமான சூட்சுமத்தை வைத்திருக்கிறது காலம். அதை 'கால புருஷ இராசியில்'... 'புத பகவானுடன்'... இந்த 'சுக்கிர பகவான்' ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு 'தொடர்பிலிருந்து' அறிந்து கொள்ளலாம். அது 'சுகமும்'... 'புத்தியும்' என்ற இணைப்பின் மூலம் ஆய்வு செய்யலாம்.
அந்த ஆய்வை 'புத பகவானின்' கால புருஷ இராசியின் விளக்கத்திற்கு பின் காணலாம்.
காலத்தின் வழியெ தொடர்ந்து பயணிப்போம்.

No comments:
Post a Comment